சிறகடிக்க ஆசை: அம்மாவிடம் போனில் பேசி மாட்டும் ரோகிணி! முத்து கண்டுபிடித்த உண்மை! அதிர்ச்சியில் விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், இப்போதைக்கு உச்சக்கட்ட காமெடி கலாட்டா போயிட்டு இருக்குன்னா, அது மனோஜால்தான்! குழந்தையே பிறக்காதுன்னு ஒரு பெண் சாபம் விட்டதுல இருந்து பயந்துபோன மனோஜ், ஒரு மனநலம் சரியில்லாத டாக்டர் கொடுத்த அட்வைஸைக் கேட்டு வீடே தெரியாத அளவுக்கு ஆட்டம்போட ஆரம்பிச்சிருக்காரு! வாங்க, இன்றைய எபிசோட்ல என்ன நடந்ததுன்னு பார்க்கலாம்!

மனோஜை குழந்தையாக மாற்றிய டாக்டர்
மனோஜ் தனது ஷோரூமுக்கு வந்த ஒரு சிறுவன் ரொம்பச் சேட்டை செஞ்சதுக்காக அவனை அடிச்சுவிட்டார். இதனால, அந்தச் சிறுவனோட அம்மா மனோஜை ஏகத்துக்கும் திட்டிட்டு, "உனக்குக் குழந்தை இருக்கா?"ன்னு கேட்டு, மனோஜ் இல்லைன்னு சொன்னதும், "உனக்கெல்லாம் குழந்தையே பிறக்காது!"ன்னு சாபம் விட்டுட்டுப் போயிட்டாங்க.
இதனால பயந்துபோன மனோஜ், ஒரு டாக்டரை பார்க்கப் போனார். ஆனா, அந்த டாக்டர் சொன்ன வைத்தியம் தான் செம கோமாளித்தனமா இருந்துச்சு!
அந்த டாக்டர், மனோஜிடம், "குழந்தைபோல் நீங்கள் தொட்டிலில் தான் தூங்க வேண்டும், ஃபீடிங் பாட்டிலில் தான் பால் குடிக்க வேண்டும்"ன்னு சொல்ல, மனோஜ் வீட்டுக்கு வந்து தொட்டில் கட்டி, அதில் ஆட ஆரம்பிச்சுட்டாரு!
விஜயாவை புலம்ப வைத்த மனோஜ்
மனோஜ், தொட்டிலில் ஆடிக் குழந்தைபோலவே நடந்துகொண்டதைப் பார்த்த விஜயா, 'என் மகனுக்கு என்ன ஆனதோ'ன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க! மனோஜின் இந்த ஆட்டத்தைப் பார்த்த முத்து, மீனா, ஸ்ருதி, ரவி ஆகியோர் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. "அவனுக்குப் பைத்தியம் பிடித்திருக்குமோ?"ன்னு சந்தேகம் அடைந்த அவங்க, ரோகிணி கிட்டப் போய் பேசுறாங்க.
ரோகிணிதான் விஷயத்தைச் சொல்றாங்க: ஷோரூமுக்கு வந்த லேடி சாபம் போட்டதால், பயத்தில் டாக்டரைப் போய்ப் பார்த்தாராம். அந்த டாக்டர் தான், குழந்தை மாதிரி நடந்துகொண்டால் குழந்தை பிறக்கும்ன்னு சொல்லியிருக்கிறாராம். அதனால தான் அவர் இப்படியெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காருன்னு ரோகிணி சொல்றாங்க.
உடைந்த மனோஜின் உண்மை
பிறகு, முத்து அந்த டாக்டர் நம்பரை வாங்கி போன் போட்டு விசாரிக்கிறார். அப்போதான் அதிர்ச்சி! மனோஜ் பார்த்தது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்றும், அவர் உண்மையான டாக்டர் இல்லை என்றும் தெரியவருது.
உடனே மனோஜ்கிட்ட அந்த உண்மையைச் சொன்னதும், ஷாக் ஆன மனோஜ், "தனக்கு அப்போதே டவுட் வந்ததாகச் சொல்லிச் சமாளிக்கிறார்!" இதைக்கேட்ட முத்து, "நீ ஒரு வடிகட்டுன முட்டாள்டா!"ன்னு திட்ட, மனோஜ் அசிங்கப்பட்டுப் போனார்.
ரோகிணி கொடுத்த இன்னொரு ட்விஸ்ட்
இந்தக் களேபரம் ஒருபக்கம் ஓடிட்டு இருக்க, ரோகிணிக்கு அவருடைய அம்மா லட்சுமி போன் போடுறாங்க. கிச்சனுக்குப் போய் தனியாப் பேசுற ரோகிணியிடம், தனக்கு வித்யா பத்திரிகை வச்ச விஷயத்தைச் சொல்றாங்க. "நானும் கல்யாணத்துக்கு வரட்டுமா?"ன்னு லட்சுமி கேட்க, அதுக்கு ரோகிணி, "தயவு செஞ்சு வந்திராத"ன்னு மறுத்துடுறாங்க. ஏன்னா, முத்துவும் மீனாவும் அந்தக் கல்யாணத்துக்கு வருவாங்க, அவங்க கண்ணுல அம்மா பட்டுவிடக் கூடாதுன்னு ரோகிணி பயப்படுறாங்க.
இப்படி ரோகிணி அவருடைய அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்க, அதை ஸ்ருதி கேட்டுவிடுகிறார்! ரோகிணியின் முகமூடி கிழியப்போகுதா, இல்லையான்னு இனி வர எபிசோட்ல தான் தெரியும்! மனோஜின் இந்தக் கோமாளித்தனம், சீரியலில் இப்போதைக்கு செம காமெடியைக் கூட்டியிருக்கு!
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications