பெற்றோருக்கு இது பெரிய கொடுமை.. பழிவாங்க மகள்கள் செய்த செயல், மனம் நொந்து பேசிய அனிதா குப்புசாமி
சென்னை: பாடகி அனிதா குப்புசாமி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது சமுதாயத்தில் நடக்கும் அவல நிலை குறித்து பேசி இருக்கிறார். தற்போதைய சூழலில் பெண்கள் வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் அவருடைய குழந்தைகள் படும் கஷ்டங்கள் குறித்து பேசி இருக்கிறார். அம்மாவை பிரிந்து வளரும் ஒரு குழந்தை தன்னுடைய பெற்றோரை பழி வாங்குவதற்காக செய்த செயல் குறித்து அனிதா குப்புசாமி வருத்தத்தோடு பகிர்ந்து இருக்கிறார்.
இன்றைய அவசர காலகட்டத்தில் எல்லோருமே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் வேலை பார்த்தாலே குடும்பத்தை ஓட்டுவதற்கு அல்லல்படும் சூழ்நிலைதான் இருந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு பணம் வந்தாலும் மாத கடைசியில் எங்கே போனது என்று தெரியாமல் விழி பிதுங்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இப்போதுள்ள இளம் தலைமுறைகளின் நடவடிக்கைகள் பல விஷயங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், சில விஷயங்கள் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

மரியாதை
80ஸ், 70ஸ் காலகட்டம் வரைக்கும் உள்ள குழந்தைகள் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்களை புரிந்து அதற்கு தகுந்த மாதிரி பலர் நடந்து கொள்வார்கள். ஒரு சிலர் மட்டும் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் கஷ்டங்கள் இருந்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். ஆனால் இப்போதுள்ள இளம் தலைமுறைகள் பலருடைய மனநிலை இப்போது முற்றிலும் மாறி இருக்கிறது.
பாடகி அனிதா குப்புசாமி வருத்தம்
பெற்றோர் படும் கஷ்டங்களை பலர் புரிந்து கொள்வதில்லை. இது குறித்து பல பெற்றோர்கள் புலம்புவதை கேட்டிருப்போம். அது போல தான் பாடகி அனிதா குப்புசாமியும் தான் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஒரு சில சம்பவங்களை பகிர்ந்து இருக்கிறார். அனிதா குப்புசாமி பேசுகையில் இப்போது உள்ள இளம் தலைமுறையினர் செய்வதை பார்க்கும்போதே பயமாய் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
மகள் செய்த டார்ச்சர்
அனிதா குப்புசாமி மேலும் பேசும்போது, எனக்கு தெரிஞ்ச ஒரு பெண்மணியும் அவருடைய கணவரும் என்னிடம் பேசும்போது அவங்க பொண்ணு செய்வதை சொல்லி அழுதுட்டு இருந்தாங்க. ஏன்னா அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்காங்க. அந்த பொண்ணு இப்பதான் பத்தாம் வகுப்பு படிச்சிட்டு இருக்குது. ஆனா அந்த பொண்ணு அவருடைய காதலனுக்கு மெசேஜ் டைப் பண்ணும் போதும் சரி, போன் பேசும்போதும் பெற்றோர் என் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று டார்ச்சர் செய்கிறாளாம்.
அம்மா மீது கோபம்
நீங்க என்கிட்ட இல்லையென்றால் நான் தற்கொலை பண்ணிக்குவேன், நான் என்ன பேசினாலும் நீங்க என்னிடம் கேள்வி கேட்கக்கூடாது. நான் அவன் கிட்ட பேச கூடாதுன்னு நீங்க சொல்லக்கூடாது என்றெல்லாம் மிரட்டுறாளாம். அவளுக்கு பெற்றோர் மீது அவ்வளவு கோபம், அதிலும் அவங்க அம்மா வேலைக்கு போனதால நம்மளை சரியா பாத்துக்கல என்கிற ஒரு கோபத்தால் அவங்களை பழிவாங்குவதற்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கிறது.
பெற்றோர் பாவம்
"அந்த மகள் தனது நாட்குறிப்பில் தன் தாயைப் பற்றி 'இந்த அம்மா என்னிடம் கேள்வி கேட்கிறாள்' என்று என்னவெல்லாமோ எழுதி வைத்திருக்கிறாள். அந்த நாட்குறிப்பைப் பார்த்ததும் அந்த தாய் அழுதுவிட்டார். ஆனாலும் அந்த மகள் 'நான் இறந்துவிடுவேன்' என்று சொல்லி மிரட்டிக்கொண்டே இருக்கிறாள்."
புரியாத மகள்
அதுபோல இன்னொரு கதையையும் அனிதா குப்புசாமி சொல்லி இருந்தார். அதாவது இன்னொரு பெற்றோரும் என்கிட்ட பேசிகிட்டு இருந்தாங்க அவங்களோட பொண்ணும் ஏதாவது பேசினாலே அம்மாவை போட்டு அவ்வளவு அடிப்பாளாம். இல்லன்னா தெருவில் போய் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வாளாம். பெற்றோரை பழிவாங்குவதற்காக இப்படி எல்லாம் செஞ்சுகிட்டு இருக்காங்க. இதெல்லாம் பெற்றோருக்கு எவ்வளவு பெரிய கொடுமை? பெற்ற குழந்தைகளுக்காக தான் அம்மா அப்பா கஷ்டப்படுறாங்க என்பது அந்த குழந்தைகளுக்கு புரிய மாட்டேங்குது. அவங்களுக்கு நாம எவ்வளவோ சொல்லி கொடுத்தாலும் அவங்க ஏட்டிக்கு போட்டியாக பேசுறாங்க என்று மனம் நொந்து போய் அனிதா குப்புசாமி பேசியிருக்கிறார்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications