அம்மாவோடு சிக்கிய ரோகிணி.. விஜயா சொன்ன வார்த்தை! இவ்வளவு சீக்கிரமா மாட்டிட்டாங்களே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 23ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ரோகிணி தன்னுடைய தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷனுக்காக தன்னுடைய அம்மாவிடம் பணம் கேட்க அவர் பணத்தை கொண்டு வந்த இடத்தில் விஜயாவிடம் சிக்கி இருக்கிறார்.
ரோகிணியின் அம்மா பக்கத்திலேயே இருக்கும் போது விஜயா பேசிய வார்த்தையை கேட்டு ரோகிணியின் அம்மா அதிர்ச்சி அடைகிறார். அதே நேரத்தில் சத்யாவும் முத்து விஷயத்தில் சில வார்த்தைகளை பேசுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா, மீனாவிடம் முத்து பங்க்ஷனுக்கு வந்தால் எதுவும் பேசக்கூடாது.... வந்தோமா போனோமானு இருக்கனும். அவனை வச்சு அந்த பங்க்ஷனில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று மிரட்ட அதற்கு சரியென்று மீனாவும் சொல்லிவிட்டு முத்துவிடம் நம்மளால எந்த பிரச்சினையும் வரக்கூடாது எனக்காக நீங்க பொறுமையா இருக்கணும் என்று சொல்ல அதற்கு முத்து முதலில் கோபப்பட்டாலும் பிறகு நான் எங்க அப்பாவுக்கு ஏதாவது மரியாதை குறைவா நடந்துச்சுன்னா சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு போகிறார்.
அதைத்தொடர்ந்து மீனா கோவிலுக்கு அம்மாவை பார்க்க போக அங்கு சத்யாவும் இருக்க மீனாவின் அம்மா மாப்பிள்ளை வரலையா என்று கேட்க அதற்கு சத்யா அவர் எதுக்கு இங்க வரணும் என்று கேள்வி கேட்கிறார். அதோடு மீனா வீட்டில் தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடப்பதையும் மாமா உங்களையும் கூப்பிடனும்னு சொன்னாரு நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன். அங்கே ஏதாவது சின்ன பிரச்சனை நடந்தாலும் அதற்கு காரணம் நாம தானு சொல்லுவாங்க.
அதனாலதான் வேண்டாம்னு சொன்னேன் என்று சொல்ல அதற்கு சத்யா எல்லாருக்கும் பணம் தான் முக்கியம். பணம் இருந்தா தான் மரியாதை கிடைக்கும். நானும் கண்டிப்பா ஒரு நாள் நிறைய பணம் சம்பாதிப்பேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் ரோகிணி வித்யாவிடம் தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு பணம் தேவை நான் விஜயாவின் மறு முகத்தை பாத்துட்டேன். அவங்க வேற கண்டிப்பா அப்பா வரணும்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.

அதைப்பற்றி தான் யோசிச்சிட்டு இருக்கேன் அதற்கு முத்துவை வச்சி தான் நாம ஏதாவது செய்யணும். முத்துவை தான் ஏதாவது ஏத்திவிட்டால் பிரச்சனை செய்வார் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ரோகிணியின் அம்மாவிற்கு ரோகிணி போன் போட்டு பணம் இருக்கா என்று கேட்க அவர் நகை இருக்கு அதை வச்சு பணத்தை கொண்டு வாரேன் என்று சொல்லி போனை வைக்கிறார். அடுத்த நாள் ரோகிணி பார்லரில் இருக்கும் போது அவருடைய அம்மா பணத்தோடு வருகிறார்.

அதற்கு ரோகிணி நீங்க வித்யா வீட்டில் இருக்க வேண்டியதுதானே என்று கோபப்பட அதற்கு ரோகிணி அம்மா இன்னைக்கு ஊருக்கு கிளம்புறேன். அதான் உன்னை பார்த்து பணத்தை கொடுத்துட்டு போலாம்னு வந்தேன் என்று பணத்தை கொடுக்கிறார். அந்த நேரத்தில் விஜயா பார்லருக்கு வந்துவிட அவரை உள்ளே விட வேண்டாம் என்று ரோகிணி சொல்லி விஜயாவை வெயிட் பண்ண வைக்கிறார்.
விஜயா உள்ளே வந்து அம்மாவை பார்த்தால் அவ்வளவு தான் என்று பயந்து போன ரோகிணி அம்மாவுக்கு முகத்தில் மாஸ்க் போட்டு மறைத்து வைத்திருக்கிறார். அந்த நேரத்தில் வெளியே வெயிட் பண்ண முடியாத விஜயா உடனே ரூமிலுக்கு வர அப்போது ரோகிணி உங்களை யாரு வெயிட் பண்ண சொன்னது நீங்க நேரா ரூமுக்கு வர வேண்டியதுதானே என்று கோபப்படுவது போல டிராமா போடுகிறார்.

அப்போது விஜயா உங்க அப்பா ஃபங்ஷனுக்கு வாராரா? இல்லையா? என்று கேட்க அதற்கு ரோகிணி அப்பா மட்டும் வாராரு. எனக்காக பணம் அனுப்பி இருக்காரு அதை எடுத்து வச்சிருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு விஜயா உங்க அம்மா இருந்தா வந்து இருப்பாங்க.. என்ன பண்ணா அவங்க தான் அல்ப ஆயுசுல போய்ட்டாங்களே என்று சொல்ல, அதைக் கேட்டு ரோகிணி அம்மா வருத்தப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications