சீரியல் ஒளிபரப்புவதற்கு முன்பே சஞ்சீவ் விலக காரணம்..? இத்தனை பிரச்சனைகள் இருக்கிறதாம்..!?
சென்னை: நடிகை ராதிகாவின் தயாரிப்பில் விரைவில் கிழக்கு வாசல் எனும் சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த சீரியலுக்கான சூட்டிங் தொடங்கப்பட்டு இருக்கும் நிலையில் இதில் கதாநாயகனாக நடிகர் சஞ்சீவ் நடிக்க இருக்கிறார் என்ற புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் திடீரென்று சஞ்சீவ் சீரியலை விட்டு விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் அடுத்தடுத்து பல சீரியல்கள் முடிவுக்கு வர இருக்கிறது. குறிப்பாக ராஜா ராணி 2 மற்றும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலுக்கு பதிலாக புது சீரியல்கள் விஜய் டிவியில் அறிமுகமாக இருக்கிறது. அதில் நடிகை ராதிகா நடித்து தயாரிக்கும் கிழக்கு வாசல் என்ற சீரியலும் இடம் பிடித்திருக்கிறது.
நடிகை ராதிகா சில நாட்களுக்கு முன்புதான் கிழக்கு வாசல் சீரியலின் பூஜை போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தார். ரசிகர்களும் அதிகமானோர் இதற்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த சீரியலில் முக்கியமான கேரக்டரில் ராதிகாவும் நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குனர் சந்திரசேகரும் இதில் நடிக்கிறார்கள் என்றும் கதாநாயகியாக ரேஷ்மா முரளிதரன் மற்றும் கதாநாயகனாக சஞ்சீவ் நடிப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் திடீரென்று சஞ்சீவ் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார் என்றும் தற்போது ஒரு வாரமாக இந்த சீரியலுக்கான சூட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்றும் தற்போது சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் தான் சஞ்சீவ் என்பது பலருக்கும் தெரியும்.
அதே நேரத்தில் நடிகர் விஜய் மற்றும் அவருடைய தந்தையான சந்திரசேகருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் தற்போது சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வரும் நிலையில் அதன் காரணமாக இருக்குமோ என்று ஒரு தரப்பினர் கேள்விகளை எழுப்ப, இன்னொரு தரப்பினர் இல்லை கதாநாயகி ரேஷ்மாவிற்கும் சஞ்சீவ்க்கும் ஜோடி பொருத்தம் அவ்வளவாக நல்லா இல்லை என்று ஆரம்பத்திலேயே அதிகமான மீம்ஸ்கள் வெளியாகிவிட்டது. அதன் அடிப்படையில் இந்த மாற்றம் நடந்து இருக்கலாம் என்றும் தங்களுடைய கருத்துக்களை தட்டி விடுகின்றனர்.

இந்த நிலையில் இந்த இரண்டும் இருக்க வாய்ப்பே இல்லை. இந்த சீரியலை விட்டு நான் போகிறேன் என்று இப்ப வரைக்கும் சஞ்சீவ் எந்த தகவலையும் கூறாமல் இருக்கும் நிலையில் சஞ்சீவ் இந்த சீரியலில் தான் தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. அதே நேரத்தில் ஆரம்பத்தில் இவருடைய எபிசோடுகள் வராமல் கூட இருக்கலாம். அதனால் இவர் சூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் இருக்கலாம் என்றும் சில ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் இன்னும் சில நாட்களில் இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கிவிடும். அதன் பிறகு தெரியும் இதில் கதாநாயகன் நிஜத்தில் மாற்றப்பட்டு இருக்கிறாரா? அல்லது சஞ்சீவ் தான் கதாநாயகனா? என்று தகவல்களும் விரைவில் வெளியாகி விடும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
நடிகர் தியாகராஜனுக்கு கார் ஷோரூமில் நடந்த அவமானம்! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்கலையே! நெகிழ வைத்த தருணம் -
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி












Click it and Unblock the Notifications