சிறகடிக்க ஆசையில் டுவிஸ்ட்! கோவிலில் அறிமுகமான இரண்டு பேர்.. ரோகிணி அப்பா பற்றி தெரிய வரும் உண்மை!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோவிலில் வைத்து முத்து மற்றும் மீனாவோடு இரண்டு நபர்கள் அறிமுகமாகிறார்கள். அவர்களால் ரோகிணி அப்பா பற்றிய உண்மை தெரிய வர இருக்கிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் முழுக்கவே ரசிகர்கள் எதிர்பார்த்த பல திருப்பங்கள் நடந்தது. இதுவரைக்கும் ரோகிணி ஒரு இடத்தில் கூட மாட்டவில்லையே என்று வேதனையில் கமெண்ட் போட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த வாரம் நல்ல என்டர்டைன்மென்ட் கிடைத்தது.

ஆனாலும் ரோகிணி பற்றிய மொத்த உண்மைகளும் எப்போது தெரியவரும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில் இப்போது அதற்கு ஒரு க்ளூ கிடைத்திருக்கிறது. அதாவது இந்த வாரத்தில் ஜீவாவிடமிருந்து ரோகிணியும் மனோஜும் வாங்கிய 30 லட்சம் பற்றிய உண்மையை முத்து வீட்டில் உடைத்திருக்கிறார்.
ரோகினியின் அழுகை நாடகத்தோடு இந்த வாரம் முடிவடைந்தது. இறுதியில் இனி ஷோரூம் அண்ணாமலை பெயரில் மாற்றப் போகிறார்கள். ஷோரூம் உரிமையாளராக அண்ணாமலை இருக்கும்போது மனோஜ் இந்த கடையில் வேலைக்காரர்தான். ஒவ்வொரு வாரமும் என்ன வியாபாரம் நடக்கிறது என்ற டீடெயிலஸ் அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்று முத்து கண்டிஷன் போட்டு இருக்கிறார்.

இதனால் முத்து மீது மனோஜும் ரோகிணியும் பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள். இப்படியான நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் முத்துவும் மீனாவும் கோயிலுக்கு போயிருக்கின்றனர் அப்போது அங்கு ஒரு வயதான கணவன் மனைவி இருக்கிறார்கள். அவர்கள் மாலை மாற்றிக் கொள்வதை முத்து வீடியோ எடுத்துக் கொடுக்கிறார்.
பிறகு அவர்கள் நாங்கள் மலேசியாவில் இருந்து வந்திருக்கிறோம் என்று சொன்னதும் அப்போ இவர்களை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய் விருந்து வச்சு ரோகிணி அப்பா பற்றி விசாரிக்கலாமா என்று மீனா முத்துவிடம் ஐடியா கொடுக்க, இது முத்து செம யோசனை என்று சந்தோஷப்படுகிறார்.

இதனால் அடுத்த வாரத்தில் இந்த தம்பதிகள் மீனா மற்றும் முத்து வீட்டிற்கு வரும்போது அவர்களிடம் ரோகிணி அப்பா பற்றி விசாரிக்கும் போது எல்லாமே பொய் என்பது தெரிய வர வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் அடுத்த வாரத்தில் ரோகினி மாட்டுவாரா? அல்லது வழக்கம்போல இதிலிருந்து தப்பித்து விடுவாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications