பவதாரிணி குறித்து போஸ்ட் போட்ட யுவன்.. வீட்டுக்குள் ரகசியமாய் நடந்ததை அம்பலப்படுத்தி இருக்கிறார்
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரிணி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி காலமானார். அது திரைத்துறையை பெரிய அளவில் வருத்தத்தில் ஆழ்த்தி இருந்தது. இசை பிரியர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இந்த நிலையில் பவதாரிணி தம்பியான யுவன் தன்னுடைய அக்காவோடு எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் யுவனுக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் யுவன் மற்றும் பவதாரிணி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதற்கு யுவன் அழகான ஒரு கேப்ஷனும் கொடுத்திருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இசை அமைப்பாளராகவும், பாடகராகவும் இருக்கும் இளையராஜாவின் ஒரே மகளான பவதாரிணி பல பாடல்கள் பாடி ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருந்தார். அதிர்ந்து கூட பேசாத பவதாரணி வீட்டில் செல்ல பிள்ளையாக இருந்தாலும் புற்றுநோய் மூலமாக காலன் அவரை அவருடைய குடும்பத்தினரிடம் இருந்தும் ரசிகர்களிடம் இருந்தும் பிரித்து சென்றிருந்தது.
ஆனாலும் பவதாரிணி உடல் இந்த மண்ணை விட்டு போயிருந்தாலும் அவருடைய பாடல்கள் மூலமாக அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். கடந்த ஜனவரி 25 ஆம் தேதி பவதாரிணி உடல்நிலை குறைவினால் இலங்கையில் காலமாகி இருந்தார். அதற்குப் பிறகு அவரைப் பற்றிய செய்திகள் இணையத்தில் அதிகமாக தெரிய வந்தது.
இந்த நிலையில் பவதாரிணி இருந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் பவதாரணி குறித்து அவருடைய அன்புத்தம்பி யுவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் பவதாரிணியும், தானும் தன்னுடைய மகளும் இருப்பது போன்று இருக்கிறது அந்த புகைப்படம். தன்னுடைய குழந்தையின் முகத்தை வெளியே காட்ட விரும்பாத யுவன் குழந்தையின் முகத்தில் ஒரு இமேஜை வைத்து மறைத்திருக்கிறார்
அதுபோல அந்த பங்க்ஷன் யுவனின் குழந்தையின் பிறந்த நாள் பங்க்ஷன் போல இருக்கிறது. ஆனால் தானும் தன்னுடைய அக்கா மற்றும் குழந்தை மூன்று பேரும் மட்டுமே கொண்டாடிய சின்ன பார்ட்டி என்று அந்த புகைப்படத்திற்கு யுவன் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதாவது தன்னுடைய குடும்பத்தினர்கள் யாரும் இல்லாவிட்டாலும் தானும் தன்னுடைய அக்கா தன் குழந்தை மூன்று பேரும் மட்டுமே நாங்கள் அந்த பார்ட்டியை கொண்டாடி இருந்தோம் என்று யுவன் கூறி இருக்கிறார்.
அதுபோல யுவன் மீது பவதாரணிக்கு அளவு கடந்த பாசம் இருந்திருக்கிறது. அதனால் தான் யுவன் மூன்றாவது முறையாக காதலித்து திருமணம் செய்ததும் இளையராஜாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லையாம். அதுவும் யுவன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து இருந்தது இளையராஜா குடும்பத்திற்கு பிடிக்காததால் பவதாரிணி தான் இளையராஜா மற்றும் அவருடைய குடும்பத்தையும் சம்மதிக்க வைத்து யுவனை அவருடைய குடும்பத்தோடு சேர்த்து வைத்திருந்தாராம்.
அது போல இளையராஜா ஆரம்பத்திலேயே யுவனிடம் உனக்கு பாட வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் நீயே கற்றுக் கொள் என்று சொல்லிவிட்ட பிறகு பவதாரிணி தான் பல நுணுக்கங்களையும் யுவனுக்கு சொல்லிக் கொடுத்தது என்று யுவன் பல மேடைகளில் பேசியிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய அக்கா குறித்து அவர் வெளியிட்ட பதிவுக்கு பலரும் யுவனுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications