சூப்பர் சிங்கரை விட்டு வெளியேறிய பாடகி சித்ரா.. அவருக்கு பதில் இனி இவர்தான்.. எதிர்பாராத சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜூனியர்களுக்கான சீசன் 10 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து நடுவராக இருக்கும் பாடகி சித்ரா திடீரென விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக பிரபல நடிகை ராதா வந்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதனாலேயே இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த சீசன்களும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பலருக்கும் தெரிந்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் சினிமாவில் பின்னணி பாடகர்களாக மாறி இருக்கிறார்கள். அதுபோல இந்த நிகழ்ச்சியில் சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10
சமீபத்தில் சீனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்ததை தொடர்ந்து ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக பாடகி சித்ரா, பாடகர் மனோ உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதில் ஒரு சிலர் சில வாரங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பது வழக்கம்தான். ஆனால் இந்த வாரத்தில் திடீரென சித்ரா விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக நடிகை ராதா கலந்து கொண்டு இருக்கிறார்.
டிக்கெட் டூ ஃபினாலே
குழந்தைகளின் இசை திறமையை உலகத்திற்கு காண்பிக்கும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே விரைவில் நடைபெற இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்கு டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று அதிக சிறப்பாக பாடும் நான்கு குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் பாடும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
புதிய ப்ரோமோ
நான்கு இறுதிப் போட்டியாளர்களை தொடர்ந்து இப்போது ஐந்தாவது போட்டியாளர் யார் என்று தீர்மானிக்கிற வைல்ட் கார்ட் சுற்று தற்போது நடைபெற இருக்கிறது. இதற்கான ப்ரோமோ
விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. இந்த ப்ரோமோவில் சித்ராவை காணாத ரசிகர்கள் சித்ரா அம்மா எங்க போனாங்க? ஏன் அவங்க வரல? பினாலே நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நேரத்தில் அவர் வராமல் இருக்க மாட்டாரே? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நடிகை ராதாவுக்கு பாட்டு
அதே நேரத்தில் சித்ராவிற்கு பதிலாக இந்த வாரம் 80ஸ்களில் கனவுகன்னி ஆன நடிகை ராதா கலந்து கொண்டிருக்கிறார். அவர் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் ஒவ்வொருவருடைய திறமைகளையும் கவனித்து பாராட்டி இருக்கிறார். அந்த குழந்தைகளின் பாடலை கேட்டு மெய் மறந்து அவர்களோடு டான்ஸ் ஆடி தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். பாடகர் மனோ ராதாவை வரவேற்று அவருக்காக ஸ்பெஷல் பாடலும் பாடி இருக்கிறார்.
அதுபோல இந்த வார வைல்டு கார்டு மூலமாக ஏற்கனவே எலிமினேஷன் ஆனவர்கள் தங்களுடைய திறமையை நிரூபிக்க இருக்கிறார்கள். இதில் யார் ஜெயித்தால் சிறப்பாக இருக்கும் என்று நீங்க நினைக்கிறீர்கள் பாஸ்? இந்த நிகழ்ச்சியில் யாருடைய பாடல்கள் உங்களுக்கு ஃபேவரைட்?
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications