குழந்தைகளை அறிமுகம் செய்து குடும்ப போட்டோ வெளியிட்ட ராஜலட்சுமி.. கூடவே உருக்கமான பதிவு

முதல்முறையாக பாடகி ராஜலட்சுமி தன்னுடைய குழந்தைகள் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டுப்புற பாடகியாக அறிமுகமான ராஜலட்சுமி தற்போது தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவரோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

ராஜலட்சுமி தன் கணவர் செந்தில் கணேஷ் உடன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் முதல் முறையாக தன்னுடைய குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

பாடகியாக அறிமுகமாகி தற்போது நடிகையாக மாறி இருக்கும் ராஜலட்சுமியின் குடும்ப புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலம்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் ஜோடி பலருக்கும் பரீச்சயமானார்கள். சின்ன திரையில் இவர்களுடைய பாடல்களை ரசித்த ரசிகர்கள் வெள்ளி திரையிலும் தற்போது ரசித்து வருகிறார்கள். பல திரைப்படங்களில் பின்னணி பாடகர்களாக இவர்கள் இருவரும் தங்களுடைய குரலால் பல பாடல்களை பாடி வருகிறார்கள். பல நேரங்களில் இவர்கள் பாடிய பாடல்கள் வெற்றி பெற்றிருக்கிறது.

அடிக்கடி போட்டோ சூட்

அடிக்கடி போட்டோ சூட்

நாட்டுப்புறப் பாடகியாக அறிமுகமாகி ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் ஜோடி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலகலப்புக்கு காரணமாக பல காமெடிகளையும் செய்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பும் அதற்கு பின்பும் இவர்கள் பல்வேறு கோவில் திருவிழாக்கள், மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பாட்டு பாடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பாடகியாக மட்டுமல்லாமல் தற்போது லைசன்ஸ் திரைப்படத்தில் ஒரு நடிகையாகவும் ராஜலட்சுமி மாறியிருக்கிறார். தொடர்ந்து சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இந்த ஜோடி அடிக்கடி போட்டோ சூட் எடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

குழந்தைகளின் புகைப்படம்

குழந்தைகளின் புகைப்படம்

நிஜ வாழ்க்கையில் காதல் திருமணம் செய்து கொண்ட செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஜோடி தங்களுடைய வாழ்க்கை பயணத்திலும் இருவரும் மகிழ்ச்சியாக பயணித்து வரும் நிலையில், ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். குழந்தைகள் புகைப்படத்தை அவ்வளவாக சமூக வலைத்தளத்தில் பயன்படுத்தாத ராஜலட்சுமி முதல் முறையாக தற்போது தன்னுடைய குழந்தைகளோடு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

குடும்பத்திற்கு இலக்கணம்

குடும்பத்திற்கு இலக்கணம்

தன்னுடைய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு, குடும்பம் என்பது அன்பின் பிறப்பிடம், மகிழ்ச்சியின் இருப்பிடம், பாசத்தின் வளர்ப்பிடம், பக்குவத்தின் காப்பிடம், அன்பு குடும்பம் இதுதான்... என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது அதிகமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு மார்டன் உடையில் ஸ்டைலாக மாறி ஆங்கில பாடலை பாடி அசத்தியிருந்த ராஜலட்சுமியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்ட நிலையில், தற்போது அவருடைய குடும்ப புகைப்படமும் பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+