மாலையை டெலிவரி பண்ணி அசத்திய முத்து.. உதவிக்கு வந்தது யாருன்னு பாருங்க.. மீனா இப்படி பண்ணிட்டாங்களே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 14ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் முத்து மற்றும் மீனா மாலையைக் கட்டி முடித்து அனுப்பி வைத்த வண்டியை சிட்டி ரவுடிகள் வைத்து கடத்திக் கொண்டு போயிருந்த நிலையில் கடைசியில் முத்து தன்னுடைய நண்பர்களோடு அந்த வண்டியை கண்டுபிடித்து இருக்கிறார்.
அதே நேரத்தில் சொன்ன நேரத்தில் மாலையை டெலிவரி செய்த முத்துவுக்கு தலைவர் எதிர்பார்க்காத உதவியை செய்திருக்கிறார். இந்த நிலையில் மொத்த பணத்தை கையில் வாங்கிய முத்து மற்றும் மீனாவிற்கு இன்ப அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து மாலை எடுத்துட்டு போன வண்டியை தூக்கிட்டாங்க என்பதை தன்னுடைய நண்பனுக்கு போன் போட்டு சொல்ல முயற்சிக்க அந்த போனை வாங்கி பேசிய தலைவர் நீ யாருன்னு எனக்கு இப்போ தெரிஞ்சு போச்சு எதிர்க்கட்சிக்காரன் தானே? நீ அவங்க கிட்ட எவ்வளவு பணம் வாங்கினே? எனக்கு இன்னும் அரை மணி நேரத்துல மாலை வந்து சேரனும்.
இல்லன்னா ரெண்டு மாலையா வாங்கிட்டு தான் வருவேன். ஒரு மாலை இங்க இருக்கிற உன்னுடைய நண்பனுக்கும். இன்னொரு மாலை உனக்கும் என்று மிரட்ட முத்து என்ன செய்ய என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். அப்போது மீனா கண்டிப்பா வண்டியை கண்டுபிடித்து விடலாம் என்று சொல்ல முத்து யோசிச்சு தன்னுடைய டிரைவர் குரூப்பில் காலையில் வண்டியோடு எடுத்த போட்டோவை போட்டு இந்த வண்டியை எங்க பாத்தாலும் எனக்கு தகவல் கொடுங்க என்று வாய்ஸ் மெசேஜ் போடுகிறார்.

அதை பார்த்த ஒரு டிரைவர் வண்டியை பார்த்ததும் முத்துவிற்கு தகவல் கொடுத்து அந்த வண்டியை துரத்தி போகிறார். அதோடு தன்னுடைய லைவ்லொகேஷனையும் அனுப்பி இருக்கிறார். இதை பார்த்த முத்துவும் ஆட்டோ டிரைவர்கள் , செல்வம் என எல்லோரும் அந்த வண்டியை சுற்றி வளைத்து ரௌடியை அடித்து வெளுக்கிறார்கள். அந்த ரவுடி அங்கிருந்து தப்பித்து போய்விடுகிறார்.

பிறகு முத்து நண்பனுக்கு போன் செய்ய மீண்டும் அதை தலைவர் தான் எடுக்கிறார். இன்னும் 20 நிமிஷத்துல நான் அங்கே இருப்பேன் மாலை வண்டியை கண்டுபிடித்தாச்சு என்று சொல்ல அதற்கு தலைவர் நான் மிரட்டுனதும் நீ பயந்துட்டியா? இவனை புடிச்சு கட்டி போடுங்கடா என்று சொல்ல அதற்கு முத்து நடந்த விஷயங்களை எல்லாம் சொல்கிறார்.

அதோடு ஆதாரத்தையும் காட்ட அதை பார்த்த பிறகு புரிந்து கொண்ட தலைவர் இதெல்லாம் எதிர்க்கட்சி சதியா தான் இருக்கும் என்று சொல்லி முத்துவுக்கு பேசிய பணத்தை விட 50,000 அதிகமாக கொடுத்து உனக்கு எந்த உதவியும் இருந்தாலும் என்னை வந்து பாரு என்று சொல்கிறார் என்று கேட்க, இல்ல நாங்க எதுவும் சொல்லாம தப்பிச்சு வந்துட்டோம் என்று ரவுடிகள் சொல்ல அதற்கு சரி இந்த முறை அவன் தப்பிச்சிட்டான் இன்னொரு முறை பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார்.

அடுத்ததாக முத்து மீனாவும் பணத்தை வாங்கிக் கொண்டு கோவிலுக்கு வந்து மாலை கட்டியவர்களுக்கு சம்பளம் கொடுக்க அவர்கள் எதுக்கு பணம் மீனா எங்க வீட்டு பொண்ணு.. நாங்க மீனாவுக்கு ஒத்தாசையா இருக்கணும்னு தான் வந்தோம் என்று சொல்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications