ஒரு மாதத்திற்கு முன்னால் தான்.. ஆனால் இப்போ? மறைந்த ரமணி அம்மாள் குறித்து பாடகர் ஸ்ரீநிவாஸ் உருக்கம்
சென்னை: பாடகி ராக்ஸ்டார் ரமணி அம்மாள் திடீர் மரணம் தமிழ் திரை உலகில் பலரையும் அது சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
ரமணி அம்மாள் இறுதி ஊர்வலத்தில் பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர். பலரால் கலந்து கொள்ள முடியாமல் சமூக வலைத்தளத்தில் இரங்கல் செய்திகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாடகர் ஸ்ரீ நிவாஸ் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
திடீர் இறப்பு:
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சரிகமப பாடல் நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமடைந்து இருந்தாலும் முதல் சீசன் நிகழ்ச்சியில் பலரையும் வியக்க வைத்த ஒரு போட்டியாளர் என்றால் அது ரமணி அம்மாள் தான். 63 வயதில் இளம் பாடகர்களோடு போட்டி போட்டு கடைசியில் வெற்றி பெற்று இருந்தார். இவர் தற்போது உடல்நல குறைவால் காலம் ஆகி இருக்கிறார்.இந்த செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ராக் ஸ்டார் ரமணி அம்மாள் என பிரபலமாக அறியப்பட்ட இவர் ஒரு நாட்டுப்புற பாடகி தான்.
பாடகர் ஸ்ரீ நிவாஸ் பதிவு:
இந்த நிலையில் ராக்ஸ்டார் ரமணி அம்மாளின் இறப்பிற்கு பலரும் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவருடைய இறப்பில் இருந்து அதிர்ச்சியில் மீள முடியாத பாடகர் ஸ்ரீநிவாஸ் தன்னுடைய சமூக வலைத்தள பகுதியில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், ராக்ஸ்டார் ரமணியம்மா இனி இல்லை.. மேடையில் மட்டுமல்ல வெளியிலும் உண்மையான ராக்ஸ்டார் தான். மாம்பல வீடுகளில் வீட்டு உதவியாளராக இருந்தவர். ஆனால் சரிகமபவிற்கு வந்தாலும் இசையின் நெருப்பு அவருக்குள் மங்கவே இல்லை.

ராக்ஸ்டார் ரமணியம்மாள்:
63 வயதில் நன்றாக பாடத் தெரிந்ததால் இறுதிப் போட்டிக்கு வந்தார். ஆனால் அர்ச்சனாவை ராக் ஸ்டார் என்று அழைக்க வைத்தது அவரது வாழ்க்கையும் ஆளுமையும் தான். எனக்கு இவ்வளவு போதும் சார். சரிகமபவில் அவர் பெற்ற பிரபலத்திலிருந்து அவர் வீட்டு உதவியாளராக இருந்த சொர்ப பணத்தில் இருந்து அவர் சம்பளம் சற்று உயர்ந்தது. அவர் தனக்கு பிடித்த எம்ஜிஆர், கண்ணதாசன் பாடல்களை பாடி மேடை ஏறினார்.
ரமணி அம்மாளின் பதில்:
கண்ணதாசனின் தத்துவ பாடல்களில் பொதிந்த பேச்சை அப்படியே நடப்பார். அதனாலேயே ராக்ஸ்டார் ஆனார். சில மாதங்களுக்கு ஒரு முறை என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் விசாரிக்க எனக்கு போன் செய்வார். அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டால் பதில், பொதுவாக எனக்கு என்ன சார் நான் நல்லா இருக்கேன். ஜீ தமிழுக்கு நான் நன்றி மறக்கவே மாட்டேன் என்று கூறுவார்.
பிரியாவிடை
கடைசியாக அவர் அழைத்தது ஒரு மாதத்திற்கு முன்பு. அவரது பூரிப்பு எப்போதும் நம்பிக்கையான குரலாக இருக்கும். அவர் வந்தார், பாடினார், அவர் வசீகரித்தார், இப்போது அவர் போய்விட்டார், ரமணியம்மா உண்மையிலே கொண்டாடப்பட வேண்டிய வாழ்க்கை. இல்லாததை பற்றி கவலை இல்லாத வாழ்க்கை. இருப்பதைப் பற்றி கொண்டாடினார்.பிரியாவிடை அன்புள்ள ராக்ஸ்டார் என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications