சன் டிவி சீரியல் நடிகரை காதலிப்பதாக அறிவித்த, விஜய் டிவி சீரியல் நடிகை.. போஸ்ட் எல்லாம் வித்தியாசமா இருக்கே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிந்து பைரவி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஆர்த்தி சுபாஷ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்கும் நடிகரை காதலிப்பதாக வீடியோவுடன் அறிவித்திருக்கிறார். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பொதுவாக சின்னத்திரையில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிய கதை கிடையாது. அந்த வரிசையில் இப்போது நடிகை ஆர்த்தி சுபாஷ் இணைந்து இருக்கிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியலில் கதாநாயகனாக நடித்த பவன் ரவீந்தராவை காதலிக்கிறாராம். இவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன்பே தங்களுடைய காதலை இன்ஸ்டாகிராம் லைவில் தெரிவித்திருக்கிறார்கள்.

காதலிக்கும் சீரியல் நடிகை
அதை தொடர்ந்து நேற்று பவன் ரவீந்திரரின் பிறந்தநாளுக்கு அவருடன் எடுத்த வீடியோவை ஆர்த்தி சுபாஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் இருவரும் விரல்களை பிடித்தபடி க்யூட்டாக வீடியோ எடுத்திருக்கிறார்கள். அந்த பதிவில் ஆர்த்தி சுபாஷ், "பவனின் இந்த பிறந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்
ஆர்த்தி சுபாஷ் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்திருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் தான் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அந்த சீரியல் பல வருடங்கள் ஒளிபரப்பாகி வந்தது. அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது youtube வெப் தொடரில் நடித்து வந்த ஆர்த்தி சுபாஷ் பாண்டவர் இல்லம் சீரியல் முடிவு அடைந்த நிலையில் விஜய் டிவியில் வீட்டுக்கு வீடு வாசல் படி என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார்.
விஜய் டிவி சீரியல்
வீட்டுக்கு வீடு வாசல் படி சீரியலில் இவர்தான் வில்லியாக நடித்து வந்தார். அதனால் இவரை பலரும் திட்டி தீர்த்து வந்தனர். அந்த சீரியல் யாரும் எதிர்பார்க்காத நிலையில் சில மாதங்களில் திடீரென்று முடிவுக்கு வந்துவிட்டது. அந்த நேரத்தில் விஜய் டிவியில் சிந்து பைரவி சீரியலில் இவர் கமிட்டாகி இருந்தார். சிந்து பைரவி சீரியலில் ஆரம்பத்தில் நடிகை ரவீனா தான் கமிட்டாகி இருந்தார். ஆனால் அவர் சீரியல் ஒளிபரப்பாவதற்கு முன்பே அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். இதனால் அந்த கேரக்டரில் ஆர்த்தி சுபாஷ் நடித்த வந்தார்.

ஆர்த்தி சுபாஷ் மனமாற்றம்
இப்போது இவருடைய கேரக்டர் அந்த சீரியலில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஆர்த்தி சுபாஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பேட்டியில் கலந்து கொண்ட போது அவருடைய தந்தை ஆர்த்தி சுபாஷை நாங்கள் திருமணம் செய்து கொள்ள சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர் அதற்கு விருப்பமில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று வருத்தத்துடன் பேசிக்கொண்டு இருந்தார்.
சிந்து பைரவி சீரியல்
இப்போது சீரியல் நடிகரை காதலிக்கும் ஆர்த்தி சுபாஷுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். சிந்து பைரவி சீரியல் கதை அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகி கதாநாயகனை ஏமாற்றி திருமணம் செய்து கொள்கிறார். கதாநாயகன் தாலி கட்டாமலேயே இவர்தான் எனக்கு தாலி கட்டினார் என்று மொத்த குடும்பத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இதனால் இந்த சீரியலின் கதாநாயகி கேரக்டர் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. ஆனாலும் இப்போது கதை பாசிட்டிவாக நகர தொடங்கி இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications