சிறக்கடிக்க ஆசை: முத்துவிடம் மகனோடு வசமாக சிக்கும் ரோகிணி.. இனி அண்ணாமலை தான் வில்லன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்து மற்றும் அண்ணாமலை ஸ்கூலுக்கு போய் இருக்கும் நிலையில் அங்கு ரோகிணி தன்னுடைய மகனை கூட்டிக்கொண்டு வருகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரம் முழுக்க பெரிய அளவில் சுவாரசியம் ஆன திருப்பங்கள் எதுவும் வரவில்லை. காமெடியான காட்சிகள் மட்டும் தான் இருந்தது. மனோஜ் கடையில் மூன்று முட்டைகள் இருந்த நிலையில் அந்த முட்டைகளை யாரோ செய்வினை வைத்து விட்டார்கள் என்று நம்பி அதற்காக ஒரு சாமியாரை போய் சந்திக்கப் போயிருந்தார்.

television siragadikka aasai serial vijay tv

அவர் நீங்கள் உங்க அம்மாவோடு சேர்ந்து ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் விரதம் இருந்து தீச்சட்டி எடுத்து கோவிலை சுற்றிவர வேண்டும் என்று சொல்லி இருந்தார். அது போலவே வீட்டில் பிரியாணி சமைத்த போது கூட சாப்பிடாமல் விஜயா மற்றும் மனோஜ் விரதம் இருந்து கோவிலில் தீச்சட்டியும் எடுத்திருந்தனர்.

அந்த வீடியோவை முத்து வீட்டில் போட்டு காட்டிக்கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் மனோஜ் கடையில் இருந்த முட்டை செய்வினை முட்டை அல்ல என்று தெரிய வந்தது. அதேபோல மீனா பின்னாடி ஒரு நபர் லவ் டார்ச்சர் கொடுத்து சுற்றிக் கொண்டிருந்தார் அந்த நபர் முத்து ஐடியா கொடுத்தது போல மீனா வீட்டிற்கு வந்து அண்ணாமலை இடம் மீனாவை பொண்ணு கேட்க கடைசியில் முத்துவின் மனைவிதான் மீனா என்று அந்த நபருக்கு தெரிய வந்திருக்கிறது.

television siragadikka aasai serial vijay tv

இதுபோன்ற காட்சிகள் தான் இந்த வாரம் நடந்தது. ஆனால் அடுத்த வாரத்தில் பெரிய சம்பவம் நடப்பது போன்ற ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது அண்ணாமலை ஒரு ஸ்கூலில் வேலைக்கு கேட்டிருந்தார். அதே ஸ்கூலில் தான் ரோகிணி தன்னுடைய மகனை படிக்க சேர்த்து இருக்கிறார்.

அண்ணாமலை முதல் நாள் வேலைக்கு ஜாயின் பண்ணுவதற்கு வந்திருக்கிறார். அங்கு அண்ணாமலையை பார்ப்பதற்கு முத்து வந்திருக்கிறார் முத்து அண்ணாமலையை வேலைக்குப் போக வேண்டாம் என்று பேசிக்கொண்டு இருப்பது போல தெரிகிறது.

ஆனால் அண்ணாமலை நான் இங்குதான் வேலை பார்ப்பேன் நீ போ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ரோகிணி தன்னுடைய மகனை கூட்டிக்கொண்டு வருகிறார். அண்ணா மலை மற்றும் முத்து இருவரும் நிற்பதை பார்த்து ரோகிணி அதிர்ச்சியில் இருக்கும்போது கிரிஷ் நான் முத்து மாமா கிட்ட பேச போறேன் என்று சொல்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

பிறகு ரோகிணி தன்னுடைய மகனோடு அங்கு இருக்கும் ஆட்டோவில் ஒளிந்து கொள்கிறார். முத்து போன பிறகு அண்ணாமலை எதற்காக இங்கே வந்தார் என்று அங்கிருக்கும் வாட்ச்மேனிடம் விசாரிக்கிறார். அப்போது அவர் அண்ணாமலை இங்கு வேலைக்கு சேர்ந்திருக்கிறார் என்று சொல்கிறார்.

இதனால் இந்த சூழ்நிலையை எப்படி ரோகிணி சமாளிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்ற பொறுத்து இருந்து பார்க்கலாம். வழக்கம்போல இந்த வாரமும் ரோகிணி தப்பித்து விடுவாரா? அல்லது அண்ணாமலையிடம் சிக்க போகிறாரா? நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+