வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! அவங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும், ஒரே கலர் உடை இதனால் தான்! கெனிஷா ஓபன்
சென்னை: பாடகி கெனிஷா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் தன்னை பற்றி பரவி வந்த வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் ரவி மோகனுடன் தான் ஒரு கல்யாண பங்க்ஷனில் ஒரே வண்ண உடை அணிந்தது குறித்து பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அது குறித்தும் கெனிஷா அந்த பேட்டியில் பேசி இருக்கிறார் கெனிஷாவின் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாடகி கெனிஷா இப்போது சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பலருக்கும் பரீட்சையமானவராக மாறி இருக்கிறார். சில மாதங்களாக அவரைப் பற்றிய சில செய்திகள் சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் நடிகர் ரவி மோகன் அவருடைய மனைவி ஆர்த்தியை பிரிந்ததற்கு காரணம் ஆர்த்தி தான் என்று சில சர்ச்சைகள் எழுந்து வந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றில் கெனிஷா பேசியிருக்கிறார். அந்த வீடியோ எப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தயாரிப்பாளர் வீட்டு திருமணம்
அதில் கெனிஷா பேசும்போது, நான் சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கலந்து கொண்டேன். அப்போது என்னுடன் ரவி மோகனும் வந்திருந்தார். நாங்கள் ஒரே வண்ணம் உடைய அணிந்தது தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டது. அதற்கு காரணம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் எனக்கு ரொம்பவும் தெரிந்தவர். அவருடைய குடும்பத்தோடு நான் பல வருடங்களாக பழகி வருகிறேன். அவர் அந்த கல்யாணத்திற்கு என்னை வர வேண்டும் என்று கூப்பிட்டு இருந்தார்.
கெனிஷா விளக்கம்
அதனால் தான் நான் அந்த ஃபங்ஷனுக்கு வந்தேன். அதே போல நண்பர்கள் ஒரே வண்ண உடை அணிவது ஒன்றும் தப்பில்லை. அப்படித்தான் நானும் அந்த பங்க்ஷனில் கலந்து கொண்டேன். ஆனால் அந்த பங்க்ஷனில் என்னை பற்றியும் பல தவறான கருத்துக்கள் பரவி வந்தது. அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை கிடையாது. ஆனால் தயாரிப்பாளர் ஐசரி கணேசனையும் சிலர் திட்டி இருந்தார்கள்
கெனிஷா பேட்டி
அதற்கு நான் ஐசரி கணேசனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மன்னிச்சுக்கோங்க சார் உங்களுடைய மகள் கல்யாணத்தில் பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அது ஏன் அப்படி மாறிச்சு என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் உங்களுக்கு என்னால் சங்கடம் வந்திருக்குமோ என்ற வருத்தம் தான் இருந்தது. என்று கெனிஷா பேசியிருக்கிறார் .
வதந்திகளுக்கு விளக்கம்
அதோடு தன்னை பற்றி தவறாக கமாண்ட் போடுபவர்கள் பற்றியும் கெனிஷா அந்த பேட்டியில் பேசியிருந்தார். அதில் என்னை பற்றி அதிகமான கமெண்டுகள் வந்து கொண்டிருக்கிறது. அதை எல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் அதுவெல்லாம் என்னை எந்த வகையிலும் ரியாக்ட் செய்ய வைக்காது. எனக்கு கோபப்படுத்த வேண்டும் என்று சிலர் அவர்களுடைய கோபத்தை எல்லாம் கமெண்ட்களில் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்க்கும்போது எனக்கு வேடிக்கையாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது. காரணம் அவர்கள் இந்த அளவிற்கு மன நிம்மதி இல்லாமல் இருக்கிறார்களா என்று கேள்விகள் எனக்கு வருகிறது.

குறையாத நெகட்டிவ்
ஒருவர் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தால் அவர் அடுத்தவர்களை பற்றி நினைத்து கூட பார்க்க மாட்டார். ஆனால் சோசியல் மீடியாவில் அடுத்தவர்களை பற்றி சிலர் இதுபோல தேவையில்லாத ஆபாசமான கமண்டுகள் போடும்போது அவர்களுடைய குடும்பத்தில் அதே பிரச்சனையை சந்தித்து கொண்டு இருப்பார்கள். அந்த கோபத்தை தான் இதுபோன்று கமெண்ட்களில் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன் என நெகட்டிவ் கமெண்ட் போடுபவர்கள் பற்றியும் கெனிஷா பேசியிருக்கிறார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications