சூர்யா வளர்ச்சி சிலருக்கு பிடிக்கல! திட்டம் போட்டு தோற்கடிச்சுட்டாங்க! பிரபல தயாரிப்பாளர் வருத்தம்
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் கங்குவா திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்ப்போடு வெளியானது. ஆனால் இந்த திரைப்படத்திற்கு அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் வந்தது. ஆனால் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இது குறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்செழியன் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் சுமார் 38 மொழிகளில் 11 ஆயிரத்து 500 திரையரங்குகளில் வெளியானது. சூர்யாவின் திரை வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத வகையில் மிகப்பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 2000 கோடி வசூல் செய்யும் என்று இந்த திரைப்பட இயக்குனர் ஞானவேல் ராஜா ஆரம்பத்திலேயே நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

இரண்டு வருடங்களுக்கு மேலாக சூர்யா இந்த திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்க வைத்திருந்தது. திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பிரமோஷன் வேலைகளிலும் பட குழுவினர்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டனர்.
அப்போது ஞானவேல் ராஜா பேசும்போது, நிச்சயம் கங்குவா திரைப்படம் உலக அளவில் 2000 கோடி வசூல் செய்யும். இந்த படத்தோடு போட்டியிட யாரும் வரவே மாட்டார்கள். ஒருவேளை முதல் பாகத்தில் கதையின் ஆழம் பற்றி தெரியாமல் யாரேனும் போட்டிக்கு வரலாம். ஆனால் நிச்சயம் கங்குவா இரண்டாவது பாகத்தை வெளியிடும் போது போட்டிக்கு வர மாட்டார்கள் என்று சவால் விடுத்திருந்தார்.
அதுபோல சூர்யாவும் பல மேடைகளில் கங்குவா படத்தைப் பற்றி பெருமையாக பேசுகிறார். ஆனால் இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் இப்ப வரைக்கும் 300 கோடி கூட இன்னும் முழுமையாக வசூல் செய்யவில்லை என்பது அதிர்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது.

இது திரைப்படம் வெளியான முதல் நாளே அதிகமாக சத்தமாக இருக்கிறது, முதல் சில நிமிடங்கள் காட்சிகள் யாருக்கும் புரியவில்லை என்றெல்லாம் செய்திகள் பரவி விட்டது. அதனால் பட குழுவினர்கள் இதற்காக சில மாற்றங்களையும் செய்தனர். ஆனாலும் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இது குறித்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைவர் தனஞ்செழியன் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.
அப்போது சூர்யாவின் வளர்ச்சி பிடிக்காததால் கங்குவாவை இரண்டு பெரிய நடிகர்களுடைய ரசிகர்களும், அதுபோல சூர்யாவின் அரசியல் கருத்து பிடிக்காத இரண்டு பெரிய கட்சிகளும் சேர்ந்து திட்டமிட்டு தோற்கடித்துள்ளதாக கூறியிருக்கிறார். இது குறித்து இணையத்தில் அதிகமான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில், தனஞ்செழியன் குறிப்பிடுவது நடிகர் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்கள்தான் என்று கூறியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications