என்னையே கோபப்படுத்தி பாக்குறாங்க! அடிச்சிடலாம் போல இருந்தது! இப்படி பேசுவாங்களா? சைந்தவி வருத்தம்
சென்னை: பாடகி சைந்தவி பேட்டி ஒன்றில் பேசும் போது, சிலர் தன்னிடம் கேட்கும் கேள்விகள் தனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது. அப்போது அங்கு இருப்பதை எடுத்து அடித்து விடலாம் போல கூட தோன்றுகிறது. எனக்கு பொதுவாக கோபமே வராது, ஆனால் என்னையே கோபப்படுத்தும் வகையில் பேசுகிறார்கள் என்று வருத்தமாக பேசி இருக்கிறார்.
சில நாட்களாகவே சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் பற்றிய செய்திகள் இணையத்தில் அதிகமாக அடிபடுவதை பார்த்திருப்போம். பாடகி சைந்தவியும் ஜீவி பிரகாஷும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வீட்டின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தாலும் 11 வருடங்களில் இவர்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. இவர்களுக்கு ஆத்வி என்று அழகான மகள் இருக்கிறார். இவர்கள் இருவரும் தாங்கள் மனம் ஒத்து பிரிய போகிறோம் என்று அறிவித்தபோது ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வந்தனர்.
ஒரு குழந்தை இருக்கும் நிலையில், காதலித்து திருமணம் செய்த இவர்கள் ஏன் இப்படி முடிவெடுத்தார்கள் என்று கேள்வி எழுப்பியதையும் பார்க்க முடிந்தது. ஆனால் இவர்கள் இருவரும் எங்கள் இருவருடைய தனிப்பட்ட முடிவு அதனால் இதை பெரிது படுத்தாதீர்கள் என்று கூறியிருந்தார்கள்.
அதற்குப் பிறகு சமீபத்தில் இவர்கள் இருவரும் துபாயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாடியிருந்தனர். அந்த பாடல்கள் கூட பெரிய அளவில் வைரலாகியது. அதிலும் "பிறை தேடும் இரவிலே" என்ற பாடலை சைந்தவி மற்றும் ஜீவி பிரகாஷ் பாடிய கிளிப்ஸ்கள் இணையத்தில் செம டிரெண்ட் ஆகிவிட்டது.
இந்த நிலையில் சைந்தவி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் பேசுகையில், எனக்கு பொதுவாக கோபமே வராது ஆனால் சில இடங்களில் சிலர் கேட்கும் கேள்விகள் நம்மை கோபப்படுத்தும் வகையில் இருக்கும்.
கடந்த வருடத்தில் ஒரு இன்டர்வியூவில் நான் கலந்து கொண்டேன். அவர்கள் கேட்ட கேள்வி என்னை ரொம்பவும் தர்ம சங்கடமாக்கியது. அவர்கள் அந்த மாதிரி கேள்விகள் கேட்கும் போது நம்முடைய மனது வேதனைப்படும் என்று தெரியாமலேயே இப்படி கேட்கிறார்களா? என்று எனக்கு வருத்தமாகவும் இருந்தது.
எதிர் தரப்பில் இருப்பவர்களின் உணர்வுகளை புரியாமல் சிலர் கேள்விகள் கேட்கிறார்கள். எதையோ கேட்க வேண்டும் என்று இவர்கள் கேட்கிறார்களா? அல்லது என்ன காரணத்திற்காக இப்படி எல்லாம் கேட்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. உண்மையில் அந்த இடத்தில் எனக்கு எதையாவது எடுத்து அடித்து விடலாமா என்று தோன்றியது.
சில விஷயங்களை நாம் கடந்து வெளியே வர வேண்டும் என்று முயற்சி செய்கிறோம். ஆனால் சிலர் வேண்டுமென்றே அதை பற்றியே கேட்கிறார்கள். எல்லோருக்குள்ளும் வேதனைகளும் சோகங்களும் மறைந்து இருக்கும் அதை எல்லா இடத்திலும் காட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன் என அந்த பேட்டியில் சைந்தவி பேசி இருக்கிறார். சைந்தவி இந்தளவிற்கு வருத்தம்படும் வகையில் என்ன கேள்வி கேட்கப்பட்டிருக்கும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications