Simbu: கல்யாணம் எப்போ என்ற பிரியங்கா! நீங்க ஒழுங்கா இருக்கீங்களா? 120 முடிஞ்சிடுச்சி! சிம்பு தக் லைஃப் பதில்!
சென்னை: நடிகர் சிம்பு நிகழ்ச்சி ஒன்றில் கெஸ்டாக கலந்து கொண்டார். அப்போது விஜே பிரியங்கா சிம்புவிடம், நீங்க எப்போது கல்யாணம் பண்ண போறீங்கன்னு ரசிகர்கள் கேட்க சொன்னதாக கேட்க, அதற்கு சிம்பு தக் லைஃப் பதிலடி கொடுத்திருக்கிறார். இதுதான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அடி எடுத்து வைத்து இப்போது டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு 90ஸ் கிட்ஸ்கள் பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். இப்போ உள்ள 2 கே கிட்ஸ்கள் கூட சிம்புவிற்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். அதே போல எந்த மேடை நிகழ்ச்சிகளில் சிம்பு பேசினாலும் தன்னுடைய ரசிகர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.

சிம்பு இப்போது ஒரு நிகழ்ச்சியில் கெஸ்ட்டாக கலந்து கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசும்போது கூட தன்னுடைய ரசிகர்கள் தான் தனக்கு பலம் என்று பேசி இருக்கிறார். சிம்பு பேசும்போது, பொதுவாக எல்லாருக்கும் நல்ல நண்பர்கள் தான் துணையாக இருப்பாங்க. நாம கஷ்டப்படும் நேரத்தில் அவங்க தான் தோள் கொடுப்பாங்க அப்படிப்பட்ட நண்பர்களை கஷ்டப்படும் நேரத்தில் புரிந்து கொள்ள முடியும். ஆனால் எனக்கு எல்லா கஷ்டத்திலும் தோள் கொடுப்பது ரசிகர்களாகிய நீங்கள் தான்.
நான் எப்போதெல்லாம் உடைந்து போய் இருக்கிறேனோ அப்போ எனக்கு உங்களுடைய சப்போர்ட் தான் அதிகமாக இருந்திருக்கு. அதனால எனக்கு எப்பவுமே நீங்க தான் பெஸ்ட் என்று சொல்லி இருந்தார். அதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த பிரியங்கா, சார் நீங்க எப்போ கல்யாணம் பண்ண போறீங்கன்னு எல்லாரும் கேக்குறாங்க என்று சொன்னதும், சிம்பு தனக்கே உரிய பாணியில் ஏற்கனவே எனக்கு 120 க்கு மேல கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க... எல்லாமே நடக்கும் போது நடக்கும் என்று சொல்லியிருந்தார்.
அதற்கு பிரியங்கா சார் சமீபத்தில் ஒரு ரீல்ஸ் வைரலாட்சி நீங்க பார்த்தீங்களான்னு தெரியல, அதில் நான் உட்பட பலருடைய போட்டோவை போட்டு இவங்க எல்லாம் வாழ்க்கையில் மூவ் ஆகிட்டாங்க ஆனா நீ எப்ப மூவாகப் போறேன்னு ஒருத்தங்க கேட்டாங்க, அதற்கு அந்த நபர் என்னுடைய தலைவன் மூவ் ஆனா தான் நான் ஆகுவேன்னு சொல்லுறாரு. அதனால தான் ரசிகர்கள் சார்பாக நீங்க எப்ப மூவ் ஆகப் போறீங்க என்று கேட்கிறேன் என மீண்டும் பிரியங்கா கேட்கிறார்.
பிரியங்கா கேட்டதும் சிரித்துக் கொண்டே சிம்பு, நாம தனியா இருக்கிறோமா? இன்னொருத்தவங்க கூட இருக்கிறோமா என்பது முக்கியமில்ல. நாம நல்லவங்களா இருக்கிறோமா? உண்மையாக இருக்கிறோமா? அடுத்தவங்களை கஷ்டப்படுத்துறாம இருக்குறோமா என்பது தான் முக்கியம். வாழ்க்கையில் கல்யாணம் என்பது எல்லாம் நடக்கும் போது நடக்கும். அதையே பேசி ஒன்னும் ஆகப் போறது இல்ல என்று தக் லைஃப் பதிலடி கொடுத்திருக்கிறார்.
சிம்பு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, "லூசு பெண்ணே லூசு பெண்ணே" என்ற பாடலையும் சிலம்பரசன் பாடி இருந்தார். சிம்பு தற்போது ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். அதே நேரத்தில் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலகலப்பாக பேசியது அவருடைய ரசிகர்களுக்கு எனர்ஜியை கொடுத்திருக்கிறது. சர்ச்சைக்கும், சிம்புவுக்கும் அதிகமான ஒற்றுமை உண்டு. அடிக்கடி அவரை பற்றி பல சர்ச்சைகள் பரவி வருகிறது, ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கூலாக இவர் பேசுவதை தான் இவருடைய ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications