Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: மீனாவின் மனசாட்சி கேட்ட கேள்வி! முத்துக்கு தெரியவரும் உண்மை! மனோஜ்க்கு கிடைத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் நடந்த மெகா ட்விஸ்ட்க்கு பிறகு, ரோகிணியின் உண்மையை மறைக்கும் கட்டாயத்தில் சிக்கியுள்ள மீனா, இன்று கடும் குற்றவுணர்ச்சியால் உடைந்து போயிருக்கிறார்! தன்னைத் தற்கொலை மிரட்டல் மூலம் பிளாக்மெயில் செய்த ரோகிணியின் உண்மை முகம் தெரியாமல் தவிக்கும் மீனாவின் மனப்போராட்டத்தைப் பற்றி இன்றைய எபிசோட் விரிவாக பேசியது.

Siragadikka aasai serial vijay tv

மீனாவுக்கு தெரிந்த ரகசியம்

ரோகிணி தான் கல்யாணி என்ற உண்மையும், அவர் கிரிஷின் அம்மா என்கிற ரகசியமும் மீனாவுக்குத் தெரிய வந்தது. கோபத்தில் ரோகிணிக்குப் பளார் எனக் கன்னத்தில் அறைந்த மீனா, இந்த உண்மையை எல்லோரிடமும் சொல்லப் போவதாகக் கிளம்பினார். அப்போது, "நீ உண்மையைச் சொன்னால் நான் தற்கொலை செய்துகொள்வேன்" என ரோகிணி எமோஷனல் பிளாக்மெயில் செய்து மீனாவைத் தடுத்து நிறுத்தினார்.

மீனாவின் தவிப்பு

தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்து அனைவரும் சென்னைக்குத் திரும்பிவிட்ட நிலையில், ரோகிணி பற்றிய உண்மையைச் சொல்லாமல் மூடி மறைத்ததைப் பற்றி நினைத்து மீனா கடும் நெருடலுடனே இருக்கிறார். கிச்சனுக்குச் சென்ற ரோகிணி, "தயவு செஞ்சு எதுவும் சொல்லிடாதீங்க" என்று மீண்டும் கெஞ்சுகிறார். இதைக்கேட்ட மீனா டென்ஷன் ஆகி ரோகிணியை வெளுத்து வாங்குகிறார்:

துரோகம்

"எந்த விஷயமாக இருந்தாலும் குடும்பத்துக்கிட்ட மறைக்குறது துரோகம்னு மாமா சொன்னாரு. இப்போ நானும் துரோகம் தான் பண்ணிக்கிட்டு இருக்கேன். அந்த வார்த்தையெல்லாம் உன்னை உறுத்தவில்லையா?" "என் புருஷன் என்மேல அவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காரு. இவ்ளோ பெரிய விஷயம் தெரிஞ்சும் அவர்கிட்ட சொல்லவில்லை எனத் தெரிந்தால் அவர் உடைந்து போய்விடுவார்."
"எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் தலையே வெடிச்சிரும்போல இருக்கு! என்னால இப்படி ஒரு விஷயத்தை மறைத்து வாழ முடியாது!" என்று மீனா, தன் மன உளைச்சலை வெளிப்படுத்துகிறார்.

சும்மா இதையே சொல்லி மிரட்டாத

மீனாவின் இந்த மனப்போராட்டத்தைப் பார்த்த ரோகிணி, "ஐயய்யோ, இவ இப்பவேப் போட்டுக் கொடுத்திடுவா போல!" என்று யோசித்து, மீண்டும் அதே மிரட்டலை கையில் எடுக்கிறார். "என் வாழ்க்கை மட்டுமில்ல, என் உயிரும் கிரிஷோட உயிரும் உங்க கையில தான் இருக்கு" என்று ரோகிணி சொன்னதும், கடுப்பான மீனா, "சும்மா இதையே சொல்லி மிரட்டாத!" என்று ரோகிணியை எச்சரிக்கிறார்.

ரோகிணியின் சந்தோஷம்

இந்தச் சமயத்தில் மீனாவிடம் பேசிய அவரது மனசாட்சி, "ரோகிணி தற்கொலை செய்துகொள்வேன் எனச் சொல்லி உன்னை பயமுறுத்திப் பார்க்கிறா. அவகிட்ட இருந்த பிரச்சினையை இப்போ உன்னோடப் பக்கம் திருப்பி விட்டுட்டா" என்றுச் சொன்னதால், மீனா என்ன செய்வதென்றுத் தெரியாமல் குழம்பி நிற்கிறார்.

மறுபுறம், தான் மனோஜுக்கு வாங்கிக் கொடுத்த மிகப்பெரிய ஆர்டர் விஷயமாக பில்டரை சந்திக்கச் சென்ற ரோகிணி, அவர்கள் 10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்ததால், செம குஷியில் இருக்கிறார்! மீனாவின் மன உளைச்சலுக்குச் சற்றும் கவலைப்படாமல், தன் பிசினஸ் வெற்றியில் ரோகிணி சந்தோஷப்படுவது, அடுத்து என்னப் பெரிய விபரீதம் நடக்கப் போகிறது என்பதைக் காட்டுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+