பாலியல் தொல்லை கொடுத்த அந்த இயக்குனர் யார்? பாடகி ஸ்வாகதா வெளியிட்ட திடீர் பதிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களைப் பாடி ரசிகர்களிடம் தனித்த இடம் பிடித்துள்ள பாடகி ஸ்வாகதா, சமீபத்தில் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஒரு பேட்டியில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து பேசியிருந்த அவர், இப்போது நேரடியாக போராட்டத்திற்கு தயாராக இருப்பதை இந்த பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

Swagatha Tamil Cinema Harassment Issue

வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு

ஸ்வாகதா தனது பதிவில் உணர்ச்சிபூர்வமாக கூறியிருப்பது கவனத்தை ஈர்க்கிறது. அந்த பதிவில், பல ஆண்டுகளாக தன்னுள் இருந்த வேதனையை சமாளிக்க முயற்சி செய்ததாகவும், அந்த காயங்களில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேவியின் அருளால் தன்னுள் புதிய தைரியம் உருவாகியுள்ளதாகவும், இனி அமைதியாக இருக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதிலும் முக்கியமாக, தனக்கு எதிராக நடந்த அநியாயங்களுக்கு எதிராக "மகிஷாசூரமர்த்தனம்" போன்ற ஒரு போராட்டத்தை தொடங்கப்போகிறேன் என அவர் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. "Justice is due" (#justiceisdue) என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தியிருப்பதும், சட்டரீதியான நடவடிக்கைக்கு அவர் தயாராக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

அதிர்ச்சி குற்றச்சாட்டு

ஸ்வாதகா சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ஒரு பிரபல இசையமைப்பாளரால் தன்னுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக ஸ்வாகதா கூறியிருந்தார். ஆனால், அந்த நபரின் பெயரை அவர் சொல்லவில்லை.

இந்த சம்பவம் தான் தனது வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், அதனால் தமிழ் சினிமாவிலிருந்து விலகி வட இந்தியாவில் வாழ தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அந்த பேட்டிக்குப் பிறகு தற்போது வந்துள்ள இந்த இன்ஸ்டாகிராம் பதிவு, அவர் அந்த விஷயத்தில் மௌனமாக இருக்காமல் நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சட்ட போராட்டமா?

இந்த பதிவை தொடர்ந்து, ஸ்வாகதா விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை ஆரம்பிக்கக்கூடும் என்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் குறிப்பிட்ட "போராட்டம்" மற்றும் "மகிஷாசூரமர்த்தனம்" என்ற வார்த்தைகள், நீதி கிடைக்கும் வரை போராடத் தயார் என்ற உறுதியை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

Swagatha Tamil Cinema Harassment Issue

ஆதரவும் கேள்விகளும்

இந்த விவகாரம் குறித்து பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சிலர், பாதிக்கப்பட்டவர் தைரியமாக முன்னுக்கு வருவது முக்கியம் என்று கூறி பாராட்டுகின்றனர்.

அதே நேரத்தில், "அந்த இசையமைப்பாளர் யார்?" என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மறைமுகமாக பேசாமல் உண்மையை வெளிப்படுத்த வேண்டும், ஏற்கனவே ஸ்வாகதா பேசும் போது, இப்ப வரைக்கும் அந்த இயக்குனரால் பல பெண்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். அப்படிப்பட்ட இயக்குனர் பெயரை அவர் வெளியே சொன்னால்தானே பல பெண்களை பாதுகாக்க முடியும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Swagatha Tamil Cinema Harassment Issue

பெரிய விவாதமாக மாறும் விஷயம்

சினிமா துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து ஏற்கனவே பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஸ்வாகதா எழுப்பிய இந்த விஷயம் மீண்டும் அந்த விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

அவர் அடுத்தடுத்து எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? உண்மைகள் வெளிச்சத்திற்கு வருமா? என்பது தற்போது அனைவரும் கவனித்து வரும் முக்கிய கேள்வியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+