Singapenne Serial: சிங்க பெண்ணே சீரியல் அன்புக்கு கல்யாணம்! மனைவி யார் தெரியுமா? இந்த விஜய் டிவி நடிகை தான்!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் தான் டிஆர்பியில் டாப் 3 இடங்களுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அன்பு கேரக்டரில் நடிகர் அமல்ஜித் நடித்து வருகிறார். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். இது குறித்து அமல் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
பொதுவாக சீரியல்களில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்பவர்களை பார்த்திருப்போம். அதேபோலத்தான் நடிகர் அமலும் தன்னுடன் சீரியலில் நடித்த நடிகையை தான் காதலித்து வருகிறாராம். இவர்கள் இருவருக்கும் தான் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். அமல் சமீபத்தில் சிங்க பெண்ணே சீரியல் மூலமாக சின்னத்திரை ரசிகர்களின் மனதில் அனுதாபத்தை பெற்று இருக்கிறார்.

அன்பு தம்பி பாவம்... இந்த ஆனந்தி அன்பு தம்பி வைத்திருக்கும் காதலை புரிஞ்சுக்க மாட்டேங்கிறதே.. என்று பல கமெண்ட்டுகள் வருகிறது. அந்த அளவிற்கு அன்பு கேரக்டராகவே அமல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். இவர் இதற்கு முன்பு அம்மன் என்ற சீரியலில் நடித்திருந்தார். இந்த சீரியலும் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. ஆனால் அதற்கு முன்பு இவருக்கு சீரியல் மட்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் தான் அலைந்து கொண்டு இருந்திருக்கிறார்.
ஆரம்பத்தில் கேட்டரிங் சர்வீஸ் மற்றும் புட் டெலிவரி வேலை எல்லாம் பார்த்து எப்படியாவது சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிட வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்ட அமலுக்கு அம்மன் சீரியல்தான் ரசிகர்கள் மத்தியில் அங்கீகாரத்தை கொடுத்தது. அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த பவித்ராவை தான் காதலிக்க தொடங்கினாராம். முதல் சீரியலில் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் அடுத்த வருடத்தில் இவர்கள் திருமணம் செய்ய இருப்பதாக அமல் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.
பவித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பான கண்ணே கலைமானே என்ற சீரியலிலும் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவை பூர்விகமாக கொண்ட அமல் முதலில் மலையாள சீரியல்களில் நடித்து வந்தாலும் இப்போது சிங்க பெண்ணே சீரியல் மூலமாக ரசிகர்கள் தனக்கு கொடுத்த அன்பைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
அதிலும் அம்மன் சீரியல் முடிவடைந்த பிறகு சில மாதங்களாக தான் வாய்ப்பு இல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகவும், அப்போது கூட பவித்ரா தான் தன்னை முழுமையாக கவனித்துக் கொண்டார் என்றும் கூறியிருக்கிறார். அதோடு ஒரு சீரியலில் நீங்கதான் ஹீரோ என்று கமிட் செய்து விட்டார்கள் அதற்காக நானும் 40 ஆயிரத்திற்கு மேலே காஸ்ட்டும் எல்லாம் வாங்கி விட்டேன்.

ஆனால் சூட்டிங் தொடங்குவதற்கு முதல் நாள் முன்பு கால் பண்ணி சேனல் தரப்பில் இருந்தே ஒரு ஹீரோவை கொண்டு வந்துட்டாங்க நீங்க வேண்டாம் தம்பின்னு சொல்லிட்டாங்க அதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்றம் தெரியுமா? அந்த ஏமாற்றம் வலி எல்லாம் இப்போ சிங்க பெண்ணே சீரியல் மூலமா காணாம போயிடுச்சு என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி இருக்கிறார்.
அமல் அடிக்கடி பவித்ராவுடன் புகைப்படங்கள் வெளியிட்டு வருவதை பார்க்கும் போது இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இவர்கள் இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் கூட அம்மன் சீரியல் புகைப்படங்கள் என்று தெரிகிறது. அதோடு அடுத்த வருடத்தில் தான் திருமணம் செய்யப் போகிறோம் என்றும் அமல் பேசி இருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications