நாங்கப்பட்ட கஷ்டம் எங்க பையனும் படனுமா..? கணவர் குறித்து மனம் திறந்த பாடகி ராஜலட்சுமி
சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த பாடகி ராஜலட்சுமி தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
திருமணத்திற்கு முன்பு இருந்த நிலை மற்றும் இப்போது இருக்கும் நிலை குறித்து ராஜலட்சுமி பல தகவல்களை கூறி இருக்கிறார்.

தன்னுடைய கணவரை குறித்து ராஜலட்சுமி பல தகவல்கள் வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பாடகி ராஜலட்சுமி பாடகர் செந்தில் கணேஷ் ஜோடி நாட்டுப்புற தம்பதிகளாக இருந்தாலும், இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்தனர். இவர்கள் இருவரும் தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றில் தங்களுடைய காதல் திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி இருக்கின்றனர்.
திருமணத்திற்கு முன்பே பாடகியாக இருந்து வரும் ராஜலட்சுமி அப்போது பல்வேறு ஆசைகளை மனதிற்குள் வைத்திருந்தாராம். கழுத்தில் சின்னதாக ஒரு செயின் போட வேண்டும். ஒரு கம்மல் போட வேண்டும் என்று அதிகமாக ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அது எல்லாமே திருமணத்திற்கு பிறகு எனக்கு கிடைத்தது என்ற மனம் திறந்து கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவருடைய சொந்த ஊர் திண்டுக்கல் தானாம்.
திண்டுக்கல் ஊர் மீது ராஜலட்சுமிக்கு அளவுக்கு அதிகமாக பாசம் இருக்குமாம். எந்த இடத்தில் வண்டியில் சென்றாலும் கூட அவருடைய ஊர் பெயர் போட்ட பஸ்ஸை பார்த்தாலே ஒரு நிமிடம் அந்த இடத்தை நின்று பார்ப்பாராம். அப்போது திருமணத்திற்கு முன்பே செந்தில் கணேஷ் இடம் நாம் திருமணத்திற்கு பிறகு திண்டுக்கல்லில் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தாராம். அப்போது செந்தில் கணேஷ் கூட நான் உனக்கு அங்கே ஒரு வீடு கட்டித் தருகிறேன் என்று சொன்னாராம். ஆனால் அது பல வருடங்களாக நடக்கவே இல்லை என்று ராஜலட்சுமி கூறி இருக்கிறார்.
அதோடு ராஜலட்சுமியின் குழந்தைகளுக்காக தற்போது திண்டுக்கல்லில் சொந்தமாக ஒரு வீட்டை செந்தில் கணேஷ் கட்டி முடித்து இருக்கிறாராம். புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில் கணேசன் திண்டுக்கலை சார்ந்த ராஜ லக்ஷ்மியை காதலித்து திருமணம் செய்யும்போது, ஆரம்பத்தில் ஊர்காரர்கள இந்த பொண்ணு இந்த ஊரில் இருந்து அந்த ஊருக்கு காதலித்து திருமணம் செய்து கொண்டு போயிருக்கிறது. இனி எப்படியும் கஷ்டப்படும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்களாம். ஆனால் இவர்கள் அடுத்தடுத்து வெற்றி அடைவதை பார்த்து பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் சின்ன சின்ன விஷயத்துக்காகவும் ஆசைப்பட்ட இவர்கள் இருவரும் இப்போது திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாகவும், அதே நேரத்தில் நாங்கள் ஆசைப்பட்டதை எல்லாம் எங்களுக்கு இப்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் ஆரம்ப காலகட்டத்தில் கஷ்டப்பட்ட மாதிரி எங்களுடைய குழந்தைகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் இப்போது இப்படி உழைத்துக் கொண்டிருக்கிறோம் என பல தகவல்களை பேசி இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
-
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications