Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை அடுத்த வாரம்: சத்யாவை கடத்திய சிட்டி.. காப்பாற்ற போன முத்து.. ரோகிணிக்கு புது பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சிட்டியின் ஆட்கள் சத்யாவை கடத்தி வைத்திருக்கிறார்கள். இந்த உண்மை சீதா மூலமாக முத்துவிற்கு தெரிய வருகிறது. முத்து எடுக்கப்போகும் முடிவு என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி ஒரே ஒரு பிரச்சனையில் மட்டும் வீட்டில் மாட்டி இருக்கிறார். ஆனால் முத்துக்கு மீனாவும் ரோகிணிக்கே சப்போர்ட் செய்து மீண்டும் மீண்டும் அவமானப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ரோகிணியின் ஏடிஎம் கார்டை விஜயா வாங்கி வைத்திருப்பதை பார்த்ததும் மீனாவும் முத்துவும் பொங்கி எழுந்து இதற்கு ஏதாவது ஒரு தீர்வு பார்க்க வேண்டும் என்று மனோஜிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தார்கள்.

Siragadikka aasai serial vijay tv

அசிங்கப்படுத்தும் மனோஜ்

ஆனால் மனோஜ் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? உங்களுக்கு எங்க மேல பொறாமை. அம்மா என் மேல பாசமா இருக்காங்கன்னு நீங்க இப்படி எல்லாம் நாடகம் போடுறீங்க என்று முகத்தில் கரியை பூசி விட்டார். அதற்கு பிறகும் திருந்தாத முத்துமீனா விஜயாவிடம் இருந்து எப்படியாவது ரோகிணிக்கு ஏடிஎம் கார்டை வாங்கி கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்கள்.

தேடி அலையும் முத்து

அது அண்ணாமலை மூலமாக செய்ய வேண்டும் என்று இவர்கள் போட்ட பிளானில் கடைசியில் ரோகிணியும் முத்து மற்றும் மீனாவை அசிங்கப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சீதா போன் பண்ணி சத்யாவை காணவில்லை எங்கே போனான் என்று தெரியல போனை வேற எடுக்கல என்று பதட்டத்துடன் சொல்ல, முத்து நான் தேடிப் பார்க்கிறேன் என்று செல்வத்துடன் தேடி அலைகிறார்.

சத்யாவை கடத்திய சிட்டி

ஒரு இடத்தில் சத்யாவின் பைக் நிற்கிறது இதைப் பார்த்ததும் முத்துவுக்கு சிட்டி மீது சந்தேகம் வருகிறது. ஏற்கனவே காலேஜிலிருந்து சத்யாவை சிட்டியின் ஆட்கள் தூக்கி இருந்ததால் இப்போதும் அவர்கள்தான் இந்த வேலையை பண்ணி இருப்பாங்க என்று சந்தேகப்பட்டு சத்யாவை தேடி அலைகிறார். அதை மறுபக்கத்தில் சத்யாவை ஒரு சேரில் கட்டி வைத்து சிட்டியின் ஆட்கள் சுற்றி நிற்கிறார்கள்.

முத்து காப்பாற்றுவாரா

அப்போது அங்கு வரும் சிட்டி உன்னையும், உன் குடும்பத்தையும் அசிங்கப்படுத்துவதற்கு தான் நான் இப்போ உன்னை தூக்கி இருக்கிறேன் இப்போ உனக்கு போதை ஊசி போட போறேன் இந்த ஊசி மருந்தால நீ வெளியே போகும்போது நீ போதை ஊசி போட்டு இருக்கான்னு உன்னை எல்லாரும் கேவலப்படுத்துவாங்க என்று ஊசி போட போகிறார். அந்த நேரத்தில் முத்துவும் சத்யாவை தேடிக்கொண்டு அந்த பில்டிங்க்கு ஓடி வருகிறார்.

வட்டி கட்டும் ரோகிணி

இந்த ஊசி போடுவதற்கு முன்பு முத்து சத்யாவை காப்பாற்றி விடுவாரா? இல்லையா? என்று பரபரப்பாக ப்ரோமோவில் காட்சிகள் இருக்கிறது. அதே நேரத்தில் சத்யாவை காப்பாற்ற போன நேரத்தில் சிட்டிக்கும் ரோகிணிக்கும் ஏற்கனவே இருக்கும் லிங்க் முத்துக்கு தெரிய வருமா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஏற்கனவே சிட்டியிடம் ரோகிணி வட்டிக்கு பணம் வாங்கியிருக்கிறார். அவருக்கு வட்டி தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்த வாரம் சம்பவம்

ஆனால் இப்போது ரோகிணியின் ஏடிஎம் கார்டை விஜயா பிடுங்கி வைத்திருக்கும் நிலையில் இனி சிட்டிக்கு பணம் கொடுப்பதற்கு ரோகினி கஷ்டப்பட போகிறார். அதனால் ஏதாவது பிரச்சனையில் சிக்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் அடுத்த வாரத்தில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+