சிறகடிக்க ஆசை: மனோஜால் முத்து மீது விழுந்த பழி.. விஜயா வெறுக்க காரணம் இதுதான்! இன்றைய எபிசோடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், இன்றைய எபிசோடில் முத்துவின் மீது விஜயா கொண்டிருக்கும் கோபத்தையும், அதனால் ஏற்படும் தொடர் துயரங்களையும் ஆழமாகப் பதிவு செய்துள்ளது. பாசத்திற்காக ஏங்கி நிற்கும் ஒரு இளைஞனின் வலி, எபிசோட் முழுக்க உணர்வுபூர்வமாக வெளிப்பட்டுள்ளது.

Siragadikka aasai serial vijay tv

தாய் பாசத்திற்கு ஏங்கும் முத்துவின் அழுகை

இன்றைய எபிசோடில், காலில் சூடு வைத்த விஜயாவைப் பற்றி முத்து, பாட்டியிடம் போனில் பேசி விஷயத்தைச் சொல்கிறார். இதனால் கோபமடைந்த பாட்டி, விஜயாவை, 'உன்னை யாரு அந்த ஜோசியக்காரன் பேச்சைக் கேட்டு இங்க வந்து விட சொன்னது?' எனக் கோபமாகத் திட்டுகிறார். மேலும், "முத்து நல்ல பையன், நீ அவன்கிட்ட அன்பா நடந்துகிட்டா அவன் பாசத்தைக் காட்டுவான்" என அறிவுரை சொல்ல, விஜயாவுக்குக் கோபம் அதிகரிக்கிறது.

அடுத்ததாக மனோஜ் படித்துக்கொண்டிருக்கும்போது வரும் பார்வதியிடம், "என் பையன் ஒரு நாள் பெரிய பணக்காரன் ஆவான்" என்று விஜயா பெருமையாகப் பேச, அந்த நேரத்தில் வரும் முத்துவைக் கண்டு எரிச்சலடைகிறார். பின், "எனக்கு அவன் மேல நம்பிக்கையே இல்லை; என் மாமியார் அவனைச் சரியா வளர்க்கல, அவன் பொய் சொல்றான், அடிதடில இறங்கறான்" எனத் தனக்குப் பிடிக்காத தன் மகனைப் பற்றிப் பேசியபோது, இதைக் கேட்டு மனம் உடைகிறார் முத்து.

மனோஜ் vs முத்து

அடுத்த கட்டத்தில் மனோஜ் ஒரு வீடியோ கேமை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது முத்து வந்து கேட்க முதலில் கொடுக்க மாட்டேன் என்கிறார். அந்த நேரத்தில் விஜயாவிடம் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து உங்க பையன் எங்க வீட்டு வீடியோ கேமை எடுத்துட்டு வந்துட்டான் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதை கவனித்த மனோஜ் அதை முத்து கையில் கொடுத்து விட்டு வெளியே போய் விடுகிறார். அப்போது வீட்டுக்குள் வரும் விஜயா முத்து விளையாடி கொண்டு இருப்பதை பார்த்து முத்துதான் திருடி இருப்பான் என விஜயா நினைக்கிறார்.

உண்மையில் அந்த வீடியோ கேமை மனோஜ்தான் வைத்திருந்தான். விஜயா, முத்துவிடம் அதை வாங்கி, பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்துவிட்டு, "ஏன்டா பொய் சொல்ற? ஏன்டா இப்படி திருடனா இருக்க?" எனக் கோபமாகக் கேட்கிறார். "நான் திருடல, மனோஜ்தான் வச்சிருந்தான்" என்று முத்து சொல்ல, விஜயா அதை நம்பாமல், "உன்னைப் பாட்டி சரியா வளக்கல" என்று திட்ட, "பாட்டியைப் பத்தி தப்பா பேசாதீங்க" எனச் சொல்லி முத்து கோபப்பட, விஜயா அவரை அடித்து விடுகிறார்.

அடுத்து, பள்ளிக்குச் செல்லும் மனோஜ், முதல் ரேங்க் எடுத்த ஒரு மாணவனின் நோட்புக்கைக் கிழித்து விடுகிறான். இதனால் அந்த மாணவன் முத்துவிடம் வந்து சொல்கிறான். உடனே முத்து மனோஜை அடித்து மிரட்டுகிறார். நீ இனிமேல் இப்படி செஞ்சா அப்பாகிட்ட சொல்லிக் கொடுத்து விடுவேன் என்று சொல்லிவிட்டு போகிறார். அந்த நேரத்தில் கீழே ஹெட் மாஸ்டர் நடந்து போய்க் கொண்டிருக்க அவர் தலையில் மனோஜ் கல்லை தூக்கி போடுகிறார். அதைக் கண்டு அதிர்ந்துபோன முத்து, அங்கேயே நின்றுவிடுகிறார். ஹெட் மாஸ்டர், முத்துதான் கல்லைப் போட்டதாக நினைத்து, பள்ளிக்கு விஜயாவை வர வைத்து முத்துவைக் குறித்துப் புகார் கூறுகிறார். அப்போதும், "நான் செய்யவே இல்லை" என்று முத்து சொல்லியும், விஜயா அதை நம்பாமல் அடித்துவிடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

இந்த எபிசோட் முழுவதும், முத்துவின் துயரமான வாழ்க்கையை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்துள்ளது. "எனக்கு உங்க அம்மாவை பிடிக்காதா?" என்று வந்தவர்கள் கேட்டபோது, "எனக்கு பாட்டிதான் பிடிக்கும்" என முத்து சொன்னது, ஒரு தாயின் அரவணைப்பிற்காக அவன் எவ்வளவு ஏங்குகிறான் என்பதை வெளிப்படுத்தியது.

"நீ பாட்டி வீட்டுக்கே போயிடு" என்று விஜயா சொன்னபோது, கதவைத் தட்டி, "நான் இங்கதான் இருப்பேன்மா கதவைத் திறங்கம்மா" என முத்து கதறியது, ரசிகர்களின் கண்களைக் கலங்க வைத்தது. மனோஜ் செய்த தவறுக்கு எல்லாம், முத்துவே குற்றவாளியாகக் கருதப்படுவதும், அவர் பொய் சொன்னாலும், உண்மை சொன்னாலும் தாயின் பாசம் அவருக்குக் கிடைக்கவில்லை என்பதும், இந்தக் கதையை மேலும் உணர்வுபூர்வமாக்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+