சிறகடிக்க ஆசையில் நாளை: ரோகிணியை நிரந்தரமாக வீட்டை விட்டு விரட்ட விஜயா முடிவு.. பார்வதி கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் ரோகிணியை நிரந்தரமாக வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என்பதற்காக விஜயா முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். இது ரோகிணிக்கு தெரிய வந்திருக்கிறது. இனி ரோகிணி முடிவு என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா தன்னுடைய மூத்த மகனுக்கு பெரிய பணக்கார வீட்டு பெண்ணை தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வரன் பார்த்து கொண்டு இருந்தார். ஏற்கனவே ஜீவாவிடம் மனோஜ் பணத்தை கொடுத்து ஏமாந்திருந்தார். ஆனாலும் விஜயா தன்னுடைய வீட்டிற்கு பணக்கார மருமகள் வேண்டும் என்று ஆசையோடு காத்திருந்த நேரத்தில் ரோகிணி தான் மலேசியாவில் பெரிய பணக்காரர் ஒருவருடைய பொண்ணு என்று ஏமாற்றி மனோஜை திருமணம் செய்து கொண்டார்.

உண்மை உடைபட்டது
ஆனால் பல மாதங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த தருணம் இப்போது நடந்திருக்கிறது. ரோகிணி பற்றிய உண்மைகள் குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. ரோகிணி பணக்கார வீட்டு பெண் இல்லை என்பதை தெரிந்ததும் விஜயா தன்னுடைய சுயரூபத்தை காட்ட தொடங்கிவிட்டார். ரோகிணியை வீட்டில் அடிமை போல வைத்திருக்கிறார். ரோகிணி பார்க்கும் வேலைக்கான சம்பளத்தை என்னிடம் தான் தரவேண்டும் என்று ரூல்ஸ் போட்டு இருக்கிறார்.
திருந்தாத ரோகிணி
முத்துவும், மீனாவும் ரோகிணிக்கு சப்போர்ட் பண்ணி பேச கடைசியில் ரோகிணி அத்தை சொல்வது தான் சரி என்று முத்து மீனாவை அசிங்கப்படுத்தி விஜயாவுக்கு ஜிங்ஜான் போட்டுக் கொண்டிருக்கிறார். எப்படியாவது விஜயா மனசை மாற்றிவிட மீண்டும் என்று ரோகிணி நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மனோஜ் ரோகிணியை மன்னிக்காமல் இருக்கிறார். என்னிடம் நீ எத்தனையோ பொய் சொல்லி இருக்கிறாய் இன்னும் எத்தனை உண்மையை மறைக்கிறேனு தெரியல, உன்னிடம் பேச பிடிக்கலை என்று சொல்லி இருக்கிறார். இதனால் ரோகிணி சோகத்தின் உச்சத்தில் இருக்கிறார்.

ரோகிணிக்கு மீண்டும் பிரச்சனை
இந்த சூழ்நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத புது ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது சிறகடிக்க ஆசை சீரியலின் டிஆர்பி குறைந்திருக்கும் நிலையில் ரோகிணிக்கு பிரச்சனை வந்தால் தான் ரசிகர்கள் இந்த சீரியலை பார்க்கிறார்கள் என்பதை சரியாக புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் இப்போது மீண்டும் ரோகிணிக்கு பிரச்சனை வரப்போகிறது.

விஜயா எடுத்த முடிவு
அதாவது விஜயா பார்வதி வீட்டிற்கு சென்று பார்வதியிடம் நீ ஒரு சாமியார் இருக்கிறார் என்று சொன்னியே அவரை போய் பார்ககணும் என்று சொல்ல, என்ன சாமியாரு எதுக்காக என்று பார்வதி கேட்கிறார். அதற்கு விஜயா ரோகிணியை மனோஜ் வாழ்க்கையில் இருந்து நிரந்தரமாக பிரிக்கணும், ரோகிணி பற்றிய நினைவுகளை மனோஜை மறக்க வைக்க வேண்டும் என்று பார்வதியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
உங்க கருத்து
இதையெல்லாம் வீட்டு வாசலில் நின்று ரோகிணி கேட்டுக் கொண்டிருக்கிறார். இனி ரோகிணி விஜயாவுக்கு எதிரியாக மாற போகிறாரா? அல்லது இந்த சூழ்நிலையில் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது நாளை தான் தெரியவரும். ஆனால் ரோகிணியை திடீரென்று மனோஜ் வாழ்க்கையில் இருந்து ஒரேடியாக பிரிக்க வேண்டும் என்பதற்காக விஜயா இவ்வளவு பெரிய முடிவு எடுக்கிறார் என்றால் இந்த வாரம் ஏதோ சம்பவம் நடக்கப் போகிறது என்று தெரிகிறது. எது எப்படியோ இந்த சீரியலில் ரோகிணி விஜயாவுக்கு எதிராக நின்று அவரை கேள்வி கேட்டால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அல்லது இந்த ரோகிணி மனோஜை விட்டு பிரிந்து செல்வதே சரி என்று நினைக்கிறீர்களா நண்பர்களே?
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications