இரண்டு முறை அபார்ஷன்..ஒரே மகளுக்கு இதை செய்ய முடியவில்லை.. வருத்தத்தை பகிர்ந்த பாடகி சுஜாதா மோகன்
பாடகி சுஜாதா மோகன் தன்னுடைய மகள் ஸ்வேதா மேகனுக்கு சில விஷயங்களை செய்ய முடியாமல் போய்விட்டது என்று வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: பிரபல பாடகி சுஜாதா மோகன் தன்னுடைய மகள் ஸ்வேதா மோகன் குழந்தையாக இருக்கும்போது சில விஷயங்களை அவருக்காக செய்ய முடியாமல் ஆகிவிட்டது என்று வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்.
பல திரைப்படங்களில் பின்னணி பாடகியாக பாடி இருக்கும் சுஜாதா மோகன் மகள் ஸ்வேதா மோகன் ஒரு பாடகித்தான்.
பாடகி சுஜாதாவிற்கு இரண்டு முறை அபார்ஷன் ஆகி அதற்குப் பிறகு பிறந்த ஒரே மகள் ஸ்வேதா தானாம்.

சிறுவயதில் திருமணம்
பாடகி சுஜாதா ஆறாம் வகுப்பு படிக்கும் போது தன்னுடைய பாடல் திறமையை உலகத்திற்கு நிரூபிக்க தொடங்கி இருக்கிறார். இதுவரைக்கும் கிட்டத்தட்ட அவர் 2000க்கும் மேற்பட்ட பாடல்களை சுஜாதா பாடி இருக்கிறார். இவருக்கு இவருடைய கணவரோடு 17 வயதிலேயே திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாம். பிறகு 18 வயது முடிவடைந்ததும் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். குடும்பத்தினர் சம்பந்தத்தால் இவர்கள் திருமணம் நடைபெற்றதாம். சுஜாதாவின் அப்பா சிறு வயதிலேயே இறந்து விட்டதால் ஒரு பாடகியாக இருந்தாலும் அதிகமான கட்டுப்பாடுகளோடு தான் இருந்திருக்கிறார். அதனாலேயே இவருக்கு சிறுவயதிலேயே திருமணத்தை செய்து வைத்திருக்கிறார்கள்.

ஒரே மகள்
பாடகி சுஜாதாவின் கணவர் ஒரு மருத்துவர் குழந்தைகள் நல நிபுணராக இருந்து வருகிறார் இவர்கள் இருவரும் குடும்ப நண்பர்களாக இருந்த நிலையில் சுஜாதாவிற்கு இரண்டு முறை அபார்ஷன் ஆகிவிட்டதாம். அதற்கு பிறகு தான் பாடகி சுவேதா பிறந்திருக்கிறார். சுஜாதாவிற்கு ஸ்வேதா ஒரே மகளாக இருந்து வருகிறார். ஏற்கனவே சுஜாதாவும் அவருடைய அம்மாவிற்கு ஒரே மகள் தான். இந்த நிலையில் குழந்தையாக இருக்கும் போது ஒரு அம்மாவாக என்னால் பல கடமைகளை நிறைவேற்ற முடியாமல் ஆகிவிட்டது என்று உருக்கமாக கூறியிருக்கிறார். ஸ்வேதா பிறந்த பிறகு தொடர்ச்சியாக அதிகமான பாடல் வாய்ப்புகள் சுஜாதாவிற்கு கிடைத்த வண்ணமாகவே இருந்ததாம்.

அதற்கான மாற்று வழி
அதனால் ஸ்வேதா ஸ்கூல் படிக்கும்போதும் காலேஜ் படிக்கும்போதும் அவர்களுடைய ஸ்கூல் ஃபங்ஷன், காலேஜ் ஃபங்ஷன், ஸ்போர்ட்ஸ் பங்க்ஷன் என எதிலும் எங்களால் கலந்து கொள்ள முடியாமல் ஆகிவிட்டது. அது இப்போது நினைத்தாலும் அது வருத்தமாக தான் இருக்கிறது. எங்களை அந்த நேரங்களில் அதிகமாக ஸ்வேதா மிஸ் பண்ணுவார். ஆனால் எங்களால் அந்த நேரங்களில் அவளோடு இருக்க முடியவில்லை. அதற்கு இப்போது நான் மன்னிப்பு தான் கேட்க முடியும். வேறு ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியிருக்கும் சுஜாதா அதற்கு எல்லாம் ஈடு செய்யும் வகையில் தற்போது ஸ்வேதாவின் மகளை பராமரித்து வருவது எங்களுடைய வேலையாகத்தான் இருக்கிறது. அதை நாங்கள் சந்தோஷமாக செய்கிறோம் என்று கூறியிருக்கிறார். ஸ்வேதா வெளிநாட்டில் இருக்கும் நிலையில் சுஜாதா தான் அவருடைய மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று கூட்டி வருவது என எல்லாவற்றையும் பார்த்து வருகிறாராம். தற்போது பேட்டி ஒன்றில் இதைப் பற்றி பேசியிருக்கிறார்கள்.

நடுவர்
பாடகி சுஜாதா திரைப்படங்களில் அதிகமான பாடல்களை பாடி இருந்தாலும் விஜய் டிவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 2,3, 4 என தொடர்ந்து இவர்தான் ஜட்ஜ் ஆக இருந்து வந்தார். அது மட்டும் அல்லாமல் ஜீ தமிழில் சரிகமப சாம்பியன்ஸ், சரிகமப சீனியர் சீசன் 2 போன்ற நிகழ்ச்சிகளிலும் ஜட்ஜ் ஆக கலந்து கொண்டு இளம் பாடகர்களை உருவாக்கி கொண்டிருக்கிறார். குழந்தைகளோடு குழந்தைகளாக இவர் மாறி கலகலப்பாக பேசி ரசிகர்களை மேலும் கவர்ந்திருக்கிறார். ரசிகர்களின் மனம் கவர்ந்த பல பாடல்களில் இவர் பாடிய முதல் பாடலான புது வெள்ளை மழை பாடல் இப்ப வரைக்கும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் காதல் பாடலாக இருந்து வருகிறது.
-
காதல் தோல்வி.. வலியை உருக்கமாக பகிர்ந்த அர்ஜுன் தாஸ்.. மிரட்டிய வில்லன் நிலைமை இதுவா? குவியும் கமெண்ட்ஸ் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications