பாடகி அனிதாவின் "பொசசிவ்".. முந்திரிக்காட்டில முருங்கைக்காய் பறிச்சீங்களே: புஷ்பவனம் குப்புசாமி கலகல
சென்னை: முதன்முதலில் பாடகராகத்தான் என் கணவரை பார்த்தேன்.,. பாடகராகவே அவரை விரும்பினேன். அதனால், பாடகராகவே இருக்கட்டும், எப்பேர்ப்பட்ட நல்ல கேரக்டர் என்றாலும் சினிமாவில் நடிக்க போக வேண்டாம் என்றேன்" என அனிதா குப்புசாமி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இந்த பேட்டிதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Galatta tamil யூடியூப் சேனலுக்கு நாட்டுப்புற மூத்த பாடகர்கள், புஷ்பவனம் குப்புசாமி மற்றும் மனைவி அனிதா குப்புசாமி, இருவரும் தங்கள் 2 மகள்களுடன் சேர்ந்து கலகல பேட்டி ஒன்றை தந்துள்ளார்கள்.. அப்போது, உங்கள் 2வது மகள் லவ் மேரேஜ் செய்தால் ஏற்பீர்களா? உங்கள் இருவரில் யாருக்கு அதிக பொசசிவ் என்றெல்லாம் தம்பதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு புஷ்பவனம் குப்புசாமி சொல்லும்போது, "திருமண விஷயம் என்றில்லை, என் மூத்த மகள் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாகவே இருக்கும். நான் அனிதாவை காதலிக்கும்போது, பீச்சுக்கு அழைத்து போனதில்லை.. சினிமாவுக்கும் போனதில்லை. ஓட்டலுக்கும் போனதில்லை.. எங்கேயுமே போனதில்லை.. ஆனால், கல்யாணம் செய்யும் முன்பிருந்தே, அனிதா மீது எனக்கு பொசசிவ் உண்டு.
அனிதா குப்புசாமி: அப்போது யூனிவர்சிட்டியில் படிக்கும்போது, அனிதா பின்னாடியே 4 பேர் வருவாங்க.. அனிதா பஸ்ஸில் போனாலும் அவங்களும் பஸ்லேயே போவாங்க.. யார் யாரெல்லாம் பஸ்ஸில் அனிதா பின்னாடியே போகிறார்கள் என்று நோட் செய்துகொண்டு, HOD கிட்ட சொல்லிடுவேன். உடனே HOD, அந்த பசங்களை கூப்பிட்டு, அனிதா பின்னாடி ஏன் போறீங்க?" என்று கேட்டு கண்டிப்பார்கள். எத்தனை பேர் அனிதாவை ஃபாலோ செய்து வந்தாலும். நான் அவங்களை போட்டு தந்துருவேன்" என்றார்.
அதேபோல, அனிதா குப்புசாமி சொல்லும்போது, "என் மூத்த மகள், லவ் பண்ணாலும், என்னுடைய சொந்தம், அல்லது என் கணவருடைய சொந்தம் வழியில் திருமணம் செய்து வைக்க நினைத்திருந்தேன். ஒரு கட்டத்தில் கல்யாணமே வேணாம்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாள்.. யாரையாவது லவ் பண்ணியாவது தொலையேன் என்று சொல்லிட்டேன்.
லவ் மேரேஜ்: ஒருவேளை என் மகள் யாரையாவது லவ் செய்திருந்தாலும், சரியான நபரையே தேர்ந்தெடுத்திருப்பாள். ஆனாலும், பெரிய மகளுக்கு நான்தான் மாப்பிள்ளை பார்த்தேன். 2வது மகள், லவ் மேரேஜ் செய்ய ஒத்துக்க மாட்டேன்.
என் கணவரிடம் பொசசிவ் எனக்கு குறைவுதான்.. இத்தாலி பெண்கள் ரொம்ப அழகா இருப்பாங்க.. சிசிலியில் நடந்த நிகழ்ச்சியில், என் கணவர் பாடி முடித்ததுமே, அங்கிருந்த இத்தாலி பெண், ஓடிவந்து இவரை கட்டிப்பிடித்து கொண்டாள்.. எங்களுக்கு மொழி தெரியவில்லை என்றாலும், குரலின் இனிமை, உணர்வுகளை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது என்று பூரித்து சொன்னாள்.
சிம்ரன் நடிகை: ஒரு பத்திரிகையில் விளையாட்டுக்கு என் கணவரிடம் கேட்டாங்க, நடிக்க வாய்ப்பு கிடைத்தால், எந்த நடிகையுடன் நடிக்க விருப்பம் என்று கேட்டார்கள், அதற்கு என் கணவர், சிம்ரன் என்று சொன்னார். அந்த பேட்டியை படித்து பார்த்ததுமே எனக்கு கோபம் வந்து, அந்த பத்திரிகையை தூக்கி எறிந்துவிட்டேன். சினிமாவில் நடிக்க கூப்பிட்டபோதுகூட, என் கணவரை வேண்டாம் என்று தடுத்தேன்.
ஏனென்றால், முதன்முதலில் பாடகராகத்தான் இவரை விரும்பினேன். அதனால், பாடகராகவே இருக்கட்டும், எப்பேர்ப்பட்ட நல்ல கேரக்டர் என்றாலும் நடிக்க போக வேண்டாம் என்று சொன்னேன். ஆனால், என்னை சமாதானப்படுத்திவிட்டு நடிக்க போனார்.
முருங்கைக்காய்: முதல் நாள் ஷூட்டிங்கில் என்ன நடந்தது? என்ன சீன் எடுத்தார்கள், என்று கேட்டேன். அதற்கு சரியாக பதிலே சொல்லவில்லை. இப்படியே தினமும் பதில் சொல்லாமலேயே இருந்தார். பிறகு யாரோ ஒருவர், "சார், முந்திரிக்காட்டில் முருங்கைக்காய் பறிச்சீங்களே? அந்த சீன் அருமையாக இருந்தது என்றார்கள். இதைக்கேட்டதுமே எனக்கு கோபம் வந்துவிட்டது. ஆனால், அந்த படத்தை நான் கடைசிவரை பார்க்கவே இல்லை" என்று கலகலவென நினைவுகளை பகிர்ந்து கொண்டார் அனிதா குப்புசாமி.












Click it and Unblock the Notifications