இளையராஜா காலில் விழுந்த சினேகன்- கன்னிகா.. கூடவே யாருன்னு பாத்தீங்களா? மகிழ்ச்சியான செய்தியாம்
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளுக்கு பாடல் ஆசிரியர் சினேகன் அவருடைய மனைவியோடு நேரில் சென்று ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார்.
பாடல் ஆசிரியர் சினேகனின் மனைவி கன்னிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளையராஜா பற்றி பதிவு வெளியிட்டிருக்கிறார்
இளையராஜா வீட்டிற்கு நேரில் சென்ற சினேகன் மற்றும் கன்னிகா அங்கு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல் இசையமைத்து ஐந்து தேசிய விருதுகளையும், குடிமை மரியாதைகள், கணக்கில்லா பிலிம் பேர் விருதுகள், சர்வதேச விருதுகள் என வாங்கி குவித்து இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருக்கும் இளையராஜாவின் பிறந்த நாள் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று காலையில் இருந்து இளையராஜாவின் பிறந்தநாளுக்கு பல பிரபலங்களும் ரசிகர்களின் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். பலருடைய மனக் கவலைகளை தீர்க்கும் வகையில் மனதை இதமாக்கும் மாயாஜால வித்தைகளை எல்லாம் தன்னுடைய பாடல்களில் அள்ளித் தெளிக்கும் இளையராஜா இன்னும் பல வருடங்கள் வாழ வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

முதல் அமைச்சரில் தொடங்கி பல முன்னணி நடிகர்களும் தொடர்ச்சியாக இளையராஜாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். 1976 இல் அன்னக்கிளி திரைப்படத்தில் "மச்சான பாத்தீங்களா" என்ற பாடல் மூலமாக ரசிகர்களை கவர தொடங்கிய இளையராஜா இப்ப உள்ள 2கே ஹிட்ஸ் களின் மனதையும் விடாமல் கவர்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் இளையராஜாவின் தீவிரமான ரசிகரான பாடகர் சினேகன் அவருடைய மனைவி கன்னிகாவோடு சேர்ந்து இளையராஜாவின் பிறந்தநாளுக்கு மிகப்பெரிய ரோஜாப்பூ மாலை ஒன்றை வாங்கிக் கொண்டு அவருடைய வீட்டிற்க்கே சென்று அவருக்கு மாலை அணிவித்து அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதங்களை வாங்கி இருக்கிறார்கள். அதோடு அவருடைய மகன் கார்த்திக் ராஜாவையும் பார்த்து அவரோடும் புகைப்படங்களை எடுத்து இருக்கிறார்கள்.
சினேகனும் கன்னிகாவும் இளையராஜாவோடு எடுத்த புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, இன்று பிறந்தநாள் காணும் இசைஞானியின் ஆசி நிறைந்த அன்பைப் பெற்ற மகிழ்வான தருணம் என்று தங்களுடைய சந்தோஷத்தை ரசிகர்களிடமும் பகிர்ந்து இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications