வேடனை துளைத்த அம்புகள்.. ஒடுக்கப்பட்ட பாடகனின் நெறிபடும் குரல்வளை.. மொத்தமா திரண்ட கட்சிகள்: பிரபலம்
சென்னை: வேடன் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திலிருந்து வந்தவர், சின்ன வயதிலேயே பல உரிமைகளை இழந்தவர் என்பதால், அவரது பாடல்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளையே பாட துவங்கினார். ஒரு தனி நபராக ரேப் நிகழ்ச்சிகளை நடத்தி, கோடிக்கணக்கில் ரசிகர்களை திரட்டியிருக்கிறார்.. வேடனுக்காக தங்கள் உயிரையும் தருவோம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ரசிகர்கள் அவரை விரும்புகிறார்கள் என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருப்பதால், அவரது குரல்வளையை நெறிக்க பார்க்கின்றன அரசியல் கட்சிகள்.

அவரது அம்மா ஜாப்னாவில் பிறந்தவர், ஈழத்து பெண்மணி.. அகதியாக தமிழகத்துக்கு வந்தார்.. ஊட்டியில் சில காலம் வேலை பார்த்துவிட்டு, கேரளாவில் செட்டில் ஆகிவிட்டார்.. அங்கே முரளிகிருஷ்ணா என்ற கேரள நபரை திருமணம் செய்துகொண்டார்.. இவர்களுக்கு பிறந்தவர்தான் வேடன்.
பெயர்க்காரணம்
வேடன் என்ற பெயரே வேடிக்கையானது.. அவரது இயற்பெயர் கிரண்தாஸ்.. ஆரம்பக்கட்டத்தில் கேரள கரையோரத்தில் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தபோது, கப்ப கிழங்கும், மீனும்தான் இவர்களின் பிரதான உணவாக இருந்துள்ளது..
பொதுவான மீனை வலைவீசி பிடிப்பார்கள்.. ஆனால், கிரண்தாஸ், அம்பு வைத்தும் மீனை பிடிப்பாராம்.. சரியாக மீனை குறிபார்த்து அம்புகளில் பிடித்து வேட்டையாடியதால், நண்பர்கள் அவரை வேடன் என்று செல்லமாக அழைத்துள்ளனர்.. அதுவே அவரது பெயராக நின்றுவிட்டது.
உரிமைகளை இழந்தவர்
வேடன் நன்றாக எழுதுவார்.. ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய எழுத்துக்களில் புரட்சிகரமான எழுத்துக்களை சொல்லி வந்தநிலையில், பிறகுதான் ராப் பாடல்களை தன்னுடைய 25 வயதிலிருந்து பாட துவங்கினார்..
வேடன் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திலிருந்து வந்தவர், சின்ன வயதிலேயே பல உரிமைகளை இழந்தவர் என்பதால், அவரது பாடல்களை ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளையே பாட துவங்கினார். தற்போது 29 வயதாகிறது.. இந்த 4 வருடமாகவே ஒரு தனி நபராக ரேப் நிகழ்ச்சிகளை நடத்தி, கோடிக்கணக்கில் ரசிகர்களை திரட்டியிருக்கிறார்.. வேடனுக்காக தங்கள் உயிரையும் தருவோம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ரசிகர்கள் அவரை விரும்புகிறார்கள்.
தப்பு செய்துவிட்டேன்
அடக்குமுறை, சாதி வேறுபாடுகள், சாதி கட்டமைப்புகளை தன்னுடைய புரட்சிகரமான கருத்துக்களை வேடன் சொல்வதால், சிலர் இதை விரும்பவில்லை.. இந்த நேரத்தில்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் நிகழ்ச்சியில் பாட சென்றபோது, அங்கே வேடனை சோதனை செய்து, கைது செய்தார்கள்.. அவரது கழுத்தில் செயினில் புலிப்பல் டாலர் இருப்பதாக கூறி மறுநாளே மீண்டும் கைது செய்தனர்.
புலிப்பல்லை கழுத்தில் மாட்டி கொள்ளலாமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதை அவர் மறுக்கவில்லை.. "ஆமா, நான் தெரியாமல் செய்துவிட்டேன்-. இனிமேல் இந்த தவறு செய்ய மாட்டேன்" என்று வெளிப்படையாக பதில் சொல்லவும், அந்த பதிலும் இளைஞர்கள் மத்தியில் வைரலானது.. இதனால் வேடனின் மதிப்பு மேலும் கூடியது.
மம்முட்டி, பிருதிவிராஜ்
கருப்பு உடை, கலைந்த தலைமுடியுடன் மேடையில் பாடுவார் வேடன்.. திடீரென சட்டையை கழட்டி கையாலேயே சுழட்டி, ஆக்ரோஷமாக பாடுவார்.. சிலசமயம், ஜாலியாக, கிண்டலாக பாடினாலும், தன்னுடைய கருத்துக்களை சரியாக பதிவு செய்து வருகிறார்.
வேடன் வளர்ந்துவிடக்கூடாது, ஆரம்பத்திலேயே அடக்கி வைக்கணும், ஒரு கட்டத்துக்குள் அடைக்க வேண்டும் என்று அரசியல் தரப்பினர் நினைத்தாலும், கோடிக்கணக்கான இளைஞர்களின் ஆதரவு மட்டுமல்லாமல், மம்முட்டி, பிருதிவிராஜ் போன்ற உச்ச நட்சத்திரங்களின் ஆதரவும் வேடனுக்கு கிடைத்து வருகிறது" என்றார்












Click it and Unblock the Notifications