என் மனைவி அப்படி சொல்லி இருந்தா..?வாழ்க்கை தலைகீழாக போயிருக்கும்..மனம் திறந்த பாடகர் ஸ்ரீனிவாஸ்
சென்னை: பல ஹிட்டான பாடல்களை பாடிய ஸ்ரீனிவாஸ் தன்னுடைய மனைவி பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
இக்கட்டான சூழ்நிலைகளில் மனைவி கொடுத்த ஆறுதலால் தான் தன்னுடைய பாடல் துறையில் தொடர்ந்து வர முடிகிறது என்று கூறியிருக்கிறார்.
அத்தோடு திருமணத்திற்கு பிறகு காதலித்து வரும் இந்த தம்பதி ஒருவரை பற்றி ஒருவர் பல தகவல்களை கூறி இருக்கின்றனர்.

ஸ்ரீநிவாஸ் ஒரு பாடகராக மட்டுமல்லாமல் இசை அமைப்பாளராகவும்,நடிகராகவும், ஒரு நடுவராகவும் இருந்து வருகிறார். ஸ்ரீனிவாசன் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த அம்பாசமுத்திரம் தானாம். இவர் 1959 பிறந்திருக்கிறார். குழந்தையாக இருக்கும்போதே இவரை அறியாமலே பாட்டில் ஆர்வமாக இருந்தாராம்.
இந்த நிலையில்தான் இவர் முதல் முறையாக 1998 ஆம் ஆண்டு உயிரே திரைப்படத்தில், என் உயிரே எனும் பாடலை இவர் சுஜாதா மோகன் உடன் பாடியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பல திரைப்பட பாடல்கள் இவர் பாடிக்கொண்டிருக்கிறார். அதற்குப் பிறகு பெற்றோர் சம்மதத்தில் திருமணமும் செய்து இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு இவருடைய வாழ்க்கையில் சில ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டிருக்கிறதாம்.

ஏர்போர்ட்டில் திடீரென்று மகனை கட்டிப்பிடித்து அழுத ராதிகா..காரணம் இதுதானா..?உருக்கமான வார்த்தை
இந்த மாதிரி நேரத்தில் தன்னுடைய மனைவி தனக்கு கொடுத்த ஆதரவால் தான் தன்னால் தொடர்ந்து இந்த பயணத்தை தொடர முடிந்தது என்று கூறி இருக்கிறார். அந்த நேரத்தில் இதுவெல்லாம் வேண்டாம் என்று என்னுடைய மனைவி கூறி இருந்தால் நான் அப்போதே வேறு வேலையை பார்த்து இருப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.
ஆரம்பத்தில் திருமணத்தின் போது வேறு வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். ஆனால் அந்த வேலையை ரிசைன் செய்து விட்டு தான் இவர் பாடகராக மாறி இருக்கிறார். அப்போது இவர் எடுத்த முடிவுக்கு சொந்த பந்தங்கள் எல்லாம் என்ன இவர் இப்படி செய்து விட்டார் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தாளாம். குறிப்பாக அவருடைய அப்பா கூட பேசி இருக்கிறார்.
ஆனால் ஸ்ரீனிவாஸ் மனைவியான சுஜாதா உங்களுக்கு பிடிச்சதை செய்றீங்க, என்ன வருதுன்னு பார்ப்போம் என்று கூறியிருந்தாராம். ஆனால் அந்த நேரத்தில் சுஜாதாவின் அம்மா கூட ரொம்பவே கோபப்பட்டாராம். இவர் நல்ல வேலையில் இருந்து விட்டு எதற்காக இப்படி செய்ய வேண்டும் என்பதுதான் பலருடைய கேள்வியாக இருந்ததாம். ஆனால் எப்போதும் சந்தோஷமாகவே இருக்கும் ஸ்ரீனிவாஸ் கண்டிப்பா அவர் ஆசையை கெடுக்க வேண்டாம் என்று அவருடைய மனைவி கூறியிருந்தாராம்.

அதற்கு ஸ்ரீனிவாஸ் ஆமாம் அந்த நேரத்தில் நாங்கள் லவ் மேரேஜ் பண்ணி இருந்தா கூட என்னுடைய மனைவி இதை செய்ய வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் நாங்கள் திருமணத்திற்கு பிறகு காதலித்ததால் அப்படி என்னை எந்த இடத்திலையும் நிர்பந்திக்கவில்லை. அதனால் தான் என்னால் இத்தனை சாதனைகளை செய்ய முடிந்தது என்று கூறியிருக்கிறார்.
இத்தனை வருடங்களில் ஸ்ரீனிவாசுக்கு என் மீது கோபம் வருது என்றால் வீடு கிளீனாக இருக்க வேண்டும். அந்த ஒன்றுக்காக மட்டும்தான் அவர்களுக்கு கோவம் வரும். அதுவும் கொஞ்ச நேரம் தான் இருக்கும். பிறகு சரியாகிவிடும் மத்தபடி அவர் ரொம்பவே கூலான ஆளு தான் என்று அவருடைய மனைவி பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications