மகள் விட்டுட்டு போன பிறகுதான் தெரிஞ்சது! குழந்தையை கவனிக்காமலே இருந்துட்டேன்: பவதாரணி பற்றி இளையராஜா
சென்னை: பிரபல பாடகி பவதாரிணியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இளையராஜா வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில் பவதாரணியை பற்றி இளையராஜா உருக்கமான தகவலை வெளியிட்டிருக்கிறார்.
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி. இவரும் பின்னணி பாடகி. ஏராளமான பாடல்களை பாடி உள்ளதுடன், இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.. இவர் கடந்த வருடம் தன்னுடைய 47வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.. கடந்த ஜனவரி இதேநாள், 25ம்தேதி புற்றுநோய் பாதிப்பால், சிகிச்சை பலனின்றி காலமானார்.
பவதாரணி: பவதாரிணி இறப்பதற்கு 6 மாதத்திற்கு முன்பு தான் வயிற்றில் கேன்சர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஏராளமான மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்தும் பலனில்லை. இதனால், ஆயுர்வேத சிகிச்சைக்காக, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டடோர், பவதாரணியை இலங்கைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அங்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலையால் பவதாரிணியின் உயிர் பிரிந்தது.

இதையடுத்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட பவதாரணியின் உடல், இளையராஜாவின் சொந்த ஊரான தேனி அருகே உள்ள பண்ணையபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.. இளையராஜாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில், உடல் வைக்கப்பட்டு, அங்கு சகோதரர்கள் அனைவரும், மயில் போல பொண்ணு ஒன்று பாடலை கண்ணீருடன் பாடி பவதாரணிக்கு இறுதி சடங்கு செய்தனர்.. இறுதியில் அதே தோட்டத்திலேயே, அவரின் அம்மா சமாதி பக்கத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
செல்ல மகள்: செல்ல மகள் இறப்புக்கு பிறகு, இளையராஜா அவரின் சமாதிக்கு சென்று வருவதோடு, ஆன்மீகத்திலும் ஈடுபட்டு வருகிறார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையடுத்து இளையராஜா தன்னுடைய எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் சில விஷயங்களை மிகவும் உருக்கமாக கூறியிருக்கிறார்.
நினைவுநாள்: "பவதாரணி எங்களை விட்டுப் பிரிந்த பின்புதான், அந்த குழந்தை எவ்வளவு அன்பு மயமாக இருந்திருக்கிறாள் என்பது எனக்குப் புரிந்தது.. இன்று அவரது நினைவு நாள். கவனமெல்லாம் இசையிலேயே இருந்ததால் என் குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிட்டேன்.. இப்போது அது எனக்கு வேதனையைத் தருகிறது.
அந்த வேதனை தான் மக்களை எல்லாம் ஆறுதல் படுத்தும் இசையாக இருக்கிறது என்பதை நினைக்கும் போது கொஞ்சம் எனக்கும் ஆறுதலாக இருக்கிறது. என் மகளின் அன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.. பவதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 12 அன்று அவரின் திதியும் வர உள்ளது. இதை இரண்டையும் ஒரு நினைவு நாள் நிகழ்வாக நடத்தும் எண்ணம் உள்ளது.. இதில், அனைத்து இசைக்கலைஞர்கள் பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்த வீடியோவில் இளையராஜா கூறியுள்ளார்.
நினைவுகள்: பவதாரிணியின் மறைவுக்கு பிறகு, குடும்ப உறுப்பினர்கள் யாருமே பொதுநிகழ்ச்சிகளில் அவ்வளவாக காணப்படுவதில்லை. கடந்த ஒரு வருட காலமாகவே வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் அடிக்கடி பாவதாரிணியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்நிலையில், மகளை பற்றி இளையராஜா உருக்கமாக பேசியிருப்பது, பலருக்கும் சோகத்தை தந்து வருகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications