“சிங்கப் பெண்ணே” சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்தது.. புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான பதிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில் மகேஷ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தர்ஷக் தனக்கு குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சி செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்துஇருக்கிறார். அதோடு தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டு குழந்தை குறித்து சில நெகிழ்ச்சியான வார்த்தைகளையும் பகிர்ந்து இருக்கிறார்.
சன் டிவியில் டிஆர்பியில் முதல் இடத்தை சிங்க பெண்ணே சீரியல் தொடர்ச்சியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கிராமத்தில் இருக்கும் ஆனந்தி தன்னுடைய குடும்ப சூழ்நிலையால் நகரத்திற்கு வந்து வேலை செய்யும் இடத்தில் படும் கஷ்டங்கள், காதல், நட்பு என்று கலவையாக இந்த சீரியல் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் மகேஷ், அன்பு மற்றும் ஆனந்தியின் முக்கோண காதலை மையமாகக் கொண்டு இந்த சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் ஆனந்தி அழகனை காதலித்துக் கொண்டிருக்கும் நிலையில் அழகன் யார் என்ற உண்மை தெரிய வருமா? என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது.
அன்பு அழகனாக நடித்துக் கொண்டிருப்பதை தெரிந்து கொண்ட வில்லி ஒரு ஆளை செட் பண்ணி ஆனந்தியை மகேஷ் வாழ்க்கையில் இருந்து விலக்கிவிட பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் மகேஷ் தன்னுடைய காதலை ஆனந்தியிடம் சொல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக கதை போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் மகேஷ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தர்ஷக்கு சமீபத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

அதாவது நடிகர் தர்ஷக், ஷில்பா என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தன்னுடைய மகனின் புகைப்படத்தை தர்ஷக் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு அந்த பதிவில் நாங்கள் எதிர்பார்த்திருந்த நிகழ்வு இறுதியாக நடந்து விட்டது.எங்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
என்னுடைய குழந்தையும், எங்கள் குழந்தையும் நன்றாக இருக்கிறார்கள். உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றி... என்று குறிப்பிட்ட தர்ஷக் அதோடு, என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தை நான் தவற விட்டேன். அது இன்னொரு நாளுக்கான கதை... இரண்டு நாட்கள் தாங்க முடியாத வேதனையான காத்திருப்புக்குப் பிறகு என்னுடைய அப்பாவாக என்னுடைய மகன் வீட்டிற்கு வந்து விட்டார்.

என்னுடைய மகளும் மனைவியும் நன்றாக இருக்கிறார்கள் என்று அந்த பதிவில் தர்ஷக் கூறி இருக்கிறார். இதற்கு அவரோடு சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications