தந்தை குழந்தையை விட்டுட்டு போற வலி எவ்வளவு பெருசு தெரியுமா? கண்ணீர் விட்டு கதறிய சைந்தவி
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 6 நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் சைந்தவி அந்த நிகழ்ச்சியில் பேசிய விஷயங்கள் தான் இப்போது இணையத்தில் பலரையும் ஃபீல் பண்ண வைத்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளரின் கணவர் சில மாதங்களுக்கு முன்புதான் காலமானார். அவருடைய குழந்தை குறித்து சைந்தவி எமோஷனலாக பேசியிருக்கிறார்.
பாடகி சைந்தவி பல இனிமையான பாடல்களை பாடி இருக்கிறார். அவருடைய பாடல்கள் பலருடைய ஃபேவரைட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும். இவருடைய "பிறை தேடும் நிலவிலே" பாடல் மட்டும் அல்லாமல் அவருடைய ஒவ்வொரு பாடலிலும் தன்னுடைய யூனிக்கான மேஜிக் வாய்ஸ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அதுபோல சைந்தவி நடிகரும், இசையமைப்பாளர், பாடகருமான ஜிவி பிரகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சைந்தவி திருமண வாழ்க்கை
பல வருடங்களாக இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த வருடத்தில் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இந்த தம்பதிக்கு ஆத்வி என்ற பெண் குழந்தை இருக்கிறார். சைந்தவி திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி இருந்தார். தான் எவ்வளவோ முயற்சி செய்தாலும் தன்னுடைய உடல் எடை மாற்றத்தை என்னால் என்னால் தடுக்க முடியவில்லை என்று கூறியிருக்கும் சைந்தவி ஜிவி பிரகாஷை விவாகரத்து செய்து இருந்தாலும் அவருடன் நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டிருக்கிறார்.
விவாகரத்து செய்த சைந்தவி
நாங்கள் விவாகரத்துக்கு பிறகும் நண்பர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் சொல்லியிருக்கின்றனர். எந்த இடத்திலும் இருவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லி பேசியதும் இல்லை. இந்த நிலையில் தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் சைந்தவி நடுவராக இருந்து வருகிறார். ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களின் நிறை குறைகளை சுட்டிக்காட்டி வரும் சைந்தவி கடந்த வாரத்தில் ஒரு போட்டியாளர்கள் குழந்தையை பார்த்து கண்கலங்கி அழுது இருக்கிறார்.
போட்டியாளரின் சோகம்
அதாவது இந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் போட்டியாளர் கலந்து கொண்டிருக்கிறார். அவருடைய கணவர் சில மாதங்களுக்கு முன்புதான் விபத்தில் காலமானார். தன்னுடைய கணவரின் ஆசையையும் லட்சியத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று அவருடைய மனைவி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்திருக்கிறார். அவருடைய பாட்டு திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர். அவருடைய குழந்தையின் பிறந்தநாளுக்கு தான் வாங்கிய உடை பக்கத்து வீட்டு குழந்தை பிடித்திருக்கிறது என்று சொன்னதால் அந்த குழந்தைக்கு கொடுத்துவிட்டு தன்னுடைய குழந்தைக்கு வேறு உடை வாங்கிட்டு வருவதற்காக சென்ற இடத்தில் தான் விபத்தில் அந்த போட்டியாளரின் கணவர் இறந்து போனார்.

தந்தையின் இறப்பு
தன்னுடைய பிறந்தநாளில் தன் தந்தையை இழந்து நிற்கும் அந்த குழந்தையை பார்த்து சைந்தவி எமோஷனலாக பேசி இருந்தார். அதாவது, குழந்தைகள் மேலே எல்லா பெற்றோருக்குமே அளவு கடந்த அன்பு இருக்கும். அந்த குழந்தைகள் ஏதாவது கேட்பதற்கு முன்னாடியே அவங்களுக்கு ஏதாவது வாங்கி கொடுக்க வேண்டும் என்பது தானே எல்லா அம்மாவுக்கும் தோணும். ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த குழந்தையின் அப்பா இறந்து போயிட்டாங்க.
சைந்தவி எமோஷனல்
நான் இந்த குழந்தையின் அம்மாவின் ஸ்டோரியை கேட்டேன். குழந்தைக்கு டிரஸ் வாங்கிட்டு வரேன்னு போனவர் திரும்பி வரல. என் ஆனால் இன்னைக்கு இந்த குழந்தைக்கு சரிகமப செட்டில் இவ்வளவு சொந்தங்கள் இருக்கிறோம். என்னையும் சேர்த்து தான் சொல்றேன். இந்த குழந்தைக்கு இவ்வளவு பேருடைய அன்பு கிடைக்கிறது பார்க்கும்போது சந்தோசமா இருக்கு.
ரசிகர்கள் பாராட்டு
தந்தை இல்லாத வலி எந்த குழந்தைக்கும் வரக்கூடாதுன்னு நான் நினைப்பேன். அந்த குழந்தையோட மனசு எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் என்று அந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும் போது சைந்தவி கண்கலங்கி அழுது இருக்கிறார். இந்த ப்ரோமோவுக்கு கீழே அதிகமான ரசிகர்கள் சைந்தவியின் குழந்தை மனதையும் அவர் ஒரு தாய் என்பதை நிரூபித்திருக்கிறார் என்றும் பாராட்டி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications