ஏர்போர்ட்டில் திடீரென்று மகனை கட்டிப்பிடித்து அழுத ராதிகா..காரணம் இதுதானா..?உருக்கமான வார்த்தை
சென்னை: ராதிகா சரத்குமார் தன்னுடைய மகனை ஏர்போர்ட்டில் கட்டிப்பிடித்து அழுத வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தன்னுடைய மகன் வெளிநாட்டிற்கு திரும்பி செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் ராதிகா இருந்திருக்கிறார்.
நடிகை ராதிகா தன்னுடைய மகனைப் பற்றி பல தகவல்களை உருக்கமாக பேசியிருக்கிறார்.

வெள்ளி திரைகளிளும், சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்து வரும் நடிகை ராதிகா சரத்குமார் படு பிஸியாக இருந்து வருகிறார். பல முன்னணி நடிகர்களோடு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல மீண்டும் தற்போது சின்ன திரையில் சீரியல் இயக்கியும் நடிக்கவும் தொடங்கி இருக்கிறார்.
சீரியல் ஒளிபரப்புவதற்கு முன்பே சஞ்சீவ் விலக காரணம்..? இத்தனை பிரச்சனைகள் இருக்கிறதாம்..!?
இந்த நிலையில் சிங்கப்பூரில் படிக்கும் தனது மகனை வழி அனுப்புவதற்காக ஏர்போர்ட் சென்ற ராதிகா மகனை பிரிய முடியாமல் அங்கேயே கட்டிப்பிடித்து கண் கலங்கி அழுகிறார். நடிகை ராதிகாவிற்கும் நடிகர் சரத்குமார்க்கும் கடந்த 2001 ஆம் ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு ராகுல் என்ற மகனும் பிறந்தார். இந்த நிலையில்தான் ராகுல் சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருந்தனர். இந்த நிலையில் இதை குறித்து பதிவிட்ட ராதிகா யுனைடெட் வேர்ட்ஸ் காலேஜ் ஆப் சவுத் ஈஸ்ட் ஆசியா என்ற கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பட்டப்படிப்பை முடித்து தங்கள் மகனும் பட்டம் பெற்றதை நினைத்து பெருமையாக இருக்கிறது.

ஒரு சிறுவனாக பள்ளியில் சேர்ந்ததிலிருந்து பொறுப்பான வயது வந்த இளைஞராக மாறியதை நினைத்து நானும் சரத்குமாரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம். ராகுலின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் எங்கள் இருவருக்கும் பெருமை என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த நிலையில் சிங்கப்பூரில் இரந்து விடுமுறைக்கு வந்திருந்த தன்னுடைய மகன் மீண்டும் ஊருக்கு கிளம்பி போகும்போது உணர்ச்சிவசப்பட்டு ராதிகா அழுத வீடியோவை தற்போது சமூக வலைத்தளத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
ராதிகா என்ன தான் சினிமாக்களில் தன்னுடைய நடிப்பால் பலருடைய மனதை கவர்ந்திருந்தாலும் நிஜ வாழ்க்கையிலும் அம்மாவின் பாசத்தை மறைக்கவும் மறுக்கவும் முடியாது என்று பொதுவெளியில் காட்டி இருக்கிறார் என்று பலர் கூறி வருகின்றனர்.
-
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்











Click it and Unblock the Notifications