ரத்த வெள்ளத்தில் துடித்த நபர்.. துணிந்து உயிரை காப்பாற்றிய சூர்யா.. அந்த வார்த்தை சொன்னாரு! - க்ரிஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஒரு நபரை நடிகர் சூர்யா காப்பாற்றிய பரபரப்பான நிமிடங்கள் குறித்து பாடகரும் நடிகருமான க்ரிஷ் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா ஆரம்பத்தில் குடும்ப பாங்கான திரைப்படங்களில் அதிகமாக நடித்து வந்தார். ஆனால் இப்போது ஆக்சன் கலந்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய எதிர்பார்ப்போடு வெளியான கங்குவா திரைப்படம் தோல்வி அடைந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.

surya krish

இதைத்தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ரெட்ரோ படத்தில் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது. ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகு சூர்யாவை சமூக வலைத்தளத்தில் பலரும் ட்ரோல் செய்து வருவதை பார்க்க முடிகிறது. தங்களுடைய கோபத்தை சூர்யாவின் மீது காட்டி அவரை அதிகமாக விமர்சித்து வருகிறார்கள்.

கங்குவா திரைப்படம் ரிலீஸான போது கூட எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது. அதுபோல சூர்யா மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. அதே நேரத்தில் சூர்யாவோடு நெருங்கி பழகிய பல நடிகர்கள் அவர் பற்றி பல விஷயங்களை பெருமையாக பேசி வருவதையும் பார்க்க முடிகிறது.

surya krish

சமீபத்தில் கூட சமுத்திரக்கனி ஒரு பேட்டியில் பேசும்போது என்னுடைய தம்பி சூர்யா இந்த சமுதாயத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்பவன். பலரை படிக்க வைத்து அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரை சிலர் வேண்டுமென்றே பழி வாங்குகிறார்கள். சூர்யா பீனிக்ஸ் பறவை போல மீண்டும் வருவான் என்று சொல்லி இருந்தார்.

அதுபோல பாடகரும் நடிகருமான க்ரிஷ் சூர்யா பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். சூர்யாவும் பாடகர் கிரிஷும் சிங்கம் 3 திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள். அப்போதுதான் தன் கண் முன்பு சூர்யா ஒரு நபருக்கு உதவியது தன்னை வியப்பில் ஆழ்த்தியது என்று கிரிஷ் சொல்லி இருக்கிறார். அதாவது சிங்கம் 3 ஷூட்டிங் நெல்லூரில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது படபிடிப்பு முடிந்து சூர்யாவும் கிரிஷும் காரில் சென்று கொண்டிருந்தார்களாம்.

அப்போது கிரிஷ் தான் காரை ஓட்டிக் கொண்டு இருந்தாராம். அவர் அருகில் சூர்யா அமர்ந்திருக்கிறார். அப்போது ஒரு குவாரி ஒன்றிலிருந்து வெளியே வரும் வழியில் ரோட்டில் ஒருவர் தலையில் பலத்த அடிப்பட்டு கீழே கிடந்திருக்கிறார் அருகில் ஒரு பெண் அழுது கொண்டிருந்தாராம். பக்கத்தில் சிலர் சுற்றி நின்று சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களாம்

இதை பார்த்ததும் சூர்யா வண்டியை நிறுத்து என்று சொல்லி இருக்கிறார். உடனே வண்டி நிறுத்தபட்டதும் டக்கென்று காரில் இருந்து இறங்கி அந்த அடிபட்ட நபரை நோக்கி ஓடி இருக்கிறார். அப்போது கிரிஷ் காரிலிருந்து கத்தியதை கூட சூர்யா கேட்கவே இல்லையாம். சூர்யா இறங்கி ஓடியதும் பின்னால் வந்த கார்களில் இருந்த உதவியாளர்கள் உட்பட பலர் இறங்கி வந்திருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் சூர்யா ஜாகுவார் பியூர் ஒயிட் நிறத்தில் கார் வைத்திருந்தாராம். அந்த காரில் அடிபட்டவரை மெதுவாக தூக்கி வைத்து ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறார். போகும் வழியிலேயே அவருடைய நண்பர்கள் பலருக்கு போன் அடித்து அந்த பகுதியில் சிறந்த மருத்துவமனை எது என்று விசாரித்து, சிம்ஸ் ஹாஸ்பிடல் திருப்பதியில் இருந்து நான்கு டாக்டர்களை எப்படியோ பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு வரவழைத்து விபத்துக்கு உள்ளான வரை மருத்துவமனையில் சேர்ந்து உயிரை காப்பாற்றினார்.

இதை என்னால் மறக்கவே முடியாது. என் கண் முன்பு நிஜ ஹீரோவாகத்தான் சூர்யா தெரிந்தார் என்று அந்த பேட்டியில் கிரிஷ் கூறியிருக்கிறார். அதோடு இன்னொரு முறை சூர்யாவை பார்க்கும் போது இந்த சம்பவம் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது சூர்யா இந்த மாதிரி எப்படி கண்டுகொள்ளாமல் இருக்க முடியும்? நான் அன்னைக்கு உதவியது போல இன்னொரு நபர் என் தம்பிக்கு உதவவில்லை என்றால் என் தம்பி என்னைக்கும் இறந்து போயிருப்பான் என்று சொன்னாரு.

அதாவது சூர்யாவின் தம்பி கார்த்தி சில வருடங்களுக்கு முன்பு கோடம்பாக்கம் பிரிட்ஜ் அருகில் விபத்தில் அடிபட்டு ரோட்டில் கிடந்த போது அந்தப் பக்கமாக போன யாரோ ஒருவர் பார்த்து தான் இவர் சிவகுமார் மகன் என்று கூறி உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

surya krish

அதனால் தான் கார்த்திக் உயிர் பிழைத்தார். அன்னைக்கு அந்த நபர் அப்படி யோசிக்கவில்லை என்றால் கார்த்தி உயிரோடவே இருந்திருக்க மாட்டார். அதுபோல என்னால முடிஞ்ச ஒரு உதவியை நான் செஞ்சேன் என்று சூர்யா சொன்னார்.

சூர்யா வளர்ச்சி சிலருக்கு பிடிக்கல! திட்டம் போட்டு தோற்கடிச்சுட்டாங்க! பிரபல தயாரிப்பாளர் வருத்தம்
அதற்குப் பிறகு நான் சூர்யா காப்பாற்றிய அந்த நபர் பற்றி விசாரித்து பார்த்தால் விபத்து நடந்த அடுத்த வாரத்தில் அவருடைய மகளுக்கு கல்யாணம் வைத்திருந்தாராம். சூர்யா ஒரு உயிரைக் காப்பாற்றி ஒரு குடும்பத்தின் நிம்மதியையும், சந்தோஷத்தையும் காப்பாற்றினார். அதனால் அவர் மதிக்கப்பட கூடியவர் என்று அந்த பேட்டியில் கிரிஷ் கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+