பிக் பாஸ் பற்றிய ரகசியங்களை உடைத்த பாடகர் அனந்த் வைத்தியநாதன்.. இத்தனை ஏமாற்றம் இருக்கா?
சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் நடுவராக பிரபலமடைந்த பாடகர் அனந்த் வைத்தியநாதன் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சமீபத்தில் பேட்டியில் பேசியிருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் இரண்டில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்த அனந்த் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் நன்மை தீமைகள் பற்றி கூறியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியால் பிரபலமடைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது ஏமாற்றம்தான் தங்களுடைய திறமையும் வேண்டும் என்று அனந்த் கூறி இருக்கிறார்.

அனந்த் வைத்தியநாதன் என்று சொன்னாலே பலருக்கும் பரிட்சயமானவர் தான். இவர் ஒரு பாடகராகவும், நடிகராகவும், ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் இருந்து வந்திருக்கிறார். ஆனால் சமீப காலமாக இவர் எந்த நிகழ்ச்சியிலும் தலை காட்ட வில்லை. இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு youtube சேனல் ஒன்றில் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்.
அதில் தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றி பல தகவல்களை கூறி இருக்கிறார். அதில் பிக் பாஸ நிகழ்ச்சியை பற்றியும் கூறி இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து இவர் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் முதல் சீசன் தொடங்கப்பட்டபோது இவரிடம் எதுவும் கேட்கவில்லையாம். ஆனால் இரண்டாவது சீசனில் இவரிடம் கேட்டிருக்கிறார்கள்.
அதனால்தான் பிக் பாஸ் தமிழ் இரண்டாவது சீசனில் ஒரு போட்டியாளராக இவர் கலந்து கொண்டு இருக்கிறார். ஆனால் 21 நாட்களில் இவர் இரண்டாவது போட்டியாளராக வெளியேற்ற பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டது ஒரு மறக்க முடியாத நினைவு. மனதளவில் இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் அதிகமான நாட்கள் இருக்கவில்லை என்றாலும் இந்த நிகழ்ச்சியில் இருந்த நாட்களை மறக்க முடியாது. மனதிற்கு இது ஒரு பெரிய மெடிசின். யாருக்கு எப்படியோ தெரியாது ஆனால் எனக்கு அப்படித்தான். வெளி உலக தொடர்புகள் இல்லாமல் இருந்தாலும் எந்த ஒரு டெக்னாலஜியையும் பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு மன சம்பந்தமான விளையாட்டு தான் இது.

அதுபோல பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பிரபலமாக பேசப்பட்டு கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அப்படியே காணாமல் போய்விடுவார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் பெரிய அளவில் வாய்ப்பு கிடைத்துவிடும் வாழ்க்கை மாறிவிடும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் சும்மா பொய் தான். நம்முடைய திறமை இருக்க வேண்டும், அதற்கேற்ற உழைப்போடு நம்முடைய பயணம் தொடர்ந்து கொண்டால்தான் நமக்கு வாய்ப்பும் கிடைக்கும்.
நீங்களே சொல்லுங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதில் வெற்றி பெற்றவர்கள் யாராவது நல்ல நிலைமையில் இருக்கிறார்களா? பிக் பாஸில் இருக்கும்போது தான் மக்களுடைய மரியாதையும் ஆதரவும் அதிகமாக இருக்கும் அதற்கு பிறகு அவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்கள் .இப்போது பிக்பாஸில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கூட இதை மனதில் ஏற்றுக்கொண்டு கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications