Single Pasanga: ஜீ தமிழ் ‘சிங்கிள் பசங்க’ டைட்டிலை தட்டி தூக்கிய கூமாபட்டி தங்கபாண்டி, ரன்னர் யார் தெரியுமா?
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அண்மைக்காலமாக அதிக கவனம் பெற்ற நிகழ்ச்சியாக 'சிங்கிள் பசங்க' இருந்தது. கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் ஒளிபரப்பைத் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, ஆரம்ப நாளிலிருந்தே இளைஞர்கள் மத்தியில் தனி வரவேற்பைப் பெற்றது.
வழக்கமான ரியாலிட்டி ஷோக்களை விட வித்தியாசமான கான்செப்ட், நகைச்சுவை, போட்டியாளர்களின் இயல்பான பேச்சு ஆகியவை நிகழ்ச்சிக்கு பெரிய பலமாக அமைந்தன. சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் பலரையும் இந்த நிகழ்ச்சியில் களம் இறக்கி இருந்தனர். அதோடு இந்த நிகழ்ச்சியில் காதல் கண்டன்டுக்கும், கவர்ச்சிக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்ததால் ட்ரோலும் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி மணிமேகலை தொகுத்து வழங்கினார். அவரது கலகலப்பான பேச்சு இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. நடுவர்களாக நடிகர் டி. ராஜேந்தர், நடிகைகள் ஆல்யா மானசா, கனிகா ஆகியோர் பங்கேற்று போட்டியாளர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து வந்தனர். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் பார்த்திபன் நடுவராக இருந்த பிறகு அவர் திடீரென இந்த நிகழ்ச்சியை விட்டு விலகிவிட்டார்.
'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில் சுரேஷ், திடியன், தமிழரசன், ஜிமிகிளி, விக்னேஷ், ராவணன், ராகவேந்திரா, சரவன், தங்கபாண்டி, புகழ் உள்ளிட்ட பலரும் போட்டியாளர்களாக பங்கேற்றனர். இவர்களுக்கு ஜோடியாக பல சீரியல் மற்றும் சமூக ஊடக பிரபலங்களும் இணைந்து போட்டிகளில் ஈடுபட்டனர். காதல், நட்பு, ஈகோ, போட்டி மனப்பான்மை என பல்வேறு உணர்ச்சிகள் கலந்த நிகழ்வுகள் இந்த நிகழ்ச்சியை ரசிகர்களிடம் மேலும் பிரபலமாக்கின.
அதே நேரத்தில், இந்த நிகழ்ச்சி சில சர்ச்சைகளையும் சந்திக்காமல் இல்லை. சில போட்டியாளர்களின் பேச்சு வரம்பு மீறியதாகவும், சில டாஸ்க்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து ஜீ தமிழ் தரப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. நடுவர்களின் கண்டிப்பான அணுகுமுறையும், டாஸ்க்களில் செய்யப்பட்ட திருத்தங்களும் விமர்சனங்களை ஓரளவு குறைத்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த Grand Finale இந்த வாரம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இறுதிப் போட்டியில் கடும் போட்டி நிலவிய நிலையில், கூமாம்பட்டி தங்கபாண்டி 'சிங்கிள் பசங்க' டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். கிராமத்து பின்னணி, எளிமையான அணுகுமுறை ஆகியவை அவருக்கு ரசிகர்களின் பேராதரவை பெற்றுத் தந்தன.

அதே நேரத்தில், தொடக்கம் முதல் இறுதி வரை வித்தியாசமான ஸ்டைலிலும் தீவிரமான போட்டி மனப்பான்மையிலும் விளையாடிய ராவண ராம் ரன்னராக தேர்வு செய்யப்பட்டார். இவரது ஆட்டமும், தன்னம்பிக்கையும் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றது.
மொத்தத்தில், 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சி ஜீ தமிழின் ரியாலிட்டி ஷோ பட்டியலில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. வெற்றி, சர்ச்சை, உணர்ச்சி, போட்டி என அனைத்தையும் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சி, இளைஞர்களின் மனதில் நீண்ட காலம் நினைவில் நிற்கும் ஒன்றாக அமைந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications