சிறகடிக்க ஆசை: உனக்கு மீனா கையால் தான் சாவு, மிரட்டிய அண்ணாமலை! முத்துவின் பெருந்தன்மை! அதிர்ச்சியில் விஜயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பரபரப்பான தொடரான 'சிறகடிக்க ஆசை', இன்றைய எபிசோடில் அண்ணன் - தம்பி சண்டைகள், மருமகள்களுக்கு இடையேயான பாசப் போராட்டம் எனப் பல உணர்ச்சிபூர்வமான காட்சிகளுடன் ஒளிபரப்பானது. முத்து தன் மீது காட்டும் அன்பை பார்த்து மீனா கண்கலங்குகிறார்‌. அதே நேரத்தில் அருண் தான் சொன்ன பொய்களை எல்லாம் சீதா நம்பிவிட்டாள் என்று சந்தோசத்தில் இருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அண்ணாமலையின் கண்டிப்பு

இன்றைய எபிசோடின் தொடக்கத்தில், அண்ணாமலை தன் மனைவி விஜயாவிடம் மூன்று மருமகள்களையும் சமமாக நடத்தும்படி அறிவுரை கூறுகிறார். "மூன்று மருமகள்களையும் ஒரே மாதிரி பாருங்க. உங்களிடம் இதைச் சொல்லிட்டேன். எல்லாருக்கும் ஒரு அளவுக்குத்தான் பொறுமை இருக்கும்" என்று அவர் உறுதியாகச் சொல்கிறார். மேலும், "மீனா ஒன்றும் கோழையோ, தைரியம் இல்லாதவளோ கிடையாது. ரதி விஷயத்தில் உன்னை எல்லோரும் அடிக்க வந்தபோது, அந்தப் பொம்பளையோட கையை முறிச்சவ" என்று மீனாவின் தைரியத்தை விஜயாவிடம் எடுத்துரைக்கிறார். "இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா, ஒரு நாள் உன் தலைமேல அம்மிக்கல்லை தூக்கிப் போட்டுட்டு போயிடுவா" என்று எச்சரித்துவிட்டுச் செல்கிறார்.

மீனாவுக்கு கசாயம் வைத்த முத்து

அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கும்போது, மீனா படுத்துக் கொண்டிருக்கிறார். பின்னர், முத்து வந்து மீனாவை எழுப்பி, தொட்டுப் பார்க்க, அவருக்குக் காய்ச்சல் இருப்பது தெரியவருகிறது. உடனே, முத்து, "ஹாஸ்பிடலுக்குப் போகலாம்" என்று சொல்கிறார். ஆனால், மீனா வேண்டாம் என்று சொல்ல, பாட்டியிடம் ஆலோசனை கேட்பதற்காக அவருக்குப் போன் செய்கிறார்.

பாட்டியின் பாசம்

முத்து போன் செய்ததும், "என்னடா இவ்வளவு நாளா போன் பண்ணல, இந்த பாட்டியை மறந்துட்டியா?" என்று பாட்டி கேட்கிறார். அதற்கு முத்து, "உன்னை எப்படி பாட்டி மறக்க முடியும்" என்று பாசமாகப் பேசுகிறார். மீனாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னதும், கசாயம் வைத்துக்கொடுக்கும்படி பாட்டி அறிவுரை சொல்கிறார். மேலும், "மீனாவுக்கு நாளைக்குச் சரியானதும் போன் பண்ணு, இல்லன்னா நானே பண்றேன். அவளைப் பத்திரமாப் பார்த்துக்கோ" என்று பாட்டி அக்கறையுடன் சொல்கிறார்.

முத்துவின் அக்கறை

பாட்டி சொன்னபடி, முத்து சமையலறைக்குச் சென்று தேவையான பொருட்களைப் போட்டு, கசாயம் வைத்து மீனாவிற்கு எடுத்து வந்து கொடுக்கிறார். முத்துவின் அக்கறையைக் கண்டு மீனா கண்கலங்குகிறார். கசாயத்தைக் குடித்துவிட்டு, மீனா அழுது கொண்டிருப்பதைப் பார்த்த முத்து, "எதுக்கு அழற? உடம்பு ரொம்ப முடியலையா? ஹாஸ்பிடலுக்குப் போகலாமா?" என்று கேட்கிறார். அதற்கு மீனா, "உங்ககிட்ட சொல்ல வேண்டாம்னுதான் நினைச்சேன், ஆனா என்னால மறைக்க முடியல" என்று அழுதுகொண்டே, சீதாவை அறைந்த விஷயத்தைச் சொல்கிறார். சீதா, "உன் புருஷன் ரவுடி, அவர்தான் இதெல்லாம் செய்திருப்பார்" என்று சொன்னதால், தான் கோபத்தில் அடித்துவிட்டதாகவும், அதனால் சீதா தன்னிடம் பேச மாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டதாகவும் மீனா சொல்கிறார்.

முத்துவின் ஆறுதல்

முத்து, "கல்யாணம் ஆன உடனே எல்லாம் மாறிடுறாங்க மீனா. சீதாவைச் சொல்லி ஒண்ணும் தப்பு இல்லை. எல்லாம் அந்த அருண் செய்யற வேலைதான். அவன் குடும்பத்தை உடைக்க சகுனி வேலை பார்த்துக்கிட்டு இருக்கான். நீ கவலைப்படாத, நான் சீதாகிட்ட பேசறேன்" என்று ஆறுதல் கூறுகிறார்.

அருணின் சந்தோஷம்

மறுநாள் காலையில், சத்யா சீதாவிடம், அக்காவிடம் பேசினாயா என்று கேட்கிறார். அதற்கு சீதா, "அவ என் புருஷனை விட்டுக்கொடுக்காமல் பேசும்போது, நான் ஏன் என் புருஷனை விட்டுக்கொடுக்கணும்?" என்று கோபமாகப் பேசுகிறார். "அவ அடிச்சதுகூட எனக்குப் பெருசா தெரியல, ஆனா அவள் விட்டுக்கொடுக்காமல் பேசும்போது நான் ஏன் இப்படி இருக்கணும்" என்று சொல்லி அழுகிறார். சீதாவின் இந்த வருத்தத்தைக் கேட்டு, அருண் மறைந்திருந்து சந்தோஷப்படுகிறார்.

பின்னர், அருண், சீதாவிடம் ஒன்றும் தெரியாதது போல் பேசி, "முத்து குடிக்கிறவர், கோபப்படுறவர், ரவுடி. என்னை ஆளை வச்சு அடிச்சிருக்காரு. இருந்தாலும் அவர் நல்லா இருக்கணும்னுதான் நானும் நினைக்கிறேன்" என்று பொய்யாகப் பேசுகிறார். அதற்கு சீதா, "நீங்க இவ்வளவு மெச்சூர்டா இருக்கீங்க" என்று சொல்கிறார்.

இதனிடையே, மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் ஷோரூமில் வேலை பார்ப்பதற்காக வர, ராஜாவும் ராணியும் அங்கு வருகிறார்கள். அவர்களைப் பார்த்ததும் மனோஜ் அதிர்ச்சி அடைகிறார் இப்படியாக இன்று எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+