For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த நாள்...கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு வேற மாதிரி வரும்...சிம்புவை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

சென்னை: எப்பா முடியலடா என்று சொல்லும் அளவிற்கு நெட்டிசன்கள் தற்போது வித்தியாசமாக சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்களை பரப்பி வருகின்றனர்.

சிலம்பரசன் இன்று கௌரவ டாக்டர் பட்டம் பெற்று இருக்கும் தருணத்தில் இப்படி ஒரு மீம்ஸ்களை பரப்புவார்கள் என்று அவர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.

என் மகள் நாட்டுக்கு பதக்கங்கள் பெற்று தந்தார்.. நீங்க என்ன செய்தீங்க சித்தார்த்? சாய்னா தந்தை கேள்வி என் மகள் நாட்டுக்கு பதக்கங்கள் பெற்று தந்தார்.. நீங்க என்ன செய்தீங்க சித்தார்த்? சாய்னா தந்தை கேள்வி

திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்

திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்

சென்னையில் நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. எம்ஜிஆர், சிவாஜி, கமல் போன்றோர் வரிசையில் தற்போது சிம்புவும் இப்பட்டத்தை பெற்றிருக்கிறார். சினிமா துறையில் கலை சேவையை பாராட்டி சாதனை புரிந்தவர்களுக்கு கொடுக்கப்படும் கவுரவ டாக்டர் பட்டத்தை இன்று வேல்ஸ் நிறுவனம் சிம்புவுக்கு வழங்கியுள்ளது. இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் சிலம்பரசன், சினிமாத்துறையில் ஆட்சி இருக்கும் பங்களிப்பை சிறப்பிப்பதற்க்காக இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் கலைமாமணி விருதினை ஏற்கனவே பெற்றுள்ள நிலையில் தற்போது டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

இளைஞர்களை கவர்ந்த திறமை

இளைஞர்களை கவர்ந்த திறமை

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தன்னுடைய அடுக்குமொழி வசனங்களால் குழந்தைகளை மட்டுமல்லாமல் இளைஞர்கள் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையம் ரசிகர்களாக கொண்ட சிம்பு தொடர்ந்து தன்னுடைய திறமையை திரையுலகத்தில் காட்டிக் கொண்டு வருகிறார். இவருடைய நடன திறமையையும், அடுக்குமொழி வசனத்தையும் இன்றைய இளைஞர்கள் அதிகமாக ரசித்து வருகின்றனர். அதனாலே அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

வாழ்த்து மழையில் சிம்பு

வாழ்த்து மழையில் சிம்பு

முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பல்கலைக்கழகம் நடிகர் சிலம்பரசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்திருந்தது. பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பலருக்கும் இதுபோல் கவுரவ டாக்டர் பட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது சிம்பு இன்று இந்த பட்டத்தை பெற்று இருக்கும் நிலையில், இவருக்கு வாழ்த்து சொல்லி ரசிகர்களும் திரைத்துறையினரும் வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில் எப்போதும்போல சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் நெட்டிசன்கள் சிம்பு பட்டம் பெற்றிருக்கும் இந்த நாளை குறிப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.

இன்னைக்கு என்ன தேதி

இன்னைக்கு என்ன தேதி

11.01.2022 எனும் இந்த நாளை கூட்டினால் வரும் எண் என்ன??என்று சாமி பட விக்ரம் கேட்பதுபோல தற்போது மீம்ஸ்களால் கலாய்த்து வருகின்றனர். எந்த ஒரு இடத்திலும் சிம்பு பேசுவதை கலாய்த்து வரும் நெட்டிசன்கள், தற்போது இவர் வெற்றி பெற்ற நாளை கூட விடாமல் கலாய்த்து வருகின்றனர். அப்படி இப்படி கூட்டிப் பார்த்தாலும் ஒன்பது வந்தால் போதும் என்று நினைத்து விட்டார்கள் போல, அதனால்தான் இப்படி எல்லாம் கலாய்த்து வருகிறார்கள் என்று சிம்புவின் ரசிகர்களும் கூறிவருகின்றனர்.

English summary
Netizens are now spreading memes on the social networking site differently to the extent of saying how can not.He would not have even imagined that such a meme would be spread by the time Silambarasan received his honorary doctorate today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X