"காதல் பிறந்த பிறகு தடையே இல்லை".. ஆட்டத்தை தொடங்கிய கெனிஷா.. ரவி மோகனின் எதிர்பாராத ரியாக்ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகி கெனிஷா அன்றும் இன்றும் என்று ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடல் தான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு கெனிஷா உடுத்திய உடை அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் இந்த பாடலில் ரவி மோகனும் இடம்பிடித்து இருக்கிறார். ஏற்கனவே ரவிமோகன் கெனிஷா பற்றிய பஞ்சாயத்து முடிவுக்கு வராத நிலையில் இப்போது இந்த பாடல் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

நடிகர் ரவி மோகன் குடும்ப பிரச்சனை உலகத்திற்கே தெரிஞ்ச கதையாகத் தான் இப்போதும் இருக்கிறது. ரவி மோகன் காதலித்து திருமணம் செய்த ஆர்த்தி கடந்த வருடத்தில் பிரிவதாக அறிவித்திருந்தார். அதற்கு பிறகு ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். தங்கள் மீது தவறில்லை என்பதை காட்டிக் கொள்வதற்காக இவர்கள் அறிக்கை வெளியிட்டுக் கொண்டு இருந்தாலும் அது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது.

Ravi Mohan Kenisha

நீதிமன்ற உத்தரவு

இவர்களின் குடும்ப பஞ்சாயத்து பற்றி சிலர் பல்வேறு வதந்திகளையும் பரப்பி வந்தனர். இந்த நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் இவர்கள் இருவருக்கும் அறிவுரைகளும் வழங்கப்பட்டது. அதில் இருவரும் வெளியிட்ட அவதூறு அறிக்கைகளை டெலிட் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுபோல இவர்கள் இருவரை பற்றி தவறாக பேசிய வீடியோக்களையும் டெலிட் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரவி மோகன் குடும்ப பிரச்சனை

இதனால் ஆர்த்தி மற்றும் ரவி மோகன் இருவரும் தங்களுடைய பதிவுகளை நீக்கி இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஆர்த்தி மற்றும் ரவி மோகன் பிரிவதற்கு காரணம் கெனிஷா தான் என்ற வதந்திகளும் சர்ச்சைகளும் பரவி வந்தது. அதற்கு ஆர்த்தியும் மறைமுகமாக ஆமாம் என்று கூறியிருந்தார்.ஆனால் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் தங்களைப் பற்றி பரவி வரும் வதந்திகளை மறுத்திருந்தனர்.

Ravi Mohan Kenisha

கெனிஷா பாடிய பாடல்

இப்படியான நிலையில் கெனிஷா அன்றும் இன்றும் என்ற ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்த பாடலுக்கு அவரே டான்ஸ் ஆடி இருக்கிறார். குரூப் டான்ஸ்ஸர்களுடன் அவர் ஆடிய டான்ஸ் தான் இப்போது இணையத்தில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த பாடல்களுக்கு படு கவர்ச்சியாகவே ஆடை அணிந்து இருக்கிறார். அந்த பாடலில் ஒரு காட்சியில் ரவி மோகனும் வருகிறார். இதனால் இந்த பாடலை கெனிஷா ரவி மோகனுக்காக தான் பாடினாரா என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.

கெனிஷா பாடல் வரிகள்

அதுபோல அந்த பாடலில் ஒரு இடத்தில் "காதல் வந்த பிறகு தடையே இல்லை" என்று வரிகள் இருக்கிறது. அதுபோல ஒரு பெண்ணின் மனதிற்குள் ஆண் மீது காதல் வந்த பிறகு எந்த தடைகள் வந்தாலும் அந்த பெண் துணிந்து நிற்பாள் என்று சொல்லும் வகையில் அந்த பாடலில் பல வரிகள் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+