Good Bad Ugly: கேமியோவா தான் கூப்பிட்டாங்க! ஆனால், இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல! சிம்ரன் திடீர் பதிவு
சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அட்லி திரைப்படம் நேற்று முன்தினம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் கேமியோ கேரக்டரில் நடிகை சிம்ரன் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த திரைப்படம் குறித்து அவர் வெளியிட்ட பதிவு அதிகமான கருத்துக்களைப் பெற்று வருகிறது.
சில மாதங்களாகவே தியேட்டரில் வெளியாகும் திரைப்படங்கள் பெரிய அளவில் மக்கள் மத்தியில் ஹிட் அடிக்கவில்லை. அதுவும் பெரிய எதிர்பார்ப்போடு வரும் படங்கள் எல்லாம் புஸ் என்று போய்விடுகிறது. ஒரு சில திரைப்படங்கள்தான் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்த அமரன் மற்றும் டிராகன் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் இப்போது நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படமும் இணைந்து இருக்கிறது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. அதுபோல நடிகர் பிரபுவின் மருமகனான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஆதித் ரவிச்சந்திரன் அஜித்குமாரின் தீவிரமான ஃபேன் மொமென்ட் காட்டி இருக்கிறார். இதை பலரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் அஜித்தின் விண்டேஜ் காட்சிகள் பலருடைய ஃபேவரைட் ஆக இருக்கிறது. சோஷியல் மீடியாக்களிலும் இந்த வீடியோக்கள் வைரலாகி கொண்டு இருக்கிறது.
நன்றி தெரிவித்த சிம்ரன்
இந்த திரைப்படத்தில் பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரியா வாரியர், யோகி பாபு, சிம்ரன் உட்பட பலரும் நடித்திருக்கிறார்கள். ஆனால் திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த திரிஷாவை கேமியோ ரோலில் வந்த சிம்ரன் ஓவர்டேக் செய்திருக்கிறார். சிம்ரனின் "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" பாடல் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருப்பது அவருக்கு பூஸ்ட்டாக இருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவத்து சிம்ரன் பதிவு வெளியிட்டிருக்கிறார்.
சிம்ரன் பதிவு
அதில் "நான் கேமியோவாக தான் வந்தேன். அனைவரின் அன்புடன் வெளியேறுகிறேன். மீண்டும் அஜித் அவர்களுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. இந்த குட் பேட் அக்லி படம் நல்ல பயணமாக அமைந்ததில் பட குழுவினருக்கும் தியேட்டரில் பிளாஸ்டராக படத்தை கொண்டாடும் ரசிகர்களுக்கும் நன்றி" என்று தெரிவித்திருக்கிறார்.
சோசியல் மீடியா போஸ்ட்
குட் பேக் அக்லியில் ஒரு சீனிலேயே சிம்ரனுக்கு க்ளாப்ஸ் அள்ளுகிறது. அவருடைய மாசான என்ட்ரி அந்தப் படத்துக்கு கதாநாயகியாகி திரிஷாவுக்கு கிடைக்கும் பாராட்டை விட அதிகமாக இருக்கிறது. சோசியல் மீடியா பக்கங்களிலும் திரிஷாவை விடவும் சிம்ரன் மற்றும் பிரியா வாரியார் காட்சிகள் குறித்து அதிகமாக எழுதப்பட்டு வருகிறது. நேற்று த்ரிஷா சோசியல் மீடியா பக்கங்களில் தன்னை விமர்சிப்பவர்கள் குறித்து கோழைகள் என போஸ்ட் போட்டிருந்தார்.
சிம்ரன் நடித்த திரைப்படங்கள்
இந்த நிலையில் இன்று சிம்ரன் தனக்கு கிடைக்கும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்ததற்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். சிம்ரன் தமிழில் ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்பு தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நட்புக்காக, ரமணா, பஞ்சதந்திரம், நியூ, வாரணமாயிரம் உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதே உடை
அதிலும் அஜித்துடன் உன்னை கொடு என்னைத் தருவேன், வாலி, அவள் வருவாளா போன்ற ஹிட் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு இப்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் இவருடைய ரீஎன்ட்ரி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதுபோல சிம்ரன் இந்த திரைப்படத்தில் கில்பில் படத்தில் உமா தர்ஷன் அணிந்து நடித்த மஞ்சள் நிற உடையை குட் பேட் அக்லியில் சிம்ரன் அணிந்து கொண்டு வந்ததும் ரசிகர்கள் சொக்கிப் போய் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications