சிறகடிக்க ஆசை: பத்திர ஆபீஸில் ரோகிணியை பற்றி ஜீவா சொன்ன வார்த்தை! முத்துவுக்கு தெரியவரும் உண்மை!
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி மற்றும் மனோஜை பத்திர ஆபீஸில் ஜீவா நேருக்கு நேர் பார்க்கிறார். அதே இடத்தில் முத்துவும் இருக்கிறார். ஜீவா முத்துவிடம் மனோஜை பற்றி சில உண்மைகளை சொல்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி இப்போது ஒரு லேட்டஸ்ட் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. எப்படா ரோகிணி மாட்டுவாங்க என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இப்போது மகிழ்ச்சி செய்தி கிடைத்திருக்கிறது. அதுவும் இந்த இந்த மாதத்திலேயே மனோஜ் மற்றும் ரோகிணிக்கு பெரிய ஆப்பு வரப்போகிறது என்று ப்ரோமோவில் காட்டப்பட்டிருக்கிறது.

மனோஜ் ஜீவாவிடம் இருந்து வாங்கிய 20 லட்சம் பணத்தில் தான் புதியதாக பிசினஸ் தொடங்கியிருக்கிறார். ஆனால் அதை மறைத்து ரோகிணியின் அப்பா கொடுத்ததாக வீட்டில் ஏமாற்றி இருக்கிறார். அதுபோல இப்போது புதியதாக வீடு ஒன்று வாங்குவதற்கு போகிறார்கள்.
பிக் பாஸ் மணிகண்டனும் மனைவி சோபியாவும் பிரிந்து விட்டார்களா? இன்ஸ்ட்டாவில் இதை கவனிச்சீங்களா?
அதற்காக கோயிலுக்கு போயிருந்த நேரத்தில் அங்கு அபசகுணமாக சில சம்பவங்கள் நடைபெறுகிறது. ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தற்போது வெளியான ப்ரோமோவில் பத்திர ஆஃபீஸ்க்கு ரோகிணியும் மனோஜும் போயிருக்கிறார்கள்.

அதுபோல போன வாரத்தில் முத்துவுக்கு துபாயிலிருந்து ஜீவா போன் செய்திருந்தார். அதனால் இந்த சீரியலில் ஜீவா எப்போ வருவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் அவரும் வந்திருக்கிறார்.
பத்திர ஆபீஸில் வீட்டை மனோஜ் பெயருக்கு மாற்றுவதற்காக மனோஜ் மற்றும் ரோகிணி சென்று இருக்கிறார்கள். அதே நேரத்தில் முத்துவின் காரில் ஜீவாவும் அதே பத்திர ஆபீசுக்கு வந்திருக்கிறார். அங்கு மனோஜ் மற்றும் ரோகிணியை ஜீவா பார்க்கிறார். அதனால் ஜீவா கோபமாக இருக்க, அப்போது முத்து என்னாச்சு மேடம் நீங்க ரொம்ப நாளா வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த இடத்தை வாங்கிட்டு தானே வந்திருக்கீங்க ஆனா ஏன் முகம் நல்லா இருக்கு என்று கேட்கிறார்.

அதற்கு ஜீவா நான் யார் முகத்தில் முழிக்கவே கூடாது என்று இருந்தேனோ அவங்க முகத்திலேயே முழிக்க வேண்டிய சூழ்நிலை ஆயிடுச்சி என்று சொல்கிறார். இதனால் முத்து யார் என்று விசாரிக்கிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதுபோல அந்த ப்ரோமோவில் பல நாள் திருடன் ஒருநாள் கண்டிப்பாக அகப்படுவான் என்பது போல இப்போது ரசிகர்கள் எதிர்பார்த்த திருப்பம் வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.

இதனால் ரோகிணி மற்றும் மனோஜ் ஜீவாவிடம் வாங்கிய பணம் பற்றிய விஷயம் இந்த மாதத்தில் தெரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ரோகிணி பற்றிய உண்மைகள் இப்போதைக்கு தெரிய வருவதற்கு வாய்ப்பு இல்லை. ப்ரோமோவில் தான் அதிகமாக பில்டப் கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே டிஆர்பி சரிந்து கொண்டிருக்கும் நிலையில் அதை சரி பண்ணுவதற்காக ஒரு சில உண்மைகள் தெரிய வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications