சிறகடிக்க ஆசை: சத்யா விஷயத்தில் அருண் செய்த செயல்.. கண் கலங்கிய மீனா! முத்து சொன்ன வார்த்தை! பாவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூலை 18ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா குடும்பத்திற்காக அருண் செய்த செயலை பார்த்து மீனா கண்கலங்கி அழுது இருக்கிறார். அதே நேரத்தில் மீனாவிற்க்கு முத்து ஆறுதல் சொல்லி இருக்கிறார். அதுபோல ரோகிணி ரவி மற்றும் ஸ்ருதி வாழ்க்கையில் புது பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா குடும்பத்தினர் அருண் சீதா வீட்டிற்கு விருந்திற்கு போய் இருந்த நிலையில் அங்கு சாப்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா சத்யாவிடம் மாமா உனக்காக ஒரு வேலை பார்த்து வைத்திருக்கிறார் என்று சொல்ல, அதற்கு அருண் அப்படி நினைச்ச வேலைக்கெல்லாம் போகக்கூடாது ஒரு ஆம்பிஷன் ஓட இருக்கும்போது அது சம்பந்தமான வேலைக்கு தான் போகணும் என்று சொல்லிட்டு சத்யாவிடம் உனக்கு என்ன ஆம்பிஷன் இருக்கு என்று கேட்க, பிசினஸ் பண்ணனும் என்று சொல்கிறார்.

அதற்கு அருண், அப்போ எனக்கு தெரிஞ்ச பைனான்ஸ்காரர் ஒருத்தர் இருக்காரு. அவர்கிட்ட வொர்க் பண்ணுனா உனக்கு டேலண்ட் வந்துடும் என்று சொல்லிவிட்டு அந்த பைனான்ஸியருக்கு போன் செய்ய உடனே அவரும் வர சொல்கிறார். இதனால் மொத்த குடும்பத்தினரும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு சந்திரா அருணுக்கு நன்றி சொல்ல, நம்ம குடும்பத்துக்கு தான அத்தை நான் பண்றேன் அதுக்கு எதுக்கு நன்றி சொல்றீங்க என்று சொல்கிறார்.
பிறகு சந்திராவுக்கு சீதாவின் மாமியார் தாம்பூலம் வைத்து புடவை கொண்டிருக்க, அதை பார்த்த மீனா விஜயா சந்திராவை அவமானப்படுத்தியதை நினைத்துப் பார்க்கிறார். பிறகு சத்யாவிற்கும் மீனாவிற்கும் டிரஸ் கொடுக்க, பிறகு அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர். இதை பார்த்து மீனா வருத்தப்படுகிறார்.
மறுபக்கத்தில் ரோகிணி ரவி வேலை செய்யும் ரெஸ்டாரண்டுக்கு போகிறார் அங்கு ரெஸ்டாரண்ட் ஓனர் மீது ரோகிணியிடம் பேசிக்கொண்டிருக்கிறார். ரவியை பார்க்க வந்தீங்களா என்று கேட்க, இல்ல நான் உங்களை தான் பார்க்க வந்தேன். என்னுடைய கிளென்ட் ஃபுட் கேட்டிருந்தாங்க அதுக்காக நான் உங்க ஹோட்டலை ரெபர் பண்ணுனேன், அதான் விசாரிச்சிட்டு போகலாம் என்று வந்தேன் என்று சமாளித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் ரவி வந்து ரோகிணியிடம் பேசுகிறார். பிறகு அவர் போனதும் நீத்துவிடம் நீங்கள் கல்யாணம் பண்ணலையா? என்று கேட்க, அதற்கு நீத்து உங்க மாமியார் மாதிரியே நீங்களும் கேட்கிறீங்க எனக்கு ரவி மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்திற்கும் ரவியை உதாரணமாக சொல்லிக் கொண்டிருக்க, அதை பார்த்து ரோகினிக்கு சந்தேகம் வருகிறது. பிறகு அங்கிருந்து கிளம்பி வெளியே வந்ததும் ஸ்ருதியின் அம்மாவுக்கு போன் செய்து நடந்த விஷயத்தை சொல்லிவிட்டு ரவி நல்ல பையன் தான். ஆனா இந்த நீத்து பணக்கார பொண்ணு அதனால ஸ்ருதி வாழ்க்கையில் நீங்க கொஞ்சம் கவனமா இருங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார்.
அடுத்ததாக முத்து வீட்டிற்கு வருகிறார். அப்போது மீனாவிடம் சாப்பிட்டாச்சா என்று கேட்க, நான் சாப்பிட்டேன் நீங்க சாப்பிடுங்க என்று முத்துவிற்கு சாப்பாடு பரிமாறுகிறார். பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது அருண் வீட்டில் நடந்த விஷயத்தை சொல்கிறார். அப்போது சத்யாவிற்காக அருண் வேலை ரெடி பண்ணியதைப் பற்றி சொன்னதும் எதுவாயிருந்தாலும் பரவாயில்லை சத்யா நல்லா இருக்கணும் அவ்வளவுதான் என்று முத்து பெரும் தன்மையாக பேசுகிறார். பிறகு சீதா வீட்டில் அவருடைய மாமியார் அவரை கவனித்துக் கொள்வது பற்றி சொல்லி மீனா ஃபீல் பண்ண, முத்து இந்த ஜென்மத்தில் உனக்கு இதுபோன்ற கொடுப்பினை கிடைக்கவில்லை ஆனால் அடுத்த ஜென்மத்தில் நல்ல மாமியார் கிடைக்கனும் என்று கடவுளிடம் வேண்டிக்கோ என்று கண்கலங்குகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications