ரியாலிட்டி ஷோவில் நடந்த விபத்து.. சுயநினைவை இழந்த சிம்பு பட நடிகை! இவருக்கா இப்படி ஆகணும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில நடிகைகள் சினிமாவில் ஒரு சில நிமிடங்கள் வந்தாலும் அந்த கேரக்டர் மூலம் ரசிகர்கள் மனதில் அப்படியே பதிந்து விடுவார்கள். அப்படித்தான் சிம்புவின் வானம் படத்தில் பணக்கார பெண்ணாக வந்து கவனத்தை ஈர்த்தவர் ஜாஸ்மின் பாசின். தமிழில் அறிமுகமான அவர் அதற்கு பிறகு இந்தி சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். ஆனால் இப்போது அவர் பகிர்ந்து இருக்கும் ஒரு சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றபோது ஏற்பட்ட விபத்தில் தலையில் ஏற்பட்ட காயத்தால் அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களில் ஒரு பகுதி அவருடைய நினைவில் இல்லையாம். மருத்துவர்கள் 72 மணி நேரம் முழுமையாக ஓய்வெடுக்க சொல்லி இருக்கிறார்கள். ஜாஸ்மின் தற்போது கத்ரோன் கே கில்லாடி 15 நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நிலையில் அங்கு தனக்கு நேர்ந்த பயங்கரமான அனுபவத்தை பற்றி ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Simbu actress Accident

சிம்புவின் காதலி

ஜாஸ்மின் பாசின் என்ற பெயர் இன்று இந்தி சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிகமாக தெரிந்திருக்கலாம். ஆனால் அவரது திரை பயணம் ஆரம்பித்தது தமிழில் தான். 2011 ஆம் ஆண்டு வெளியான சிம்பு, அனுஷ்கா, பரத் உள்ளிட்டோர் நடித்த வானம் படம் தான் அவருடைய முதல் திரைப்படம். அதில் சிம்பு காதலிக்கும் பணக்கார பெண்ணாக ஜாஸ்மின் நடித்திருந்தார்.

படத்தில் அவருக்கு பெரிய அளவிலான காட்சிகள் இல்லாவிட்டாலும் அவருடைய தோற்றமும், நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக சிம்பு அவரை பார்த்து பாடும் "எவண்டி உன்ன பெத்தான்" பாடல் அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. அந்த ஒரு படத்திற்கு பிறகு ஜாஸ்மின் தமிழில் தொடர்ந்து பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் தென்னிந்தியாவில் பிறமொழி படங்களில் நடித்திருந்தார். பின்னர் அவரது பயணம் முழுமையாக இந்தி சின்னத்திரை பக்கம் திரும்பியது.

சின்னத்திரை பிரபலம்

வானம் படத்திற்கு பிறகு இந்தி தொலைக்காட்சியில் களமிறங்கிய ஜாஸ்மினுக்கு தில் சே தில் தக் சீரியல் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதுபோல பிக் பாஸ் 14 நிகழ்ச்சியில் அவர் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியும் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தது. அதுபோல காத்ரோன் கே கில்லாடி நிகழ்ச்சியில் ஏற்கனவே கலந்து கொண்டிருக்கிறார். இப்போது அதே நிகழ்ச்சியில் 15 வது சீசனில் அவர் மீண்டும் கலந்து கொண்டிருக்கிறார்.

சாகச நிகழ்ச்சியில் எவ்வளவு ஆபத்தான ஸ்டண்ட் ஆக இருந்தாலும் அதை துணிச்சலாக எதிர்கொள்வது போட்டியாளர்களுக்கு வழக்கம். ஆனால் ஜாஸ்மினுக்கு நேர்ந்த சம்பவம் எதிர்பாராததாக மாறிவிட்டது. தண்ணீர் மற்றும் காற்று தொடர்பான ஒரு கடினமான டாஸ்கில் பங்கேற்றபோது அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு பிறகு நடந்த விஷயங்கள் முழுவதும் ஜாஸ்மினுக்கு நினைவில் இல்லையாம்.

எதிர்பாராத விபத்து

ஸ்டாண்ட் முடிந்த பிறகு உடனடியாக என்ன நடந்தது என்பது எனக்கு நினைவில் இல்லை. அந்த அனுபவத்தின் ஒரு பகுதியை இன்று வரை என் நினைவில் இல்லை என்று அவர் கூறி இருக்கிறார். மருத்துவர்கள் பரிசோதித்த போது அவருக்கு mild concussion எனப்படும் லேசான மூளை அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 72 மணி நேரம் முழுமையாக ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

ஜிடி நாயுடு படத்தை இயக்கியவர் யார் தெரியுமா? சிம்பு பட காமெடி நடிகர்! இத்தனை வருடம் கழித்து செம கம்பேக்
இதை கேட்டாலே அந்த இடத்தில் ஜாஸ்மினுக்கும் அவரை சுற்றி இருந்தவர்களுக்கும் எவ்வளவு பதற்றமாக இருந்து இருக்கும் என்பது புரிந்து கொள்ள முடிகிறது. அந்த சம்பவம் தன்னை உணர்வு பூர்வமாக மிகவும் பாதித்ததாகவும், அந்த நேரத்தில் தன்னை பற்றி நிறைய கற்றுக் கொடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

Simbu actress Accident

நெகிழ்ச்சியான வார்த்தை

நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரோகித் ஷெட்டி, நிகழ்ச்சி குழுவினர், பாதுகாப்பு குழு மற்றும் மருத்துவர்கள் தன்னை முழுமையாக கவனித்துக் கொண்டார்கள் என்றும் ஜாஸ்மின் கூறியிருக்கிறார். இப்போது அவர் அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வந்திருந்தாலும் அந்த சமயத்தில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் அப்போது நடந்த தன்னுடைய அனுபவங்கள் குறித்து வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+