சிம்ரனுக்கு வந்த நிலை யாருக்கும் வர கூடாது! நள்ளிரவில் குழந்தைகளுடன் நடுத்தெருவில் நின்ற கனவுக்கன்னி
சென்னை: முன்னணி நடிகையான சிம்ரன் ஒரு முறை தனது இரு குழந்தைகளுடன் நடுத்தெருவில் நின்ற போது தயாரிப்பாளர் தாணுவிடம் உதவி கேட்டதாகவும் அர்த்த ராத்திரியாக இருந்தாலும் அவர் யார் யாரையோ தொடர்பு கொண்டு உதவியதாகவும் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
1990களில் பலரது கனவுக்கன்னியாக இருந்தவர் சிம்ரன். விஐபி என்ற படத்தில் அறிமுகமான இவர், அதைத் தொடர்ந்து விஜய், அஜித், கமல்ஹாசன், சூர்யா, ரஜினி உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.

முதல்முறையாக சிம்ரனுக்குத்தான் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டதாக தகவல்கள் சொல்கின்றன. நடனம், நடிப்பு, என எல்லாவற்றிலும் கலக்கியவர் சிம்ரன். இவர் ஆடிய ஆல் தோட்ட பூபதி பாடலை இன்னும் யாராலும் மறக்க முடியாது.
நகைச்சுவை, சென்டிமென்ட், காதல், கோபம் உள்ளிட்ட அத்தனை ரசங்களையும் சிறப்பாக காட்டக் கூடியவர். தற்போது அவருக்கு 48 வயதாகிறது. ஆனால் அப்போது பார்த்தது போல் இப்போதும் இருக்கிறார். நதியா போல் சிம்ரனும் தனது உடலை பராமரித்து வருகிறார்.
இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார். அது போல் கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்காகவும் இவர் பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார். மும்பையைச் சேர்ந்த சிம்ரன், தீபக் பக்கா என்பவரை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர் அண்மையில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் அண்மையில் அவள் விகடன் சார்பில் எவர்கிரீன் நடிகைக்கான விருது பெற்றார். அந்த விருதை அவருக்கு தயாரிப்பாளர் தாணுவும், இயக்குநர் வசந்தும் வழங்கினார்கள்.
அப்போது தாணு, தனது விஐபி படத்தில் சிம்ரன் எப்படி நடிக்க வந்தார் என்பதை கூறியிருந்த நிலையில் பிறகு ஒரு சம்பவத்தை சிம்ரனின் அனுமதியுடன் சொன்னார். அவர் கூறுகையில், ஒரு முறை நள்ளிரவு 2.44 மணி இருக்கும். அப்போது எனக்கு ஒரு பிரைவேட் எண்ணில் இருந்து போன் வந்தது.
அப்போது நான் எடுக்கவில்லை. உடனே "நான்தான் சிம்ரன், எனக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது" என எனக்கு மெசேஜ் அனுப்பினார். உடனே அந்த எண்ணுக்கு நான் திரும்பியும் அழைத்தேன். அப்போது என்னாச்சும்மா என கேட்ட போது, "சார் நான் குழந்தைகளுடன் லண்டனுக்கு வந்திருக்கிறேன்.
அங்கு ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தேன். ஆனால் தற்போது நேரம் முடிந்துவிட்டதால் ஹோட்டல் அறையை எக்ஸ்டென்ட் செய்ய முடியாது என கூறி என்னை இப்போதே காலி செய்யுமாறு கூறுகிறார்கள். இந்த நேரத்தில் நான் குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என தெரியவில்லை. நீங்கள் ஏதாவது உதவ முடியுமா" என கேட்டார்.
அப்போது நான் உதவுவதாக கூறிவிட்டு பணம் ஏதாவது தேவையாம்மா என கேட்டேன். அதற்கு அவர் அதெல்லாம் வேண்டாம் சார் என்னிடம் இருக்கிறது, தங்குவதற்கு மட்டும் ஏற்பாடு செய்தால் போதும் என்றார். பிறகு லண்டனை சேர்ந்த ஒருவருக்கு போன் செய்தேன். அவர் அமெரிக்கா சென்றுவிட்டதாக கூறினார்.
பிறகு வேறொருவருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன். அவர் தான் லண்டனில்தான் இருப்பதாக கூறி சிம்ரனின் நம்பரை கேட்டு வாங்கிக் கொண்டு அவருக்கு உதவினார். டாப் ஸ்டாராக இருந்த போதிலும் முதல் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் என்னை மறக்காமல் எனக்கு சிம்ரன் போன் செய்தது எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றார்.
பின்னர் சிம்ரன் பேசுகையில், அந்த நேரத்தில் என் குழந்தைகளுடன் நான் நின்ற போது அவர் மட்டும் உதவி செய்யவில்லை என்றால் நான் எங்கு தங்கியிருப்பேன். மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும் என உருக்கமாக தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications