Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளித் தட்டில் நடிகர்களின் மனைவிகள்.. பாடகி சுசித்ரா வீசிய வெடி! அப்ப விரிக்கப்பட்ட வலை அவருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு, நேற்றைய தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணாவும், ஸ்ரீகாந்த்தும், சட்டத்தின் முன்பு தண்டிக்கப்படுவார்களா? திரையுலகில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளிட்டவை குறித்து எழுத்தாளர் ராஜ கம்பீரன் பேட்டி ஒன்றில் விரிவாக கூறியிருக்கிறார்.. இந்த பேட்டிதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

சமீபத்தில் சேனல் ஒன்று பிரபல பாடகி சுசித்ரா தந்திருந்த பேட்டியில், "கேரக்டர் ரோல், ஐட்டம் பாட்டுக்காக இங்கே நடிக்க வரும் நடிகர்கள் போதைப்பொருள் கலாச்சாரத்தை தமிழ் திரைத்துறைக்குள் புகுத்திவிட்டனர்.. அவர்கள் இங்கே வெறும் நடிப்பதற்காக மட்டும் வருவதில்லை. இங்கு வந்து எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு, மும்பைக்கு போய்விடுகிறார்கள்.. ஆனால், இதை பற்றியெல்லாம் யாருமே பேசுவதில்லை..

Television Suchitra actors

குட்டையில் ஊறிய மட்டை

எல்லாரும் சினிமாவில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.. ஒரு கிராம் ரூ.12,000,ஒரிஜினல் கொக்கைன் ரூ.65,000 என்றெல்லாம் விற்பனையாகிறது. சென்னையில் ரிசார்ட்கள், பப்கள், பார்களில் இதெல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கிறது. பார்களிலுள்ள பாத்ரூம்களிலும் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.. 1 கிராம் கொக்கைனை எடுத்து 30 நொடி போதும். 'கங்குவா' படத்தில் கூட ஒரு சீனில் இப்படி சூர்யா செய்திருப்பார்..

கொகைனை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளுடன், எந்த நடிகர்களின் தோற்றம் ஒத்துப்போகிறதோ அவர்கள் எல்லாருமே கொக்கைனை பயன்படுத்துகிறார்கள்.. இதுக்கு மேல் அவர்களின் பெயர்களை எல்லாம் சொல்ல முடியாது.

நடிகர்களின் மனைவிகள்

நடிகர்களின் மனைவிகளே தற்போது பார்ட்டிகளில் ஊற்றிக் கொடுக்கிறார்கள்.. வெள்ளி தட்டுகளில் போதைப்பொருளை வைத்து, கோலம் வரைந்து கொண்டு வருவது போல, மறைமுகமாக ஈடுபடுகிறார்கள்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள எழுத்தாளர் ராஜகம்பீரன், போதைப்பொருள் விவகாரத்தில், ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போன்றோருக்கு விரிக்கப்பட்ட வலையே இது கிடையாது.. அதிமுகவை சேர்ந்த ஒருவர், போதைப்பொருளை விநியோகத்தில் இருப்பதாக தகவல்கள் வரவும், அவருக்காக விரிக்கப்பட்ட வலை இதுவாகும்.

விரித்த வலை யாருக்காக

அப்படி அவர்களுக்காக விரித்த வலையில், இந்த நடிகர்கள் வந்து மாட்டிக் கொண்டார்கள்.. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், செல்போனில் யார் என்ன பேசினாலும், என்ன அழித்தாலும், எல்லா டேட்டாக்களையும் போலீசாரால் எடுக்கமுடியும். ஒவ்வொருவரின் தனிப்பட்ட அந்தரங்கங்களும், அவர்களது செல்போனில்தான் உள்ளது..

கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் இருவருமே ஆளுக்கொரு வெற்றிப்படத்தை தந்துவிட்டு, சினிமாவில் முன்னுக்கு வர போராடி கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு இந்த வேலை தேவையா? என்று ரசிகர்கள் கேட்கிறார்கள்.. ஒருவரை பார்த்து கிரிமினல் என்று அச்சப்படுவதற்கு பதிலாக, ஸ்ரீகாந்தை பார்த்தால் பாவமாக இருக்கிறது, கிருஷ்ணாவை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது என்று பொதுமக்களே சொல்கிறார்கள்.

கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்

இதில் ஸ்ரீகாந்த், தன்னுடைய குற்றத்தை நேர்மையாக ஒப்புக் கொண்டுவிட்டார்.. ஆனால், கிருஷ்ணா ஓடிஒளிந்தார்.. தான் எந்த தவறும் செய்யவேயில்லை என்றார், செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்தார்.. எல்லா மெசேஜ்களையும் அழித்தார்.. இறுதியில் வசமாக சிக்கிவிட்டார். இதிலிருந்து வெளியே வந்து, எப்படி சக்ஸஸ் செய்ய போகிறார்கள் என்பது, ஒரு சவாலான விஷயம்தான்.

அந்த காலத்திலிருந்தே, சினிமாவை அசலாக நம்புகிறவர்களும் உண்டு.. சினிமாவில் ஹீரோ என்றால் நிஜத்திலும் ஹீரோ, சினிமாவில் வில்லன் என்றால் நிஜத்திலும் வில்லன் என்ற பார்வை மக்களிடம் எம்ஜிஆர் காலத்திலிருந்தே உண்டு..

சத்யராஜ், பிரகாஷ்ராஜ்

வில்லன் நடிகர்களாக இருக்கிறவர்கள் சமூக அக்கறை மிக்கவர்களாக இருக்காங்க..
ஈழத்தில் கடைசி யுத்தம் நடந்தபோதெல்லாம், மருந்துகளை அனுப்பி, மனிதாபமான உதவிகளை செய்தது, மன்சூர் அலிகான்தான் என்று தமிழ் தேசிய ஆதரவாளர்களே சொல்கிறார்கள்..

சொல்லில் அடங்காத உதவிகளை செய்த சத்யராஜ், அதை விளம்பரப்படுத்தியதே கிடையாது.. அரசாங்கம் எந்த தவறு செய்தாலும், ஓங்கியடித்து அதற்கு எதிரான குரல் கொடுக்ககூடியவர் பிரகாஷ்ராஜ்.. தனிமனித ஒழுக்கத்துக்கு சான்றாக நம்பியார் இருந்துள்ளார்.. இப்படி வில்லன் நடிகர்களின் மறுபக்கம் வியக்க வைக்கக்கூடியதாக உள்ளது..

பாடகி சுசித்ரா

பாடகி சுசித்ரா தன்னுடைய பேட்டிகளில், இவங்க 2 பேரும் ஈஸியா மாட்டிக்கிட்டாங்க.. சினிமாவில் பெரிய தலைகள் மாட்டுவார்களா? என்று கேட்டிருந்தார்.. சுசித்ரா அப்படி கேட்டதுமே மக்களுக்கும் இப்படியொரு சந்தேகம் வந்துள்ளது.. வாய்ப்பு இல்லாத 2 நடிகர்களை பிடித்த காவல்துறை, உச்ச நடிகர்கள் மீதும் நீங்கள் கை வைப்பீங்களா? என்று கேட்கிறார்கள்.

எல்லாருமே விஐபிகள்.. பெரிய இடத்து ஆட்கள்.. அரசாங்கமே ஆதாரங்களை இல்லாமல் செய்து, அந்த விஐபிகளை காப்பாற்றிவிடுவார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு.. எப்போதுமே பிரபலமானவர்கள் என்றாலே, அவர்களது தவறும் சேர்ந்து பிரபலமாகிவிடும்..

கிருஷ்ணாவும், ஸ்ரீகாந்த்தும், சட்டத்தின் முன்பு தண்டிக்கப்படுகிறார்களா? அல்லது கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுகிறார்களா? என்பது நீதிமன்றம் சம்பந்தப்பட்டது. இதற்கும் அரசாங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. இதிலெல்லாம் அரசாங்கமும் தலையிடாது..

மற்ற பிரபலங்களும் மாட்டுவார்களா?

சினிமா நடிகர்களும் சம்பந்தப்பட்டிருப்பார்களா? என்று பேசப்பட காரணம், இவர்களை எல்லாம் ரசிகர்கள் தங்களது ரோல்மாடலாக பார்ப்பதால்தான். ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு 15 நாளில் ஜாமீன் கிடைத்துள்ளது போல, சாமானியனுக்கும் 15 நாளில் ஜாமீன் கிடைக்கும். ஆனால், அது செய்தியாக மாறாது.

குறைந்தபட்சமாக போதையை பயன்படுத்தியிருந்தால், இந்த வழக்கிலிருந்து தப்பித்துவிடுவார்கள்.. குறைந்தபட்சம் தனிப்பட்ட உபயோகத்துக்கு பயன்படுத்தியிருந்தால் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இந்த வழக்கிலிருந்து தப்பித்துவிடுவார்கள்.. ஆனால், வணிக ரீதியாகவும், அதிக பட்சமாகவும் பயன்படுத்தியிருந்தால், 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனை உறுதி" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+