Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்யாணம் முடிந்த 2 வாரத்தில் மகள் பற்றி உருக்கமாக பாடகர் ஸ்ரீனிவாஸ் போட்ட பதிவு.. குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகர் ஸ்ரீனிவாஸ் இளைய மகள் சுனந்தா ஸ்ரீனிவாஸ்க்கு ஆகாஷ் என்பவரோடு கடந்த ஜனவரி 20ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய மகள் சுனந்தாவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஸ்ரீனிவாஸ் மகள் குறித்து நெகிழ்ந்து போஸ்ட் போட்டு இருக்கிறார்.

பாடகர் ஸ்ரீனிவாஸ் சுஜாதா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு சரண்யா மற்றும் சுனந்தா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் இரண்டாவது மகள் சுனந்தாவிற்கு கடந்த ஜனவரி 20ஆம் தேதி திருமணம் முடிந்திருக்கிறது. ஆகாஷ் என்பவரை சுனந்தா திருமணம் செய்து இருக்கிறார்.

zee tamil singer srinivas Zee Tamil

இந்த நிலையில் தன்னுடைய மகள் சுனந்தாவின் திருமண புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஸ்ரீனிவாஸ் "என் சின்ன குழந்தை சுனந்தா இப்போது ஆகாஷ் என்ற அழகான பையனை மணந்தவள்" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

பொதுவாக ஒரு சிலர் மட்டும்தான் பெற்றோர்களின் வழியில் தங்களுடைய பயணத்தை தொடங்குகிறார்கள். ஒரு சில நடிகர்கள் வீட்டில் அவர்களுடைய குழந்தைகள் நடிகர்களாக மாறுவதில்லை. பாடகர்களின் குழந்தைகள் பாடகர்களாக மாறுவதில்லை. ஆனால் பாடகர் ஸ்ரீனிவாஸ் போலவே அவருடைய ஒரு மகள் பாடகியாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

பாடகர் ஸ்ரீனிவாஸ் ஒரு பாடகராக மட்டுமல்லாமல் பல இசை நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருந்து வருகிறார். அதிலும் குறிப்பாக airtel சூப்பர் சிங்கரில் பாடகி சுஜாதா மற்றும் உன்னிகிருஷ்ணன் உடன் இவரும் நடுவராக இருந்து வருகிறார். அதிலும் போட்டியாளர்கள் செய்யும் எந்த குறையாக இருந்தாலும் போட்டியாளர்களின் மனம் கோணாத படி சிரித்த முகமாகவே சுட்டிக்காட்டி பலருடைய நன்மதிப்பை பெற்று வருகிறார்.

zee tamil singer srinivas Zee Tamil

அதனால் தான் பாடகர் ஸ்ரீனிவாஸ்க்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அனைவருக்கும் பிடித்த ஜட்ஜுக்கான விஜய் டிவியின் தொலைக்காட்சி விருதுகள் வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பலமொழிகளிலும் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ரீனிவாஸ்க்கு சளைத்தவர் அல்ல என்று அவருடைய மூத்த மகள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த 2000ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தெனாலி திரைப்படத்தில் ஆலங்கட்டி மழை என்ற பாடலை ஏஆர் ரகுமான் இசையில் முதன்முதலாக பாடி திரை துறையில் பாடகியாக ஸ்ரீனிவாஸ் மகள் சரண்யா அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல ஹிட் பாடல்களை பாடிக்கொண்டிருக்கிறார்.

zee tamil singer srinivas Zee Tamil

அதுபோல ஸ்ரீனிவாஸ் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அம்பாசமுத்திரம் தானாம். இவர் 1959 பிறந்திருக்கிறார். குழந்தையாக இருக்கும்போதே இவரை அறியாமலே பாட்டில் ஆர்வமாக இருந்தாராம்.

இந்த நிலையில்தான் இவர் முதல் முறையாக 1998 ஆம் ஆண்டு உயிரே திரைப்படத்தில், என் உயிரே எனும் பாடலை சுஜாதா மோகன் உடன் பாடியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பல திரைப்பட பாடல்களை இவர் பாடிக்கொண்டிருக்கிறார். அதற்குப் பிறகு பெற்றோர் சம்மதத்தில் திருமணமும் செய்து இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு இவருடைய வாழ்க்கையில் சில ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டிருக்கிறதாம். இந்த மாதிரி நேரத்தில் தன்னுடைய மனைவி தனக்கு கொடுத்த ஆதரவால் தான் தன்னால் தொடர்ந்து இந்த பயணத்தை தொடர முடிந்தது என்று கூறி இருக்கிறார்.

நாங்க கஷ்டப்பட்ட நேரத்தில் இதுவெல்லாம் வேண்டாம் என்று என்னுடைய மனைவி கூறி இருந்தால் நான் அப்போதே வேறு வேலையை பார்த்து இருப்பேன் என்றும் கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் திருமணத்தின் போது வேறு வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். ஆனால் அந்த வேலையை ரிசைன் செய்து விட்டு தான் இவர் பாடகராக மாறி இருக்கிறார். அப்போது இவர் எடுத்த முடிவுக்கு சொந்த பந்தங்கள் எல்லாம் என்ன இவர் இப்படி செய்து விட்டார் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்களாம். குறிப்பாக அவருடைய அப்பா கூட பேசி இருக்கிறார்.

ஆனால் ஸ்ரீனிவாஸ் மனைவியான சுஜாதா உங்களுக்கு பிடிச்சதை செய்ங்க, என்ன வருதுன்னு பார்ப்போம் என்று கூறியிருந்தாராம். ஆனால் அந்த நேரத்தில் சுஜாதாவின் அம்மா கூட ரொம்பவே கோபப்பட்டாராம். இவர் நல்ல வேலையில் இருந்து விட்டு எதற்காக இப்படி செய்ய வேண்டும் என்பதுதான் பலருடைய கேள்வியாக இருந்ததாம். ஆனால் எப்போதும் சந்தோஷமாகவே இருக்கும் ஸ்ரீனிவாஸ் கண்டிப்பா அவர் ஆசையை கெடுக்க வேண்டாம் என்று அவருடைய மனைவி கூறியிருந்தாராம்.

zee tamil singer srinivas Zee Tamil

இந்த நிலையில் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு இன்று வாழ்க்கையில் ஜெயித்து, ஸ்ரீனிவாஸ் அவருடைய மகளுக்கு பிடித்த ஆகாஷை திருமணம் செய்து வைத்திருக்கும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+