லியோ படத்தில் இப்படி செய்வாங்கன்னு நினைக்கல.. மகன் சொன்ன வார்த்தை.. பாடகி அனுராதா எமோஷனல்
சென்னை: பாடகி அனுராதா லியோ திரைப்படத்தில் தன்னுடைய பாடல் இடம் பெற்றிருப்பது குறித்து தன்னுடைய மகன் தன்னிடம் சொன்ன வார்த்தையை பற்றி பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
எத்தனையோ திரைப்படங்களில் தான் பாட்டு பாடி இருந்தாலும் தன்னுடைய மகனுக்கு விஜய் நடிப்பில் லியோ திரைப்படத்தில் தன்னுடைய பழைய பாடல் இடம் பெற்றிருப்பது அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது என்று அனுராதா கூறி இருக்கிறார்.

அதே நேரத்தில் அனுராதா தற்போது புதியதாக விஜய் திரைப்படத்தில் பாடவில்லை என்று பலர் ஃபீல் பண்ணி வருகின்றனர்.
அந்த வகையில் பெரும்பாலான குத்து பாடல்கள் பாடும் பாடகிகள் மார்டனாக இருப்பார்கள். ஆனால் அதிகமான குத்து பாட்டு பாடும் அனுராதா ஸ்ரீராம் தான் எப்போதும் ஹோமிலியாக சிரித்த முகமாக வலம் வருவது தான் அவருடைய ஸ்பெஷல்.
எத்தனையோ ஹிட் ஆனா பாடல்கள் பாடியிருந்தாலும் எந்த இடத்திலையும் பிகு பண்ணாமல் தன்னுடைய ரசிகர்களிடம் பழகும் விதம் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் குழந்தைகளிடமும் போட்டியாளர்களிடமும் கலகலப்பாக அனுராதா பழகுவது பலரையும் கவர்ந்திருக்கிறது. அதிலும் நடிகர் விஜய் மற்றும் திரிஷா ஜோடியாக நடிக்கும் படத்தில் கண்டிப்பாக ஒரு குத்து பாடலை அனுராதா பாடி இருக்கிறார்.
அந்த வரிசையில் கில்லி திரைப்படத்தில் "அப்படி போடு", திருப்பாச்சி படத்தில் அப்பன் பண்ணுன தப்புல, ஆதி படத்தில் ஒல்லி ஒல்லி இடுப்பே, குருவி படத்தில் மொள மொளன்னு என பல பாடல்களை பாடி இருக்கிறார். அந்த வரிசையில் லியோ பட அறிவிப்பு வந்ததும் திரிஷா தான் அந்த திரைப்படத்தின் கதாநாயகி என்று விஷயம் லீக் ஆனதுமே அனுராதாவின் இரண்டாவது மகன் லோகேஷ் அனுராதாவிற்கு போன் செய்து அம்மா நீங்க ஏற்கனவே திரிஷா, விஜய் இருவரும் ஜோடிய நடித்த எல்லா பாடல்களிலும் பாடல்கள் பாடி இருக்கீங்க.
இந்த படத்தில் பாட கூப்பிட்டாங்களா? என்று கேட்டிருக்கிறார். ஆனால் அனுராதா இல்லப்பா இதுவரைக்கும் அப்படி எதுவும் கூப்பிடல ஆனா அப்போ இருந்த நிலைமை வேற இப்போ இருக்கிற நிலைமை வேற. அப்படியே அவங்க கூப்பிட்டா பார்க்கலாம் என்று சொல்லி இருந்தாராம். அப்போது அனுராதாவின் மகனுக்கு இந்த வார்த்தை அப்செட்டை கொடுத்து விட்டதாம்.
ஏனென்றால் அவர் விஜயின் தீவிரமான ரசிகராம். இந்த நிலையில் லியோ படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அப்போது அனுராதாவின் மகன் முதல் நாள் ஷோ வெளிநாட்டில் பார்க்க தியேட்டர் போயிருக்கிறார். படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது காபி ஷாப்பில் மகளுக்காக விஜய் டான்ஸ் ஆட அதைப் பார்த்து அனுராதாவின் மகன் துள்ளி குதித்து விட்டாராம்.
என்னவென்று கேட்டால் அது எங்க அம்மா பாட்டு டா என்று அங்கிருந்து அவருடைய நண்பர்களிடம் சொல்ல எல்லோருக்குமே ஆச்சரியமாகிவிட்டதாம். ஒரு வழியா என்னுடைய மகன் ஆசைப்பட்டது நடந்து விட்டது. இந்த பாட்டை வைத்த லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி என்று பேட்டியில் அனுராதா பேசியிருக்கிறார். அந்த வகையில் அனுராதா ஸ்ரீராமின் மகன் சந்தோஷப்பட்ட அந்த பாடல் கருகரு கருப்பாயி என்ற பாடல்.
ஏற்கனவே அனுராதா ஸ்ரீராம் மற்றும் உன்னி மேனன் இருவரும் ஏழையின் சிரிப்பில் என்ற படத்திற்காக பாடியதுதான். இந்த திரைப்படத்தில் பிரபுதேவா மற்றும் ரோஜா இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். தற்போது இந்த பாடலை லியோ திரைப்படத்தில் கேட்டதும் அம்மா இப்போது புதியதாக பாடவில்லை என்றாலும் அம்மா பாடிய பாடல் வந்துவிட்டது என்ற சந்தோஷத்தில் அனுராதாவின் மகன் இருக்கிறாராம்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications