பாடகி ஸ்வாகதா- க்கு பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்.. ஜேம்ஸ் வசந்தன் சொன்ன அதிர்ச்சி விஷயம்
சென்னை: பிரபல பாடகி ஸ்வாகதா தனக்கு ஒரு இசையமைப்பாளர் கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக பேசியது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதற்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வெளிப்படையாக குரல் கொடுத்திருப்பது இந்த விவகாரத்தை இன்னும் தீவிரமாக்கியுள்ளது.

மதுரை பொண்ணு
மதுரையில் பிறந்து வளர்ந்த ஸ்வாகதா, சிறு வயதிலேயே இசையை கற்றுக்கொண்டு பின்னர் சினிமாவில் தனது குரலால் தனி இடத்தை பிடித்தவர். 200-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள அவர், காற்றின் மொழி, நோட்டா போன்ற படங்களில் தனது குரலில் பாடல்கள் பாடி இருக்கிறார். அதுபோல பல மேடை நிகழ்ச்சிகளிலும் பாடல்கள் பாடி இருக்கிறார். இவ்வளவு சாதனைகள் செய்த பிறகும், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு கடுமையான அனுபவத்தை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
பாடகி ஸ்வாகதா பேட்டி
ஒரு யூடியூப் பேட்டியில் பேசும் போது, தன்னுடன் பணியாற்றிய ஒரு இசையமைப்பாளர் தான் மீது பாலியல் வன்முறை நடத்தியதாக அவர் கூறினார். சம்பளம் கூட சரியாக வழங்காமல், மாறாக பணம் வாங்கியதோடு மட்டுமல்லாமல், தன்னை பாலியல் தொந்தரவு செய்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டல்களும் விடுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விஷயம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அனுபவத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி, ரிஷிகேஷில் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளதாக ஸ்வாகதா தெரிவித்துள்ளார். ஆனால், நடந்ததை மறந்து விடமாட்டேன், சட்டப்படி போராடுவேன் என்ற உறுதியும் அவர் பேச்சில் தெளிவாக தெரிகிறது.

யார் அந்த இசையமைப்பாளர்?
இந்த வீடியோ வெளியாகியதும், சமூக வலைத்தளங்களில் இது வேகமாக பரவியது. "அந்த இசையமைப்பாளர் யார்?" என்ற கேள்வி பலரிடமும் எழுந்தது. இதே நேரத்தில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அந்த பாடகி பேசிய வீடியோவை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து ஒரு நீண்ட பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

ஜேம்ஸ் வசந்தன் பதிவு
அதில் அவர் கூறியதாவது, இதைப் பெரிய அளவில் பரப்புங்கள்! இன்னொரு இசையமைப்பாளரின் பேரைக்கெடுக்கவோ, தொழில் பொறாமையாலோ அல்ல. இதில் ஸ்வாகதாவின் ஒரு கூற்றை கவனியுங்கள். "அந்த இசையமைப்பாளரின் காமவேட்டை இன்றும் தொடர்கிறது. பல இளம் பெண்களுக்கு இந்த அவலம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது." என்று சொல்லி இருக்கிறார்
அந்தப் பலிகள் தொடர்வதை உடனே நிறுத்தவும், பெண்கள் காப்பாற்றப்படவும் அவர் யார் என்பது உலகுக்குச் சொல்லப்பட வேண்டும். ஆனால் ஸ்வாகதாவை பேரைச் சொல்ல நாம் வற்புறுத்த முடியாது. ஆனால் அவர் தேவையான எல்லாக் குறிப்புகளையும் தெளிவாகச் சொல்லிவிட்டார். இந்த நேர்காணலின் கீழே உள்ள கருத்துகளில் பலரும் அவர் பெயரை ஊகித்துவிட்டனர். காவல்துறை ஒருசில நிமிடங்களில் இவரைக் கண்டுபிடித்து கைதுசெய்ய முடியும்.
#AbuserMusicDirector #TNPolice #Womenscommission #metoomovement என்று அந்த பதிவில் ஜேம்ஸ் வசந்தம் குறிப்பிட்டு இருக்கிறார்.
இது ஒரு தனிப்பட்ட குற்றச்சாட்டு மட்டுமல்ல, பெரிய சமூக விவாதமாக மாறி வருகிறது. ஸ்வாகதாவின் குரல், இன்னும் பலர் பேச தைரியம் தருமா என்பது தான் இப்போது அனைவரும் கவனித்து பார்க்கும் விஷயம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications