சிறகடிக்க ஆசை: அதிரடி திருப்பம்.. ரோகிணி சிக்கியாச்சு.. 2 பிரச்சனை.. மாஸ் காட்டிய முத்து மீனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரைக்கும் ஆன இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணிக்கு அடுத்தடுத்து பிரச்சனை வருகிறது. ரோகிணி எப்போது அண்ணாமலை குடும்பத்திடம் சிக்குவார் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இந்த வாரம் ட்ரீட் கிடைத்திருக்கிறது.

விஜய் டிவியில் இன்று வெளியான ப்ரோமோக்கள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லலாம். வரும் வாரத்தில் சிறகடிக்க ஆசை சீரியலில் செம எண்டர்டெயின்மென்ட் இருக்கிறது. இதுவரைக்கும் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த காட்சிகள் இந்த வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

siragadikka aasai serial vijay tv

ஏற்கனவே எப்போதுதான் ரோகிணி மாட்டுவார் என்று எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது அதற்கான நேரம் வந்திருக்கிறது. அதுவும் ரோகிணிக்கு இரண்டு சிக்கல்கள் அடுத்தடுத்து வருகிறது. கடந்த வாரத்தில் ரவி ஸ்ருதியின் திருமண நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து முத்து மீனாவிற்கு தான் புது பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் ரோகிணிக்கு தான் பிரச்சனை இருக்கிறது. வரும் வாரத்திற்கான இரண்டு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு ப்ரோமோவில் அண்ணாமலையின் நண்பரான பரசுவின் இரண்டாவது மகள் லெட்டர் எழுதி வைத்து ஓடிப் போய்விட்டார் என்று பரசுராமன் அண்ணாமலையிடம் வந்து அழுகிறார்.

அதனால் முத்துவும் மீனாவும் நாங்க உங்க பொண்ணை கண்டுபிடிக்கிறோம் என்று சொல்கிறார்கள். அதுபோல பரசுராமரின் மகள் காதலிக்கும் பையனின் குடும்பத்தினர் ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த கறிக்கடைக்காரரிடம் நம்ம பையன் ஒரு பொண்ணை காதலிக்கிறான். என்ன பண்ண என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

siragadikka aasai serial vijay tv

அப்போது கறிக்கடைக்காரர் நாம போய் அந்த பொண்ணு வீட்டில் முறைப்படி பேசி பார்ப்போம் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அதே நேரத்தில் பரசுராமனின் மகளை முத்துவும் மீனாவும் கண்டுபிடித்து வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்திருக்கின்றனர். அவர்கள் வீட்டில் இருக்கும்போது அங்கு கறிக்கடைக்காரரும் வருகிறார். இதனால் ரோகிணி சிக்க வாய்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் இன்னொரு ப்ரோமோவில் அண்ணாமலை ஸ்கூலுக்கு வேலைக்கு போகும்போது முத்து சாப்பாடு கொண்டு போய் கொடுக்கிறார். அந்த நேரத்தில் ரோகிணியின் அம்மாவும் பையனும் அந்த ஸ்கூலுக்கு வருகிறார்கள். அவர்களை முத்து பார்த்துவிட்டு நீங்க இங்கதான் இருக்கீங்களா? என்று ரோகிணியின் அம்மாவிடம் முத்து கேட்கிறார்.

siragadikka aasai serial vijay tv

அதற்கு அவர் ஆமா பொண்ணு வந்துட்டா எங்களை இங்க கூட்டிட்டு வந்து சேர்த்து விட்டு இருக்கா என்று சொல்கிறார். உடனே முத்து கிரிஷை கூட்டிட்டு போய் அவனுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து அனுப்புகிறார். அந்த நேரத்தில் ரோகிணிக்கு அவருடைய அம்மா போன் செய்து முத்து வந்த விஷயத்தை சொல்கிறார். இதனால் ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார்.

இப்படியாக ப்ரோமோ காட்சிகள் இருக்கிறது. ஆனாலும் வழக்கம்போல இந்த முறையும் ரோகிணி தப்பிக்க போறாரா? அல்லது ரசிகர்கள் எதிர்பார்த்தபடி மாட்டப் போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+