பாடகி Dhee-யிடம் மன்னிப்பு கேட்கிறேன்.. இது மல்யுத்த போட்டியா? சின்மயியின் பெருந்தன்மையான வார்த்தை
சென்னை: பாடகி சின்மயி சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான "தக் லைஃப்" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடிய "முத்த மழை" பாடல் தான் சோசியல் மீடியா எங்கும் எதிரொலித்துக்கொண்டு இருக்கிறது. பலர் சின்மயியின் பாடல் அந்த ஒரு பாடலை ஒரிஜினலாக பாடிய தீ (Dhee)யை விட அருமையாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் பாடகி சின்மயி தீயிடம் மன்னிப்பு கேட்பதாக நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
டப்பிங் கலைஞரும் பாடகியுமான சீன்மயி பாடிய பல பாடல்கள் எவர்கிரீன் பாடல்களாக இப்போதும் வலம் வருகிறது. ஆனால் சமீபகாலமாக அவர் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இசைத்துறையில் தனக்கென ஒரு அழுத்தமான இடத்தை உருவாக்கிய பாடகி சின்மயி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் சமூக வலைதளத்தில் பரவி வரும் தீ (Dhee) vs சின்மயி என்ற வாதத்திற்கு பதில் கொடுத்து இருக்கிறார்.

தக் லைஃப் முத்த மழை பாடல்
அதில் சின்மயி பேசுகையில் தீ வர்ஷன், சின்மயி வர்ஷன் என்றெல்லாம் கூறுவது தேவையில்லாதது. இது சம்பந்தமே இல்லாத ஒன்று. மல்யுத்த போட்டியில் எங்களை போட்டியிட சொல்வது மாதிரி இது உள்ளது. "கலைஞர்களாக நாங்கள் ஒருவரை ஒருவர் போட்டியாளராக பார்க்கவில்லை. ஒருவரின் திறமையை பார்த்து வியக்க தான் செய்கிறோம்." "தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடலை அன்று தீ தான் பாடி இருக்க வேண்டும். அன்று அவர் ஊரில் இல்லை. அதனால் நான் பாடினேன்" இருந்தாலும் எனக்கு கிடைத்த அந்த வரவேற்பு என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.
மன்னிப்பு கேட்ட சின்மயி
இன்னும் 15 ஆண்டுகளில் தீ 100 சின்மயி, 100 ஸ்ரேயா கோஷல் குரலை விழுங்கக்கூடிய ஒரு பாடகியாக வலம் வருவார். தீ ரொம்ப சின்ன பொண்ணு இப்பவே இவ்வளவு அழகாக பாடுகிறார்கள் என்றால் மீண்டும் அவருக்கு அருமையான எதிர்காலம் இருக்கிறது. அவருடைய வயதில் என்னால் இவ்வளவு அருமையாக பாட முடிந்திருக்குமா? என்றால் இல்லை என்று தான் சொல்லுவேன். நான் பல பயிற்சிகளுக்கு பிறகு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். ஆனால் தீ அப்படி இல்ல. இந்த நேரத்தில் நான் தீயிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
சின்மயி ஹிட் பாடல்
என்னை வைத்து அவருடைய திறமைகளை சிலர் குறைவாக மதிப்பிட்டு விடுகிறார்கள் என்று பெருந்தன்மையாக சின்மயி பேசி இருக்கிறார். இதற்கு முன்பு சின்மயி சினிமாவில் என்றுமே மறக்க முடியாத பல காதல் ரொமான்டிக் பாடல்களை பாடி இருக்கிறார். அதிலும் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் வரும் தெய்வம் தந்த பூவே சின்மயிக்கு பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அந்த பாடலுக்கு பிறகு சின்மயியின் குரல் எல்லா இடங்களிலும் ஒலித்துக் கொண்டிருந்த நிலையில் தான் அவர் சினிமாவில் பாடுவதற்கும் டப்பிங் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

சின்மயி வருத்தம்
அதற்கு காரணம் அவர் சில விஷயங்களை வெளிப்படையாக பேசியதுதான். அது குறித்து சின்மயி சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சியில் உருக்கமாக பேசியிருந்தார். நான் கூறிய சில உண்மைகளால் என்னுடைய வாழ்க்கையையே முடக்கி விட்டார்கள். நான் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் என்னுடைய கணவர் மற்றும் மாமியார் எனக்கு சப்போர்ட்டாக இருந்தார்கள். உலகமே என்னை எதிர்த்து நின்றாலும் குடும்பத்தினர் கொடுத்த சப்போர்ட்டால், தான் நான் இன்று உயிர் வாழ்கிறேன். உங்கள் முன்பு நிற்க முடிந்தது என்று பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications