ஆயிரம் ரூபாயை கையில் கொடுத்து, அந்த இயக்குனர் சொன்ன வார்த்தை.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஓபன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கோமதி ப்ரியா தனக்கு ஆடிஷனில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் ஆரம்பத்தில் இயக்குனர் ஒருவர் தன்னுடைய கையில் ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து சொன்ன வார்த்தை குறித்து நெகிழ்ந்து பேசி இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் டிவி டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்களாக மாறி இருக்கிறார்கள். அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவரின் நிர்வாண வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பரபரப்பு ஏற்படுத்திய சம்பவம்
இந்த சீரியலில் ரோகிணி எப்போது மாட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த தருணமும் கடந்த வாரத்தில் நடந்தது. அதே நேரத்தில் நடிகையின் வீடியோவும் இணையத்தில் வெளியானதும் இந்த சீரியல் பற்றிய பேச்சு அதிகமானது. இதுவரைக்கும் இந்த சீரியலை பார்க்காத ரசிகர்கள் கூட இந்த சீரியலை பற்றி பேச தொடங்கி விட்டனர். வீடியோவில் இருப்பது நான் அல்ல அது ஏ ஐ என்பது போன்று அந்த நடிகை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.
வீடியோ சர்ச்சை
ஆனால் அதைத்தொடர்ந்து அடுத்த நாளே அவர் இருப்பது போன்று இன்னொரு வீடியோவும் வெளியானது. இதனால் இது நிஜ வீடியோவா அல்லது ஏஐ வீடியோவா? ஒருவேளை ஏஐ வீடியோ என்றால் அதனை உருவாக்கியவர் மீது அந்த நடிகை ஏன் இன்னும் கம்ப்ளைன்ட் கொடுக்கவில்லை என்ற பல்வேறு கேள்விகளும் இருந்து வருகிறது. இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்கும்போது இந்த சீரியலில் கதாநாயகியாக மீனா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கோமதி பிரியாவும் நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு ஆடிஷனில் நடந்த சம்பவம் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
மதுரை பொண்ணு
கோமதி பிரியா மதுரை பொண்ணுதான். மதுரையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். சென்னையில் கல்லூரி படிக்க வந்த இடத்தில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் ஆடியன்ஸாக கலந்து கொண்டார். அதற்கு பிறகு தான் இவருக்கு வேலைக்காரன், பாவம் கணேசன் போன்ற சீரியலில் சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுபோல கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ஓவியா சீரியலிலும் நடித்திருந்தார்.
முதல் முறை பார்லர் அனுபவம்
இந்த நிலையில் அவர் நிகழ்ச்சியில் பேசும் போது எனக்கு ஆரம்பத்தில் எல்லாம் மேக்கப் பற்றி எதுவுமே தெரியாது. நான் என்னுடைய வாழ்க்கையில் முதல் முறை மேக்கப் போடுவதற்காக பியூட்டி பார்லர் போனது என்றால் அது விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் ஆடியன்ஸாக கலந்து கொள்வதற்கு தான். அப்போதுதான் நான் மேக்கப் போட்டேன்.
ஆரம்பத்தில் எதுவும் தெரியாது
அதற்குப் பிறகு ஒரு சீரியல் வாய்ப்புக்காக நான் ஆடிஷனுக்கு போயிருந்தேன். அப்போது அந்த சீரியல் இயக்குனர் என்னை பார்த்ததும் உனக்கு ட்ரெஸ்ஸிங் மற்றும் மேக்கப் பற்றி எதுவும் தெரியவில்லை முதலில் பியூட்டி பார்லர் போய் உன் முடியை சரி செய்து விட்டு வா என்று சொன்னாரு. எனக்கு அந்த நேரத்தில் சுருட்டை முடியாக இருக்கும். அதனால் அவர் அப்படி சொன்னார்.

தெலுங்கு சீரியலால் மாற்றம்
நான் முதலில் அந்த பணம் வேண்டாம் என்று சொன்னேன் பிறகு அவர் இந்த சீரியலில் நடிக்கலாம் என்று சொல்லவும் அந்த பியூட்டி பார்லருக்கு போயிருந்தேன். முதலில் தமிழில் நான் சீரியலில் நடிக்கும் போது அதிகமாக மேக்கப் செய்தது கிடையாது. திரட்டிங் கூட பண்ணினது கிடையாது. அதற்குப் பிறகு தெலுங்கு சீரியலில் தான் எனக்கு மேக்கப் பற்றி கொஞ்சம் விஷயங்கள் தெரிய தொடங்கியது. ட்ரஸ் போடுவது எல்லாமே கத்துக்கிட்டேன் என்று கோமதி பிரியா கூறி இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications